(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

மறுநாள்ளேயிருந்து அந்தப் பொண்ணெ வரவாணாம்னுசொல்லிட்டேன். மாசம் ஆக ஆக எவ்வளவு சின்னவெலெ செஞ்சாலும் கஷ்டமா இருக்கும். நாலுதடவெகிணத்துக்கும் வீட்டுக்கும் திரியற்துக்குள்ளே காலெப் புடுங்கும். பாத்தரம் விளக்கிட்டிருந்தா கை மரத்துப்போவும். ஒருதடவ வெக்கத்தெவிட்டு, 'கட்டெயிலெசமெயல் பண்ணா புகெ புடிச்சி பாத்தரங்க கழுவற்துக்குக்கஷ்டமா இருக்குது. இந்த மாசம் அடுப்புக் கரி வாங்கக்கூடாதா'ன்னு கேட்டேன்.

எவ்வளவு அசட்டுக் கோரிக்கை! அவசிய மில்லாதது!முகத்தெச் சுளிச்சிக்கிட்டார். 'காலணாவுலே ஆறவேலெக்கி ஓரணா செலவழிக்கிறேங்கிறயா. கரிக்குப்பதிலா கட்டெ ரெண்டு மடங்கு வருது. முதல்லெ பணம்னாஏதோ மரத்தலெ காய்க்குதுன்னு நினெச்சிக்கிட்டிருக்கே?எனக்குத் தடுக்க முடியாத அளவு கோவம் வந்தது.'ஆமாம், என் சௌகரியம் பத்தி பேச்சு வந்தா இந்தயோசனெங் கெல்லாம்! ஜல்சா பண்றதுக்கு, தமாஷாபொழுது போக்கற்துக்கு, சீட்டாட்டத்துக்கு, சிகரெட்டுக்கு இந்தச் சிக்கனத்தெப் பத்திய அறிவெல்லாம்,பணத்தின் மதிப்பெல்லாம் அவசிய மில்லே இல்லியா.ஞாபகத்துக்கே வராது. கர்ப்பமா இருக்கறவங்க சொந்தமா வேலெ செஞ்சிக்கிட்டா உடம்புக்கு நல்லதுன்னுடாக்டருங்க சொல்றாங்களே தவிர, சிகரெட் புடிச்சாஇதயம் கெட்டு நோய் வருதுன்னு சொல்ற தில்லியா?"

'வாயெ மூடு! அவன் யாரு நடுவுலெ சொல்றதுக்கு?நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெ என் இஷ்டம் வந்தப்படி செலவு பண்ணுவேன். இந்த வீட்லெ உன்னாலெஒரு செல்லாக் காசு கூட வந்து விழற்தில்லே.'

'உங்க எண்ணம் அதுதான்னா கொஞ்சம் தெளிவாச்சொல்லுங்க. என் கைக்கு வந்ததெ நானும் செய்றேன்.'

'ஓஹோ! இனிமே நீங்க உத்தியோகம் பாக்கற்து

ஒண்ணுதான் குறெச்சல். எந்த டாக்டரெயாவது,நடிகனெ யாவது கல்யாணம் பண்ணி இருந்தா உன்சௌகரியங்களும், ஆடம்பரச் செலவுங்களும்.....'

சீ! முதல்லெ எனக்குப் புத்தி இல்லே. நிறெமாசகர்ப்பமா இருக்கற ஒரு பொம்பளெ மேலே குறெஞ்சதுகருணெகூட இல்லாத மனுஷனெ ஒரு மனிதனா நினெச்சிபேசற நானு..... நான் ஒரு மாடு!

குழந்தெ பொறக்கற காலம் வரெக்கும் நான் இங்கேயேஅடிமெ வேலெ செய்யற்துக்காக இருக்கவேண்டி யிருந்தது. பாபுவெப் பாத்த சமயத்தலெ என் மனசு எவ்வளவுஆனந்தத்தாலெ நிறெஞ்சி வழிஞ்சிதோ, எவ்வளவுதைரியம் வந்ததோ எப்படிச் சொல்றது? எனக்கு மகன்பொறந்தான். அவனெப் பாத்தா அவர் தவறாம மாறிப்போயிடுவார். என் கஷ்டசுகங்களெப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.