(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

ஊரு பண்டிகெக்கி வந்தா அவங்க பண்ணமரியாதெ பத்தலியாம். இன்னொரு தடவ உடம்பு சரியில்லாம கிடந்து எழுந்தா அவங்க பாக்க வரல்லியாம்.அவங்களுக்குக் கடிதம் எழுதக் கூடாதுன்னு உத்தரவுபோட்டாரு. நிஜம் தான். ஏதோ காரணத்தாலெஅவருக்குக் கஷ்டமா யிருக்கலாம். நடுவுலெ என்னெஉபயோகிச்சிக்கற்து எதுக்குன்னுதான் நான் கேக்கறேன்."

"உன் கேள்விகளுக்கும், உங்களவர்க்கும் ஒவ்வொருகும்புடு, போவட்டும். நீ கொஞ்சம் அமைதியா இரு!மரியாதெ செய்யாம போவற்துக்கு அவங் கென்னபைத்தியக்காரங்களா? நூத்துக் கணக்கான மைல்பிரயாணம் பண்ணி கண்டதுக் கெல்லாம் வர்றதுன்னாமுடியற காரியமா?"

"நாங்க ரெண்டுபேரும் பண்டிகெக்கிக் போனப்பொஸ்டேஷனுக்கு யாரும் வரல்லியாம்! வந்தது வம்பு.வீட்டுக்குப் போனதும் கோவிச்சிக்கிட்டுப் படுத்துட்டாரு.பத்துப் பேருலே என் மானத்தெ வாங்காதீங்கன்னு கால்கையிலெ விழுந்து வேண்டிக்கிட்டேன். கேக்கல்லெ.என்ன செய்யற்துன்னு தெரியாம அம்மாகிட்டெ சொன்னேன். அம்மா தப்பெ ஒத்துக்கிட்டு வேண்டிக்கிட்டப்புறம் எழுந்திருச்சி டிபன் சாப்ட்டாரு."

"எதுக் கெடுத்தாலும் இப்படி தப்பா நினெச்சிக்கிட்டா...."

புழக்கடைக் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் பானுஎழுந்து போனாள். ஐந்து நிமிஷங்களில் திரும்பிவந்து"உன்கிட்டே ரெண்டு ரூபா இருக்கு மாண்ணா?" என்றுகேட்டாள்.

"அஞ்சி ரூபா நோட்டா இருக்குதுன்னு நினெக்கறேன். சில்லறெ இல்லே. எதுக்கு?"

"சொல்றென் ஆவட்டும். அதெத்தான் ஒண்ணு குடு!"

பர்ஸ் எடுத்து ஒரு நோட்டு கொடுத்த உடன் புழக்கடைப் பக்கம் எடுத்துச் சென்றாள். யாரோ பக்கத்துவீட்டு அம்மா வந்தாற் போலிருந்தது. பேசுவது ஓரளவுகேட்டது. "அஞ்சி ரூபா எதுக்குமா! வாங்கிக்கோன்னுசொன்னாரா? ஒண்ணரெ ரூபா...."

"பரவால்லே வாங்கிக்கோங்க பாமா பாட்டி! நீங்கதிருப்பிக் குடுக்கவும் வேண்டாம். ஒண்ணும் வேணாம். ஒருபத்து நாள்ளே வந்துடுங்க. எப்பவும் இருக்கற வம்புதானே?"

"அம்மா! உனக்குத் தெரியாதது ஒண்ணு மில்லே.வாழ்க்கெ எவ்வளவு சிரிப்பா சிரிச்சிப் போச்சோ பாத்தியா? என்னெப் பத்தி என்ன இருக்குது. நீ சாக்கரதெயா இரு! எடுத்ததுக் கெல்லாம் மனசுலெ குறெ வெச்சிக்காதே! குழந்தையெ பத்திரமா பாத்துக்கொ. சொன்னாப்பல ராஜாவெக் கொஞ்சம் அப்பப்பொ பாத்துக்கோம்மா! உங்க அண்ணனுக்குப் பணம் குடுக்காமபோனா..." அந்த அம்மாவினுடைய குரல் கவலையோடு ஒலித்தது.

"ஒண்ணும் பரவால்லீங்க! அவன் பணம், என் பணம்வேற வேற இல்லே."

"அப்போ நான் போறேன்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.