(Reading time: 26 - 52 minutes)

ய்… என்னை ஏண்டி கிள்ளுற?... தேடும் கண் பார்வை தவிக்கன்னு பாட்டு பாடாத குறையா தேடினல்ல அவனை… இப்போ அவன் வந்து நிக்குறான்… நீ எனக்கென்னன்னு என் பின்னாடி ஒளியுற… இல்ல தெரியாமத்தான் கேட்குறேன் நீ ஒளிஞ்சு விளையாடுறதுக்கு நான் என்ன தூணா?...”

கேள்வி கேட்ட சதியின் தலையில் லேசாக கொட்டிய இஷான்,

“வாலு… வாலு… போ… அங்க ஒரு அழகான பூ இருக்கு… போய் அதை பார்த்து ரசி…”

சதியை விரட்டாத குறையாக அவன் சொன்னதும்,

“இதுக்கும் மேல நேரடியா யாரும் போக சொல்ல முடியாது… நான் அங்க போய் பூவை ரசிக்குற நேரத்துல, நீ இந்த தைஜூ பூவை ரசிக்கப்போறீயாடா அண்ணா?... அப்பாகிட்ட சொல்லவா?...” என்றாள் அவளும் மிரட்டியவண்ணம்…

“குட்டிச்சாத்தான்னு உன்னை கூப்பிடுறதுல தப்பே இல்ல தெரியுமா?... நான் எனக்கு சொந்தமான பூவை ரசிக்க, உன்னை போக சொல்லணும்னு அவசியமே இல்ல… நீ இங்க இருந்தாலும் நான் ரசிப்பேன்… இல்லன்னாலும் ரசிப்பேன்…” என்றான் இஷான், சதியின் காதை பிடித்து திருகியபடி…

“அப்போ எதுக்கு என்னை விரட்டுற இவ்வளவு அவசரமா?...”

“உன்னை விரட்டலடா… நிஜமாவே உனக்குப் பிடிச்ச விஷயம் ஒன்னு அங்க இருக்கு… நீ போனா பார்க்கலாம்… அதனால தான் சொன்னேன்…”

“சரிடா அண்ணா அழாத… நான் போறேன்… நீங்க இரண்டு பேரும் பேசிட்டிருங்க… சரியா?...” என்றவளை போக விடாது கைப்பிடித்து தடுத்தாள் தைஜூ…

“என்னடி… என் கையை எதுக்குப் பிடிக்குற?...”

“சதி… நானும் உன்னோட வரேனே... ப்ளீஸ்…”

“ஏய்… லூசு… இவ்வளவு நேரம் அண்ணனைக் காணோம்னு தேடினல்ல… இப்போ பார்த்ததும் பின்வாங்குற?...”

“இல்ல… சதி… நான் இவர்கிட்ட பேசிட்டிருந்தா, பெரியவங்க எதும் நினைச்சுக்க மாட்டாங்களா?...”

“அட என் பைத்தியமே… அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க… நிச்சயம் ஆகிட்டு உங்க இரண்டு பேருக்கும்… அது உனக்கு நினைவிருக்கா இல்லையா?... நீ இப்பவே அவனோட பாதி பொண்டாட்டி ஆகிட்ட… புரியுதா?...”

சதி கேட்க மௌனமாக இருந்தாள் தைஜூ…

“சரி தைஜூ, நான் கிளம்புறேன்… நீங்க பேசிட்டிருங்க… எனக்கு வேலை இருக்கு…”

சட்டென அங்கிருந்து முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாது கிளம்பினான் இஷான்…

“அண்ணா நில்லு…”

சதியின் குரல் கேட்டும் கேட்காதவன் போல் அவன் அந்த மலையடிவாரப்பகுதியின் பின்னே சென்று விட்டான்…

“போதுமா?... உனக்கு இப்போ திருப்தியா?...”

“………………”

“அண்ணா போறான் பாரு… நீ கூப்பிட்டிருந்தா அவன் நின்னுருப்பான் தான?...”

“………………”

“போ தைஜூ… ஆனாலும் என் அண்ணன் ரொம்ப பாவம்… உங்கிட்ட ஆசையா பேச வந்தான்… நீ இப்படி பண்ணிட்டியே…”

சற்றே கோபமாக முகத்தினை தூக்கி வைத்துக்கொண்டாள் சதி…

சதியின் முகத்தினை தன் கைகளில் தாங்கியவள்,

“நீ சந்தோஷமா இருக்குறீயா சொல்லு?...”

சதியின் விழிகளைப் பார்த்து கேட்க, சதி எதுவும் பேசவில்லை…

“சொல்லு சதி… ஜெய் அண்ணன் உங்கிட்ட தன்னோட காதலை சொல்லிட்டாரா?...”

சதியின் பார்வை கூர்மையாக தைஜூவின் மேல் விழ,

“என்ன பார்க்குற?... ஜெய் அண்ணன் உங்கிட்ட தன்னோட காதலை சொல்லட்டும்… அப்புறமா நானும் உன் அண்ணன்கிட்ட சிரிச்சு பேசுறேன்…”

“முட்டாளா நீ?... அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?...”

சதி சட்டென தைஜூவின் கைகளைப் பிடித்து கீழிறக்கி கூற,

“ஏன் இல்லை?... நிறைய இருக்கு… எனக்கும் இஷானுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு… ஆனா உனக்கும் ஜெய் அண்ணாக்கும் ஒரு சின்ன சந்தோஷமான நிகழ்வு கூட நடக்கலை… இப்படி இருக்குற நேரத்துல என்னால இஷான் கூட எப்படி நேரத்தைப் போக்க முடியும்?...”

தைஜூ நிதானமாக கேட்க, சதியின் கண்கள் கலங்கியது…

“லூசு மாதிரி செய்யாத தைஜூ… யார் சொன்னா எனக்கும் உன் அண்ணாக்கும் சின்ன சந்தோஷமான நிகழ்வு கூட நடக்கலைன்னு?... அவரைப் பார்க்குற ஒவ்வொரு முறையும் நான் சந்தோஷத்துல நனையுறேன்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா?... ஆனா அதுதான் உண்மை… அதுமட்டும் இல்ல… அவரும் என்னை விரும்புறார்… என்னைப் பார்க்குற ஒவ்வொரு நொடியும் அவர் கண்ணுல நான் பார்த்துறக்கூடாதுன்னு மறைச்சி வைச்சிருக்குற காதலும் எனக்கு தெரியும்…”

அவளின் வாய்மொழி கேட்டும் ஏதோ சொல்ல வாயெடுத்த தைஜூவை தடுத்தாள் சதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.