(Reading time: 26 - 52 minutes)

மெய்மறந்து ரசித்து அவள் அதனைப் பார்த்து குதூகலிக்க, இஷானும் அப்படியே சுற்றிப்பார்த்துக்கொண்டே சற்று தள்ளிச் சென்றான்…

அப்போது, கைகளை தேய்ப்பதும், கன்னங்களில் வைப்பதுமாய் இருந்த சதியை பார்த்த ஜெய் தனது ஜாக்கெட் கோட்டை கழட்டி அவளிடம் நீட்டினான்…

ஆச்சரிய பார்வை ஒன்று அவள் பார்க்க,

“பிடி… போட்டுக்கோ… குளிராது…” என்றான் அவன்…

“எனக்கு வேண்டாம்…”

“பிடி…”

“அதான் வேண்டாம்னு சொல்லுறேன்ல…”

“அதான் எதுக்குன்னு கேட்குறேன்?...”

“கண்டிப்பா சொல்லணுமா?...”

“ஆமா…”

“எனக்கு கொடுத்திட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?...”

“அதை நான் பார்த்துக்குறேன்… நீ இதை பிடி…”

“சரி வாங்கிக்கிறேன்… ஆனா ஒரு கண்டிஷன்…”

“என்ன?...” என்பது போல் அவனும் பார்க்க,

“சதி இந்தா இதை வாங்கிக்கோன்னு நீங்க சிரிச்சிட்டே கொடுக்கணும்…” என்றாள் அவளும்…

“அதெல்லாம் முடியாது… பிடி, நேரத்தை வீணாக்காம…”

“அப்ப எனக்கும் வேண்டாம்… குளிருல எனக்கு என்ன ஆனாலும்………..…”

அவள் சொல்லி முடிக்கும் முன், அவளருகில் வந்தவன், அவளை முறைத்துப் பார்த்தான்…

“இதுதான் உங்க ஊருல சிரிப்பா?...”

கேள்வி கேட்டுவிட்டு அவள் முகம் திருப்பிக்கொள்ள,

அவனுக்கு அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை…

சிறுபிள்ளையாய் அவள் பிடிவாதம் ஒருபுறம், வாடிய மலராய் அவள் நிற்கும் கோலம் மறுபுறம்… இரண்டிற்கும் இடையில் சிக்கி தவித்தான் அவன் மிகவும்…

“சதி… இதை வாங்கிக்கோ… இந்தா…”

குரல் கேட்டு அவள் நிமிர்ந்து பார்க்க, எதிரே புன்னகையுடன் அவளது ஜெய் நிற்க, அவளுக்கு சந்தோஷமா, உற்சாகமா எதுவென்று பிரித்து சொல்லிட தெரியவில்லை…

முகம் எங்கும் மலர்ந்து விகசிக்க, அவள் அவனிடமிருந்து அதை வாங்கி அணிந்து கொண்டாள்…

“சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்குறீங்க…”

சொல்லிக்கொண்டே அவனை அவள் நெருங்க, அவள் தள்ளிச் சென்றான்…

“உங்களை தள்ளிவிட்டுட மாட்டேன்… ரொம்ப பண்ணாதீங்க… சட்டையில ஏதோ சின்ன பூச்சி இருக்கு…”

அவள் சொன்னதும் அவன் அதனை காதிலேயே வாங்காது வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்க, அவள் பார்வையும் அங்கே சுழன்று நோட்டமிட, அவர்கள் மூவரையும் தவிர்த்து வெறும் நாலைந்து பேர் மட்டுமே இருந்தனர்… அந்த நாலைந்து பேரும் வெளிநாட்டவர்களாக இருக்க, இஷான், பூக்களின் மறுபக்கமும் நிற்பது கண்ணில் பட்டது…

பூவைச் சுற்றிப்பார்த்துக்கொண்டே இருந்த ஜெய், அவள் அந்த பூக்களின் ஒருபக்கம் செல்வதை கவனித்து அங்கே சென்றான்…

“வாவ்…… எவ்வளவு அழகா இருக்குல்ல… செம க்யூட்…” என்றபடி அவள் குதூகலிக்க, ஜெய் அதனை ரசித்துக்கொண்டிருந்தான்…

அவனின் ரசனையான முகம் அவளது பார்வைக்கு அகப்பட, அவள் அவனின் அருகே வந்தாள்… அவன் தள்ளிச் செல்ல எண்ணி, பள்ளத்தின் நுனிப்பகுதியில் கால் வைக்க, அந்த நேரம் எங்கிருந்து வந்தான் என்றே தெரியாது ஒருவன் ஜெய்யின் மேல் சிரித்துக்கொண்டே வந்து மோதி இடித்து தள்ள, ஜெய் நிலை தடுமாறி கீழே விழப்போக,

“ம்ருத்யூ…………………………………..” என கத்திக்கொண்டே அவனின் சட்டையைப்பிடித்து தடுக்க முயற்சித்தாள் சதி…

சத்தம் கேட்டு அவள் புறம் திரும்பி பார்த்த இஷான் திகைத்தான்…

பூப்போன்ற மென்மையான கரம் ஜெய்யின் வலிமையான தேகத்தை தடுத்து நிறுத்த முடியாது அவனின் பக்கமே சரிய…

தன் நண்பனும், தன் தங்கையும் ஒரு சேர, மலையின் உச்சியில் இருந்து கீழே விழப்போவதைக் கண்டு ஓடிவந்தான் இஷான் வேகமாய்…

“ஜெய்………………” என கூக்குரலோடு அவன் வருவதற்கும், ஜெய்யும் சதியும் மலையிலிருந்து உருண்டோடுவதற்கும் சரியாக இருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.