(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

விடும்" என்று டாக்டர் கூறினால், அதைச் சரியென்று ஆமோதித்து விடமாட்டாள் கோமதி.

   

நரம்புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட தலைவலி யானால் அதற்குக் காப்பி நல்லதா? சீதளத்தினால் வந்த தலைவலியானால் குளிர்ந்த காற்று உடம்புக்கு ஆகுமா?" என்று கேட்பாள் டாக்டரை.

   

தன்னுடைய ஆரோக்கியத்தில் இப்படித் திடமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல் அரைகுறை யாக எதையாவது படித்தும் கேட்டும் அவள் தினசரி நோயாளியாக மாறிவிட்டிருந்தாள்.

   

மனைவி ஒரு வியாதிக்காரி. ஆண்களின் மனம் ரீங் காரமிடும் வண்டைப் போன்றது. மலர்ந்த மலர்களிலே மதுவும் அழகும் இருக்கின்றனவா என்று சோதனை போடும் தன்மையை உடையது வண்டு.

   

வாயிற்படி ஏறும் போதே சிரித்துக் கொண்டு வரவேற்கும் மனைவி சதா கட்டிலில் படுத்துக்கொண்டு முனகியவாறு இருந்தால் எந்தக் கணவன்தான் அலுத்துக் கொள்ள மாட்டான்?

   

பணத்தை மதியாமல் நாகராஜன் புட்டி புட்டியாக மருந்துகள் வாங்கினான். அவள் வாய் அசைப்பதற்கு முன் பணிபுரிய அந்த வீட்டில் மூன்று வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் மூன்று பேர்! வேலையாட்கள் மூன்று பேர்!

   

கோமதியின் உடல் நிலையை விட மனோநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டவர் டாக்டர் ஸ்ரீதரன். உடலில் ஏற்பட்டிருக்கும் வியாதிகளுக்கு வைத்தியர்களால் சிகிச்சை செய்ய முடியும். உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?

   

கோமதி அம்மா உங்களை வரச் சொன்னாங்க" என்று டாக்டர் வீட்டுக்கு, நாகராஜன் வீட்டைச் சேர்ந்த வேலைக்காரர்கள் யார் வந்து அழைத்தாலும் டாக்டர் ஸ்ரீதரன் பதறிக் கொண்டு போக மாட்டார்.

   

"அம்மாவுக்கு என்ன உடம்பு?" என்று கேட்பார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.