(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

"நல்லது பாமா பாட்டி! நீங்க திரும்பி வர்றவரெக்கும்எனக்கென்னமோ விரிச்சோன்னு இருக்கும்."

பானு உள்ளே வந்தாள் பெரு மூச்சு விட்டுக்கொண்டு.பக்கத்தில் உட்கார்ந்தாள்.

"என்னமோ அண்ணா! இந்த மனுஷங்களெ, இந்தவாழ்க்கையெ நினெச்சிக்கிட்டா கேள்விங்கதான் மிஞ்சிநிக்கிது. பாவம் பாமா பாட்டி பொண்ணு வீட்டுக்குப் போயிட்டிருக்கறாங்க. அதெல்லாம் மருமக கைவரிசெ.சுருக்கமா சொல்லணும்னா அந்த அம்மா அந்த வீட்டுக்கு மகாராணி! புருஷனெயும் மாமியாரெயும்கோவம் வந்தா வெய்யில்லே கூட நிக்கவெக்கறசக்தி உள்ளவ. மாமியார் மேலே எந்த நேரம் கருணெதிரும்பினாலும் அந்த நிமிஷமே வீட்டெ விட்டுத் துரத்தக்கூடிய கொடுமெ நிறெஞ்சவ! இன்னும் சொல்றதுக்குஎன்ன இருக்குது? அந்த இருக்கற ஒரே பொண்ணெவருஷத்துக்கொரு தடவெகூட வீட்டுக்குக் கூப்பட விடமாட்டா. இன்னும் ஸ்கூல்லெ படிக்கிற மச்சினன் ஒருத்தன் இருக்கறான். அவன்தான் ராஜா. அவன் அந்த வீட்லெ வேலெக்காரன்! அந்த அம்மா அபூர்வமா பாத்துக்கற, பெத்த குழந்தெங்க ரெண்டு பேர் இருக்கறாங்க.அவங்களெ கவனிச்சிக்கற் தெல்லாம் பாமா பாட்டி தான்.சமயல் செய்றாங்க. வேலெக்காரி மாதிரி வீட்டு வேலெஎல்லாம் பண்றாங்க. ராஜா கிணத்திலே இருந்து தண்ணியெல்லாம் இறெச்சி ஊத்தறான். கடெகண்ணிக்குப்போயிட்டு வர்றான். குழந்தெங்களெத் தூங்க வெக்கற்துக்காகத் தூக்கிட்டுத் திரிவான்"

"அப்பொ அந்த மகாராணி என்ன பண்றா!"

"கேளுடா! மகாராணி புருஷனோட சீட்டாடுவா.சினிமா பாப்பா. ஊர் சுத்துவா. பிக்னிக் போயிட்டுவருவா----தெரிஞ்சவங்க, சிநேகிதங்களெப் பாத்துட்டுவருவா. பெண்கள் சங்கத்துக்கு, லேடீஸ் கிளப்புங்களுக்குப் போயிட்டு வருவா. இந்த டியூட்டி யெல்லாம்பத்தாதா? எவ்வளவு பிஸியா இருப்பாத் தெரியுமா!இதுக்கு மேலெ நேரம் இருந்தா மாமியாரோட சண்டெபிடிப்பா. மச்சினனெத் திட்டித் தீப்பா. புருஷனெமிரட்டுவா. அதோட ரொம்ப களெச்சிப் போயிடுவா.அந்த அம்மா இருக்கப்பட்டவங்க வீட்டுப் பொண்ணு.நிறெய சொத்து கொண்டு வந்தாளாம். நேருப்பு பெட்டிகூட வெள்ளியாலே செஞ்சதாம். அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்ட மெல்லாம். நல்லது கெட்டது நினெச்சிபார்க்காதவ. ஒருதடவெ அந்த அம்மா ஏதோ கறிபண்ணச் சொல்லி உத்தரவு போட்டாக்கா, பாமா பாட்டிகாய் கொஞ்சம் முத்திப் போச்சின்னு குழம்பு வெச்சிட்டாங்களாம். எல்லாம் முடிஞ்சி மகாராணி சாப்பாட்டுக்குவந்ததும் ராமாயண மெல்லாம் நடந்தது. மாமியாரெக்கண்டபடித் திட்டினா. அந்தக் குழம்பெத் தொடக்கூடக்க்கூடாதுன்னு புருஷனுக்கு ஆர்டர் போட்டா. அவருதலெ குனிஞ்சிக்கிட்டு வேறெ கறியோட சாதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.