(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

பெயரும் புகழும் பெற்றுள்ள அவர் ஒரு குணவான். நலல வருமானமும், இஷ்டப்படி வாழ சுதந்திரமும் இருக்கும் போதும் டாக்டர் ஸ்ரீதரன் கட்டுப்பாடுடனே வாழ்ந்து வந்தார். எந்தப் பெண்ணையும் தாயாகவும் சகோதரியாகவும் காணும் பக்குவமான மனநிலை அவருக்கு ஏற்பட்டிருந் தது. அப்படிப்பட்டவரின் வாயால் பாலுவைப் புத்திசாலி என்று அழைப்பது ஓர் ஆசி மாதிரி இருந்தது அவளுக்கு.

  

கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக்' 'டிக்' என்று சப்தித்துக் கொண்டிருந்தது. பவானி கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே இருந்தாள்.

  

"என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?"

  

காரைக்கால் அம்மையாரின் சரிதம். பக்தியால் பரமனுடன் பேசி மாங்கனி பெற்றவளின் மனசைப் பற்றி, பண்பைப் பற்றி வியந்து கொண்டே இருந்தேன். எனக்கு இந்தப் பையன் இராமல் இருந்தால் நான் எங்காவது புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிருப்பேன்..."

  

அவளுடைய நீல நிற விழிகள் ஹாலில் இருந்த புத்தர் சிலை மீது பதிந்து இருந்தன.

  

அம்மா பவானி!" என்று அழைத்தார் டாக்டர் ஸ்ரீதரன் .

  

உங்களுடைய உயர்ந்த நோக்கங்களும் உன்னத லட்சியங்களும் போற்றப்ப - வேண்டியவையே. இருந்தாலும், ஆண்டவனிடம் காரைக்கால் அம்மையாரைப் போல் பக்தி செலுத்தி அதற்கேற்ற முறையில் வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்வது இந்தக் காலத்தில் முடியாது. ஓர் இளம் பெண் - அழகானவள் - துணையற்றவள்-ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தால் ஆபத்துக்கள் வருவது நிச்சயம். ’துணையில்லாதவள்’ என்னும் போதே சமூகம் அவளைச் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. அனுதாபத்துடன் பார்க்கிறது. சுய நலத்துடன் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆண்டவனிடம் செலுத்தும் பக்திக்குச் சமமாக ஒன்று இருக்கிறது. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவிகள் புரிவது. பிறர் இன்னல்களை நம்முடைய-தாகப் பாவித்து அவர்களுக்குச் சேவை புரிவது. இதிலே மனசுக்கு மகத்தான ஆறுதல் கிடைக்கும். அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். மனைவியை இழந்து பதினைந்து வருஷங்கள் ஆயின. இருந்தும் எனக்கு மனசிலே ஆறுதல் இருக்கிறது. வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது. காரணம் பிறருக்குச் சேவை செய்வது என் வாழ்க்கையின்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.