(Reading time: 26 - 52 minutes)

ன்னருகில் ஆள் வருவதை உணர்ந்து கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் பார்வையில் தென்பட்டான் ஜெய்… அதே இடத்தில் யாதொரு மாற்றமும் இல்லாது அவன் நிற்க, அவள் இதழ்களிலோ விரக்தி புன்னகை தவழ்ந்தது…

“ஹே…. மேல போகலாம்டா… மேல நிறைய பூ பூத்திருக்காம்…”

“அவ்வளவுதூரம் எப்படி போறது… நான் வரலை…”

“ப்ளீஸ்… ப்ளீஸ்… கூட்டிட்டு போடா…”

“நீ இப்போ வரீயா… இல்ல அம்மாகிட்ட சொல்லிகொடுக்கட்டா?...”

“சரி சரி… வரேன்… போட்டுகொடுத்திடாத… வா போகலாம்…”

இரண்டு சிறுவர்களும் அந்த பூவையே திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றதும், அங்கே வந்தான் இஷான் தைஜூவுடன்…

“சதி… உனக்குப் பிடிச்ச பூவை பார்த்துட்டியா?...”

“ம்ம்…”

“என்னடா என்னாச்சு?...”

தங்கையின் ம்ம் இஷானை யோசிக்க வைக்க, ஜெய்யைப் பார்த்தான் அவன்… அவனோ எதுவுமே தனக்கு தெரியாது என்பது போல், சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்…

“சதி… என்னம்மா?... என்னாச்சுன்னு சொன்னா தான தெரியும்?...”

“அண்ணா இந்த மலை மேல நிறைய குறிஞ்சிப்பூ இருக்காம்… நான் பார்க்கணும்… ப்ளீஸ் கூட்டிட்டு போயேன்…”

“இந்த மலை மேலயா?... வேண்டாம்டா…”

“ப்ளீஸ்ண்ணா… கூட்டிட்டு போயேன்….”

“அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் கேளு… சம்மதிச்சாங்கன்னா நான் கூட்டிட்டு போறேன்…”

“என்ன இஷான் என்ன சம்மதம் சொல்லணும் நான்?...”

கேள்வி கேட்டபடி பிரசுதி வர, அவரைத்தொடர்ந்து வந்தனர் அனைவரும்…

“அம்மா, சதி இந்த மலை உச்சிக்கு போகணும்னு சொல்லுறா…”

இஷான் தயங்கியபடி கூற,

“ஏண்டி உனக்கென்ன அறிவு கெட்டுப்போச்சா?.. எவ்வளவு பெரிய மலைன்னு பார்த்தல்ல… அந்த இடத்துக்கு போய் என்ன செய்யப் போற நீ?...” என அதட்டினார் பிரசுதி…

“அம்மா குறிஞ்சிப்பூ அங்க நிறைய இருக்கும்மா… அதான்…”

சதி கெஞ்ச, பிரசுதி முடியவே முடியாதென்றார்…

“தாத்தா தாத்தா… நீங்களாச்சும் அம்மாகிட்ட சொல்லுங்க தாத்தா… ப்ளீஸ்… ஓரே ஒரு தடவை நான் பார்த்துட்டு வந்துடுவேன்…”

சதி பிரம்மரிஷியிடம் வேண்ட, அவரோ சற்று நேரம் எதுவும் பேசவில்லை… அமைதியாக ஜெய்யின் முகத்தினைப் பார்த்தார்…

யாரும் எதுவும் சொல்லாமல் போக, சதியின் முகம் வாடிப்போனது…

அவள் முகவாடலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஜெய் அமைதியாக…

“சதி நீ மேல போய் பார்த்துட்டு வரலாம்……” என தட்சேஷ்வர் சொன்னதும்,

“அப்பா… தேங்க்ஸ்ப்பா………….” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் அவரை அவள்…

“ஏங்க அவதான் அறிவில்லாம பேசுறான்னா, நீங்களும் போயிட்டுவான்னு சொல்லுறீங்க?...”

பிரசுதி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, தட்சேஷ்வர் கையமர்த்தி தடுத்தார்…

“என் பொண்ணு ஆசைப்படுறா… பார்த்துட்டு வரட்டும்… இஷான் நீ கூட போ… ஆனா சில கண்டிஷன்ஸ் இருக்கு… அவகூடவே நீ இருக்கணும்… மலை மேல ஏறும்போது பார்த்து ஜாக்கிரதையா கூட்டிட்டு போகணும்… அவளே ஆசப்பட்டு கேட்டாலும் பள்ளத்தாக்கு பக்கம், அவளை நீ போக விடக்கூடாது…. சரியா?...”

அவர் ஆணையிடுவது போல் சொன்னதும், சரி என்றான் இஷானும்…

அந்த நேரம் யாருக்கும் தெரியாமல், அங்கிருந்து நழுவி, இஷானுக்கும் சதிக்கும் முன்னால் மலைக்கு செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தினார் பிரம்மரிஷி…

“ஜெய்… நீ இஷானுக்கு துணையா போயிட்டு வா…”

அவரே சொல்லாவிட்டாலும் அவன் அங்குதான் சென்றிருப்பான்… அவளை அந்த மலை உச்சிக்கு செல்ல விட்டுவிட்டு கீழே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க நிச்சயம் அவனால் முடிந்திடாது தான்….

அது தாத்தாவிற்கும் புரிந்து போனதோ என்னவோ, அவரே அவனை அங்கு போய் வர சொன்னார்…

மறுபேச்சு பேசாமல், “சரி தாத்தா…” என்றவனின் மேல் பார்வையை ஓடவிட்டார் தட்சேஷ்வர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.