(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

பிசெஞ்சிசாப்டுட்டிருந்தாராம். பாமா பாட்டிக்கு விசனமா இருந்தது. 'தம்பி! நான் பண்ணது தப்பாடா? அதுக்குப்போய் அவ என்னெ இவ்வளவு பேச்சு பேசிட்டாளே -நீ கேட்டுட்டே இருக்கிறீயே...' 'போவட்டும்மா! அவபேசற்திருக்கட்டும் - அவ சொன்னா மாதிரி செஞ்சுட்டாபோவாது?'ன்னு சொன்னாராம். பாத்தியா? எவ்வளவுவேடிக்கெயான விஷயமோ!

சின்னவங்க இஷ்டப்படிப் பெரியவங்க நடக்கற காலம் வந்தாச்சி. தாய்க்கு அந்த வீட்லெ மதிப்பு இல்லவே இல்லேங்கற்து உண்மெ. குறெஞ்சது அவங்க வயசுக்காவது நாம மதிப்பு குடுக்கணுமில்லியா? 'நானே என் மனெவி சொல்றதெக் கேட்டுக்கறேன். அப்படீன்னா உன் கதி என்ன?' என்பதே அவர் எண்ணம் போல இருக்குது! 'போவட்டும்பா! இனிமே உங்க இஷ்டப்படியே செய்றேன். இந்தத் தடவே மாத்தரம் கோவத்தெ மனசுல வெச்சிக்க வேண்டாம். ஒரு கரண்டி கொழம்பு ஊத்திக்கொ---- நீ சாப்பிடலென்னா எனக்குத் திருப்தியா இருக்காது'ன்னு சொல்லி மகனெ வேண்டிக்கிட்டாளாம் பாமா பாட்டி. தாய் என்ற ஸ்தானெத்தெ நிலெநாட்றதுக்கு அந்த அம்மாவின் இதயம் துடி துடிச்சிருக்கணும். அவரு ஒண்ணும் சொல்ல முடியாம 'சரி ஊத்து'ன்னு சொன்னாராம். அவர் சாப்ட்டு எழுந்திருக்கிற்துக்குள்ளேயே மருமக சூட்கேஸ் தயார் பண்ணிட்டா. மாமியார் மேலெ போர் தொடுத்துட்டா. 'என் புருஷனெயும் என்னெயும் பிரிக்கற்துக்குத்தான் நீ முயற்சி பண்றே. நான் வேணாங்கற வேலெயே, அவரெ ஏமாத்தற்துக்கு என்னென்னவோ சொல்லி ஏன் செய்யும்படியா பண்றே?'ன்னு திட்டிக் கொட்டினா. அப்புறம் புருஷன்கிட்டெ 'என் பேச்சுக்குத் துளிக்கூட மதிப்பில்லாத இந்த வீட்லே நான் இருக்க வேண்டிய அவசிய மில்லே. உங்க அம்மாவோட நீங்க குடுத்தனம் பெண்ணுங்க, நான் போறேன் இனிமெ வரவே மாட்டேன்!'ன்னு முடிவு சொல்லிட்டுப் புறப்பட்டுட்டா. 'சரோ! சரோ!'ன்னு பின்னாடியே போனா ரயிலேத்திட்டு வர்றது தவர வேற பயனில்லாமெ போயிட்டுது. அந்தச் சரோ என்ன படிச்சிருக்கா தெரியுமா?"

"என் மூஞ்சி! ஒண்ணும் படிச்சிருக்க மாட்டா. படிச்சிருந்தா அப்படி என்னெக்கும் நடந்துக்க மாட்டா"

"அதுதான் நீ பண்ற தப்பு! அவங்க சரோஜா தேவி பி.ஏ. கிளாஸ் வாங்கனவங்க."

"நிஜமாவா!" எனக்கு வியப்பாக இருந்தது.

"சத்தியமா. வேடிக்கெயா இருக்குதில்லே?"

"அப்பொ அவங்க புருஷன்...? என்ன வேலெ?"

"காலேஜ் லெக்சரர்! அவர் வெத்துக் கடவுள்---அப்படின்னா அவ்வளவு நல்லவர்னு இல்லே. கடவுளெப் போல வாயோத்திறந்து பேசமுடியாதவர்! யார் மேலெ கருணெ வருதோ அவங்களையெ பல்லக்குலெ ஏத்தக் கூடியவர்! அந்த சரோஜா விஷயத்தே நினெச்சாத் தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.