(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

உங்க மாமா ஒருதடவெ நான் நம்ம ஊர்லெ இருக்கும் போது வந்தார். இருந்த ஒருவாரம் ஊரெல்லாம் சுத்தி ஜல்சா பண்ணி பர்ஸ்லே இருந்த தெல்லாம் செலவழிச் சிட்டார். பாக்கப்போனா திரும்பிப் போற்துக்கு ரயில் டிக்கட்டுக்குப் பணமில்லெ. அப்பொ என்கிட்டெயும் ஒண்ணு மில்லெ. அவரு ரயில் டிக்கட்டுக்காக அம்மா கிட்டேதான்னாலும் எப்படிக் கேப்பேன்? அவங்கவங்க வாழ்க்கெயெ அவங்கவங்க வாழ்ந்திட் டிருக்கிறப்பொ, அவங்கவங்க மரியாதெயெ அவங்கவங்க காப்பாத்திக்கணுமே தவர எல்லா விஷயத்தலேயும் அம்மா மகள் எங்கற சம்பந்தத்தெப் பாக்க முடியுமா? யாரெயும் கேக்கற்துக்கு எனக்கு மனசு வரல்லே. என் கழுத்திலெ தாலியோடகூட நோம்பிருந்து கட்டிக்கிட்ட வரலட்சுமி பதக்கம் இருந்தா அதெக் கழட்டிக் கொடுத்துட்டேன். அது எங்கெயோ விழுந்துட்டு துன்னு நடிச்சேன். வீட்லெ அந்த மாதிரி அசிங்கமான நிலெ ஏன் வரணும்? நான் மனெவியாகவே இருக்கலாம். அந்தமாதிரியான ரொம்ப சின்ன விஷயத்துக்கு வெக்கத்தெவிட்டு என்னெக் கேக்கவேண்டிய நிலெயெ ஏன் கொண்டு வந்துக்கணும்? அந்த ஆண்மெ யெல்லாம் எங்கே போயிட்டுது? இந்தக் குடும்பக் கதையெ இப்படி எத்தனெ மணிநேரம் சொன்னா கேட்டுக்கிட்டே உக்காந்திருப்பே?" என்றாள் சட்டென்று பேச்சை மாற்றிச் சிரித்துக்கொண்டே.

நான் பெருமூச்சு விட்டுச் சொன்னேன். "சொல்லுபானு! உன் மனசுலெ இருக்கும் வேதனெ யெல்லாம்என்கிட்டெ சொல்லு. நான் உனக்கு எந்த விதத்திலும்உதவி செய்ய முடியாமல் போனாலும் குறெஞ்சது உன்வேதனையெ நானும் பங்கிட்டுக்கறேன். இவ்வளவுதூரம் வந்த பிறகு எதெயும் மறெச்சு வெக்காதே."

"அண்ணா! எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கப்போவுதோன்னு பயமா இருக்குது. ஒவ்வொரு பொம்பளெயும் புருஷன்கிட்டேயிருந்து எந்த அன்பெ அனுபவிக்கிறாளோ அதுதான் எனக்கு இல்லெ. என்மேலெ அவருக்குக் கொஞ்சம் கூட அன்பு இல்லெ. பாபு வயத்தலெஇருக்கறப்பொ உடம்பு சரியில்லாமெ வேல செய்றதுக்குஒரு பெண்ணெ வெச்சேன். கோவிச்சிக்கிட்டார். 'உன்அந்தப்புர வேலெங்களெச் செய்யற்துக்கு சேவகிங்க வேறவேணுமா? கர்ப்பமா இருக்கறவங்க சொந்தமா வேலசெஞ்சிகிட்டா உடம்புக்கு நல்லதுன்னு டாக்டருங்கசொல்றதில்லே? சாப்டுட்டு உக்காந்திருக்கற்து தவரஉத்தியோகம் ஏதாவது பாக்கறியா என்ன? மகாராணிமாதிரி உக்கார்ந் திருக்கற்துக்கு உங்கப்பன் வீட்லேஇருந்து பணம் வந்து ஒண்ணும் குவியலே'ன்னுசொன்னார். உண்மெதான்! வேலெக்காரிக்குக் குடுக்கறஒண்ணரை ரூபா ஒரு நாளக்கு சிகரெட்டுக்கு வராது?பொறந்த வீட்லே இருந்து சொத்து கித்து கொண்டு வராதவளுக்கு வேலெக்காரி எப்படி வருவா? அன்னக்கி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.