(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

'ஏன்'னு கேட்டேன்.

'அது வெறும் குப்பெ' அதுலெ ஒண்ணுமே யில்லே.'

'அந்த விஷயம் படிச்சதனால்தானே உங்களுக்குத்தெரிஞ்சிது?'

தேவெயில்லே. நான் சொல்றேன். அந்தப் புஸ்தகங்கெல்லாம் குப்பே!"

'இருக்கலாம்! இந்த விஷயத்தெ நானெ தெரிஞ்சிக்கும்படியா விட்டா நல்லது.'

'வாயெ மூடு! நான் சொல்லிக்கிட்டிருந்தா எதுத்தாப்பேசறே. நீ மனுஷியா? மாடா?'

'மனுஷங்களுக்கு மனுஷி! மாடுங்களுக்கு மாடு!'

இந்தக் கன்னங்க புளிச்சுப்போறதுக்குக் காரணம்அந்த மாதிரி சந்தர்ப்பங்களும், அந்த மாதிரி பேச்சும்தான்! கோவத்தலெ பல்லெ நறநறன்னு கடிச்சிக்கிட்டுஎன் கையிலே இருந்து புஸ்தகத்தெப் புடுங்கி துண்டுதுண்டாக் கிழிச்சிப் போட்டுட்டார். என் இதயம் படபடத்தது. நான் நம்ம ஊரு போனப்பொ பிடிவாதமாசலம் புஸ்தகங் கெல்லாம் கிடெச்ச வரெக்கும் வாங்கிஒளிச்சி வெச்சேன். தப்புங்கறயா? அதிகாரத்தாலெயாராவது யாரையாவது மாத்த முடிஞ்சுதுன்னு கேள்விப்பட்டிருக்கிறியா?"

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர் ஆணாகவேஇருக்கலாம்; கணவனாகவே இருக்கலாம் - அதற்காகஒரு புத்தகம் படிக்கிற விஷயத்திலேயும் தன் அதிகாரத்தைச் செலுத்தினால், ஒரு மனிதனுக்குத் தான் விரும்பும்புத்தகத்தைப் படிக்கும் உரிமைகூட இல்லை யென்றால்...

"சீ! என்ன அவ்வளவு முரட்டுத்தனம்?"

"முரட்டுத்தனம் ஒண்ணுமில்லே. முன் எச்சரிக்கெ!சலம் புஸ்தகம் படிச்சா பெண்ணுக்கு உண்மெ தெரிஞ்சிபோயிடும். எதிர்க்கிற தன்மெ பழக்க மாயிடும். அதுநடந்தாலும், நடக்கலேன்னாலும் ஆம்பளெக்கு அந்தபயம் இருக்கும்."

நான் சற்று நேரம் பேசாமலிருந்து விட்டுக் கேட்டேன்--- "சலம் பத்தி உன் கருத்தென்ன?"

"சலத்தின் வாதம் நியாயமானது, அவ்வளவுதான்----அதன்படி நடக்கற்து முடியாது."

"நியாயத்தின் படி ஏன் நடக்கக் கூடாது?"

"இந்தக் காலத்தலெ நியாயத்தெ ஒட்டி வாழ்க்கெநடக்கற்தில்லே. அதனாலேதான். அந்த நியாயத்தெப்பத்துப்பேர் ஒத்துக்க மாட்டாங்க, அதனாலே தான்... ஒருபுஸ்தகம் படிக்கற்துக்குக்கூடச் சுதந்தரம் இல்லேன்னாஎப்படி?----சொல்றியே தவர அதுலெ தன்னலமோ,இல்லெ வேற ஏதோ ஒரு எண்ணமோ இருக்குது. எங்கஅம்மாக்கு நான் கடிதம் எழுதற்துக்குக்கூட அந்தமனுஷன் உத்தரவு வேணும்னா நம்பறியா? ஒரு தடவெஇவரு நம்ம

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.