(Reading time: 26 - 52 minutes)

நாம இப்போ அங்க போயி என்ன பண்ண போறோம்... நீ உன் திங்க்ஸ் பேக் பண்ணும் வேலையை பாரு..” அசால்ட்டாக சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்று விட்டாள்.

“சித்து நாம அங்க போயிட்டு உடனே திரும்பி விடலாம்.. ப்ளீஸ்”

“இல்ல.. நான் வரல வினிதா..” என்றவள் சொல்லி முடிக்கும் முன்பே

“நாம் போறோம் நீயும் என்னுடன் வர..” என கோவமாக சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்று விட்டாள்வினிதா.

அவளின் குரலை கேட்டு சற்று ஆடித்தான் போனாள் சித்ரா.. ஏனெனில் அது அவளின் குரலே கிடையாது... மகுடிக்கு கட்டு பட்ட பாம்பை போல் சரியென தலை ஆட்டினாள் சித்ரா.

அடுத்த 10 நிமிடங்களில் அமுதாவின் வீட்டில் இருந்தனர் இருவரும்.

அமுதன் அவர்கள் அனைவரையும் தனியாக அனுப்ப மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விட,

இறுதியாக அமுதனையும் உடன் வரும்படி கேட்ட பின்னரே அவன் சரி சொன்னான். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் அனைவரும் மகேன் சொன்ன மருத்தவமனையில் இருந்தனர்.

சித்ரா போகும் வழி முழுக்க அமுதாவிடம் பேச முயசித்தாள்.. ஆனால் அது முடியாமல் போனது. வினிதா அவர்கள் இருவரையும் பேச விடாமல் பார்த்துக் கொண்டாள்.

ICUக்கு போகும் வழியில் அவர்கள் மகேனையும் ரூபனையும் பார்த்துவிட்டனர். மற்றவர்கள் மகேனிடம் பேச செல்ல வினிதா மட்டும் ஆதி இருத்த வாட்டை நோக்கி நடந்தாள்.

ஆதி இருக்கும் அறைக்கு சென்றவள் அங்கு கண்ணை முடி உறங்கும் ஆதியை பார்த்தாள்.

தலை மொட்டை அடித்து வலது புறத்தில் தையில் போட்டு இருப்பது தெரிந்தது, உடல் மெலிந்து காணப்பட்டது, தொண்டையில் சிறிய ஓட்டை போட்டு அதில் டியூப் போடப்பட்டு இருந்தது... இடது கையில் மூன்று விரல்கள் இல்லாமல் இருப்பதை கண்டவளுக்கு கண்கள் கலங்கியது...

ஏதோ சொல்ல வாய் திறந்தவளுக்கு அமுதாவும் சித்ராவும் வரும் அரவம் கேட்க, கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்... அவர்கள் வந்த சற்று நேரத்தில் அமுதனும் மகேனும் அந்த அறைக்குள் வந்தனர்...

அமுதாவுக்கும் அமுதனுக்கும் ஆதியின் நிலை கண்டு அவர்களின் மனம் கணத்துப் போனது..

ஆதி, அவர்களிடம் அவ்வளவாக பேசா விடினிலும், அவ்வப்போது ஒரு சிறிய சிரிப்பும் தலை அசைப்பும் இருக்கும்... ஏனோ சொல்ல முடியாத அளவிற்கு அமுதாவின் மனம் பாரமானது.

சித்ராவின் கண்கள் வினிதாவையும் ஆதியும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தன. அவள் வினிதாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை மனதில் குறித்துக் கொண்டாள். இதை மகேனின் கண்களுக்கும் தப்பவில்லை.

சற்று நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே செல்ல வினிதா மட்டும் இன்னும் கட்டிலுக்கு அருகே நின்றுக் கொண்டு இருந்தாள். அவள் அருகே வந்த சித்ரா

“உனக்கு இவரை தெரியுமா வினி?” என்றாள். கட்டிலில் சலனம் இல்லாமல் படுத்து இருந்தவரை பார்த்துக் கொண்டே இல்லை என தலை அசைத்தாள் வினிதா.

“சரி அப்பறம் ஏன்டி அசையாமல் இங்கயே நிற்குற? என்னையும்  மிரட்டி இழுத்திட்டு வந்து.. ம்ம்ம் சரி வா அவங்க நமக்காக காத்துட்டு இருக்காங்க.” 

வினிதாவுக்கு திரும்பி செல்ல விருப்பம் இல்லை.. ஆனால் வெளியே சென்றால் தான் ஆதிக்கு என்ன நடந்தது  என தெரிய வரும்... ஆகையால் அவளும் அவர்களின் பின்னால் சென்றாள்.

அவள் செல்லும் முன்பே அவர்கள் ஏதோ சொல்ல அதற்கு மகேன்

“இங்கே பேச வேண்டாம், கேண்டினுக்கு போகலாம் வாங்க” என்றான்.

அவர்கள் அனைவரும் தேனீர் வாங்கி அமரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை

“கன்பார்ம்மா தெரியுமா? அது நீங்க சொன்ன ஆதி தானா??” - மகேன்

“கன்பார்ம் மகேன்... ஆனா அவர் எப்படி இங்கே...? போலீஸ் ஏன்  இந்த ஆக்சிடண்ட் பற்றி எதுவுமே கேட்கல?” - அமுதன்

“ஆதி ஆக்சிடண்ட் சம்பந்தமா போலீஸ் ஸ்டேஷன்ல எந்த கம்ப்ளைன்ட்டும் பதிவு ஆகல சார்” - மகேன்

“என்ன மகேன் ஏன்?”– அமுதா

“தெரியல அக்கா.. இதுவரைக்கும் யாருக்கும் தெரியல.. இன்க்லூடிங் ஆதியோட ப்ரண்ட்ஸ்.. யாருக்கும் என்ன நடந்ததுன்னு தெரியல...”

“பொய் சொல்றாங்க” என்று உடனே வினிதாவிடம் இருந்து பதில் வந்தது. அவளின் முகத்திலும் குரலிலும் தெரிந்த கோபத்தை கண்டு திகைத்தனர் அனைவரும்.

“எனக்கு அப்படி தோணல வினிதா. நாங்களும் என் ப்ரண்டும் ஆதி வேலை செஞ்ச இடத்துக்கு போனோம்.. அங்கே ஆதியுடன் வேலை செய்தவர்களிடம் கேட்டபோது எல்லாரும் ஒரே மாதிரியான பதில் தான் சொன்னாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.