(Reading time: 26 - 52 minutes)

"ப்போ நான் அவ ரூம்க்கு வரும் போது கதவு சாத்தி இருந்தது... நாங்க அதை சாத்தவே இல்ல... ஆனா எப்படின்னு தெரியலே" என்றாள் சித்ரா.

"நல்லா தெரியுமா கதவு திறந்து தான் இருந்ததா?" - அமுதா

"அக்கா நாங்க உங்களுக்கு கதவு திறக்கும் முன் நாங்க பார்த்தோம் இந்த ரூமில் வினிதா இருந்தாள்.. கதவும் திறந்து தான் இருந்தது... அதன் பின்னர் தான் நாங்க உங்களுக்கு கதவு திறந்து விட்டோம்" - அனிதா

"நீங்க அவளை எழுப்பி விட சொன்னப்போ ரூம்மை பார்த்தா கதவு சாத்தி இருக்கு, இவளும் காணோம்" - சித்ரா

முதல் நாள் போலவே அன்றைய இரவும் அதே போல் கடந்தது.

நாங்காம் நாள்

மறுநாள் விடியலில் வினிதா அவளின் அறையில் இருந்தாள்!!!

தொடர்ந்து வந்த நான்கு நாட்களும் பகல் முழுவதும் தூங்குபவள் இரவில் மட்டும் மாயமாக காணமல் போவாள்.. அவள் எப்படி மாயமாகி எப்படி திரும்ப வருகிறாள் என்பதை தெரியாமல் தவித்தனர் மூவரும்..

இதற்கு இடையில் வினிதாவின் அம்மா சித்ராவின் தொலைபேசியில் அழைக்க, தயக்கத்துடனே எடுத்தாள்.

வினிதாவை பற்றி கேட்டால் எதை சொல்லி சமாளிப்பது என முன்பே அவளும் அனிதாவும் பேசி வைத்ததை சொல்ல வேண்டும் நினைத்து எடுக்க,

"ஹாலோ ஆன்டி, எப்படி இருக்கீங்க?" என்றாள் இயல்பான குரலை வரவழைத்து கொண்டே.

“நீ ஏன் வினிதாவுடன் வரல?” அவரின் முதல் கேள்வியிலேயே அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை!  ஒரு வேளை, அவர் தவறாக சொல்லி இருப்பாரோ என்று நினைத்தவள்,

“ஹான்.. என்ன ஆண்டி கேட்டிங்க?” என்றாள்.

“நீயும் ஏன் வினிதாவுடன் வரல, அவ சொன்னா உனக்கு லீவ் கிடைக்கலன்னு” என்று அவர் மீண்டும் அதையே சொல்ல, அதிர்ச்சியில் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

கட்டிலில் அமைதியாக உறக்கும் வினிதாவை பார்த்தபடியே “அவ உங்களுக்கு எப்போ ஆண்ட்டி சொன்னா?” என்றாள் சித்ரா. அவர்சொல்வது அவளுக்கு புரியவே இல்லை.

“என்னம்மா நைட் ஷிஃப்ட் வேலையா…? இப்போ தான் எழுந்தியா? சரி நான் வினிதாவிடம் உங்க மூவருக்கும் சேர்த்து பலகரங்கள் கொடுத்து இருக்கேன் மறக்காமல் எடுத்து சாப்பிடுங்க… என்ன சரியா?” அவர் சொல்ல

“ஆண்டி அவகிட்ட எப்போ கொடுத்திங்க?”  என்ற சித்ராவிற்கு ஒன்னுமே புரியவில்லை.

“நாலு நாட்களா அவ இங்க தானம்மா இருந்தா…. வீட்டில் விசேஷம் எல்லாம் நல்ல படிய முடிந்து வினிதா இன்னைக்கு காலையில் தான் இங்கு இருந்து கிளம்பினாள்.. அவ வந்ததுமே எனக்கு கால் பண்ணா சொல்லும்மா”

“ஹான்… சரி” என சொல்லி போனை கட் பண்ணினாள் சித்ரா.

வினிதா அவளின் வீட்டுக்கு சென்றாள் என்றால் அப்போ இங்கு இருப்பது யார்? எப்படி ஒரே நேரத்தில் ஒருவர் இரு இடங்களில் இருக்க முடியும்? மேலும் யோசிக்க முடியாமல் அவளுக்கு தலை வலித்தது.

கட்டிலிலும் அமர முடியாமல், அங்கே படுத்து இருப்பவளின் முகத்தையும் பார்க்க முடியாமல், பயத்தில் அவளின் உடல் நடுங்க, அவளின் கையில் இருந்த செல் போனில் இருந்து வந்த சத்ததில் அவளையும் அறியாமல் அலறி, கையில் இருந்ததையும் கீழே போட்டு விட்டாள் சித்ரா.

அவளின் அலறல் சத்தம் கேட்டு அனிதா வந்து பார்க்கையில் சித்ரா நிற்க முடியாமல் தள்ளாட, அவளின் முகம் பயத்தில் வெளுத்து இருந்தது. அனிதா அவளின் கையை பிடிக்க மீண்டும் கத்த இருந்தவளை பார்த்து

"சித்து நான் தான்... என்னடி அச்சு? ஏன் இந்த கத்து கத்தற?" என்றாள் அனிதா.

"அனி.... அனி..த்... தா... அ... அது....  பே....பே....பே....ய்...." வினிதாவை சுட்டி காட்டி சொல்ல

"என்னடி சொல்லறே... ஒன்னும் புரியலே" என்றாள் இன்னொருத்தி.

"அது பேய், வினி பேய்" அதையே மீண்டும் சொல்ல

"சித்ரா ரிலாக்ஸ்... முதலில் வா கட்டியில் உட்கார்...  உனக்கு பதற்றம் குறைந்ததும் என்னன்னு தெளிவா சொல்லு.. அவளின் கையை பிடித்து கட்டிலுக்கு செல்ல, சித்ரா அவளின் கையை உதறி அந்த அறையை விட்டு வேகமாய் ஓடினாள்.

அனிதாவிற்கு சித்ராவின் செய்கை பயத்தை கொடுத்தது.... அவள் அங்கு இருந்து நகரும் போது கீழே விழுந்து கிடந்த செல் போன் அவளின் கண்ணில் பட்டது... அதை எடுத்துக் கொண்டு சித்ராவை தேடி சென்றவளின் கண்ணில் வீட்டின் வாசல் கதவு திறந்து இருப்பது தெரிந்தது..

வீட்டை பூட்டிவிட்டு அமுதாவின் வீட்டை நோக்கி நடந்தவளின் பின்னால் யாரோ வருவது போல் இருக்க, திரும்பி பார்க்க பயந்து ஓட்டம் எடுத்தாள்...

வேகமாக வீட்டினுள் ஓடி வந்தவளை பார்த்து பயந்தனர் அமுதாவும் அமுதனும்...

"என்ன.. நீயும் ஏன் இப்படி ஓடி வர” – அமுதன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.