(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

எனக்கு வேதனெயா இருக்கும். அவளுக்கு ஒரு பெண் ஆசெப்பட்ற அத்தென‌ சுகங்களும் இருக்குது. சுதந்தரம் இருக்குது. இஷ்டப்படி நடந்துக்க முடியும். அவ பேச்சுக்கு மதிப்பு இருக்குது. புருஷனோட அன்பும் ஆதரவும் இருக்குது. ஒரு மனுஷியா வாழக் கூடிய அதிர்ஷ்டம் இருக்குது. அதுக்கு மேலெ என்ன வேணும்? ஆனா எல்லாத்தெயும் தவறாப் பயன்படுத்திக்கறா. புருஷன் தன் பேச்சைக் கேகேகறார்னு அம்மாவெயும் மகனெயும் பிரிச்சி வெக்கணுமா? தனக்கு அதிகாரம் இருக்குதுன்னு மாமியார் மேலேயா காட்டணும்? தங்களுக்குக் கிடெச்சிருக்கற நல்ல வாய்ப்புங்களெ சரியா அனுபவிக்காமெ தவறா பயன்படுத்தறாங்கன்னுதானே இந்தப் படிச்ச பெண்ணுங்களெப் பத்தி மட்டமா நினெக்கது இந்த உலகம்? தங்க வீட்டெச் சந்தெக் கடை ஆக்கிட்டு மகளிர் சங்கத்தலெ மெமபராகி என்னமோ உரிமைங்க வேணும்னு முழங்கனா நாலு பேரு சிரிக்க மாட்டாங்க? எந்த ஒரு முன்னேற்றமும் பாக்க முடியாதவங்க குருடங்களாவே விழுந்து கிடக்கறாங்க. வாய்ப்பு இருக்கறவங்க அதெ அழிச்சிக்கறாங்க. இதுலே குறை எங்கே இருக்குதுன்னு சொல்றே?"

" நான் நினெக்கற்து-- இந்த விஷயத்தெ எடுத்துக் கிட்டா, பாமா பாட்டி மகனிடத்திலேதான்........"

" அதுதான் நான் நினெக்கற்து கூட! இந்த ஆம்பளங்கள்ளே இருக்கற்து ரெண்டே ரகங்க! அம்மா அப்பாக்களிடம், அக்கா தங்கெங்களிடம் அளவுக்கு மீறி அன்பு வெச்சி தனக்கு ஒரு மனெவி இருக்காளே, அவளோட கஷ்ட சுகங்க தன்னெப் பொறுத்தே இருக்குதுங்கற நினெப்புகூட இல்லாம இருக்கறவங்க--மூணு முடிச்சு போட்டதிலே இருந்து பெண்டாட்டியின் முந்தானைக்கு அடிமையாய், சாவி கொடுக்கற பொம்மையாட்டம் உலகத்தெ ஒரேயடியா மறந்து போறவங்க--- இவங்களுக்கு இருக்கறது ஒரே கண்ணுதான்! அதெ வெச்சி அவங்க ஒரு பாகத்தெதான் பாக்க முடியும். உலகம் அந்த மாதிரியே நடந்திட்டிருக்குது.”

"சரோஜா தேவியோட உனக்கு சிநேக மில்லியா என்ன?”

தொடரும்

Go to Kaagitha maaligai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.