தலைப்பட்டது, அவன் அனேக விதமான தானங்களை கை சலிக்கச் செய்யத் தொடங்கினான். பரிமள-வல்லியினால் முன்னிலும் அதிக பரிமளம் அந்த கம்பெனிக்கு உண்டாகி விட்டது.
எந்த காரியம் செய்யப் புகினும் அதில் விக்கினமேற்படுவதோ அன்றி சண்டை, பூசல் முதலியன உண்டாவதோ உலகத்தில் சகஜமல்லவா! அதேபோல நற்குண நாடகக் கம்பெனியிலும் சிற்சில மாறுதல்கள் உண்டாகத் தலைப்பட்டன. “கேசவன் மீதும், பரிமளாவின் மீதும் முதலாளி அதிகப் பிரியம் வைத்துப் பலவிதத்திலும் ஆதரிக்கின்றார். நம்மை அவ்வாறு கவனிப்பதில்லை“ என்கிற பொறாமை உதயமாகி விட்டது. அதை அடிக்கடி ஜாடை மாடையாகப் பேசவும் சிலர் ஆரம்பித்தார்கள், கேசவனிடத்தில் தங்களுடைய கசப்புத் தன்மையைக் காட்டத் துவக்கினார்கள்.
-----
பரிமளவல்லி கம்பெனியில் சேரும்போது 10 வயதுச் சிறுமியாக விருந்தாள். அவள் சந்தோஷ மற்று, மிக்க துன்புற்று,வறுமையினால் பீடிக்கப்பட்டு ஒரு வீட்டில் அடிமை வேலை செய்து கொண்டிருந்ததால் மன வருத்தத்தினால் தேகம் வளர்ச்சி குன்றிப் போய் ஒளி மங்கிக் கிடந்தாள். கம்பெனியில் வந்து சேர்ந்த பிறகு அவளுடைய கஷ்ட காலம் விமோசனமாகி விட்டது. அந்த சந்தோஷத்தினால் மேனியும் முகமும் வசீகர முற்றுப் பிரகாச முண்டாயது. கம்பெனியின் சொந்தக்-காரரின் அன்பு இவர்கள் குடும்பத்தைப் பூர்ணமாகத் தாங்கியது. நாடகத்தில் நற்கியாதி பெற்ற பரிமளா தன் காலத்தை வீணே கடத்தாமல் தனது அறிவு வளர்ச்சிக்கான ஓர்செல்வத்தையும் சேமிக்க எண்ணி முதலாளியினுடைய ஆதாவில் உபாத்தியாயர் ஒருவரை நியமித்து அவரிடம் கல்வியைக் கற்கலானாள்.
சங்கீதமும் கல்வியும் சமமாக விருத்தியடையப் பெற்ற பரிமளாவினால் கம்பெனி செழித்து ஒங்கி விருத்தியடைவதைக் கண்டு சந்தோஷித்த முதலாளி பரிமளாவின் குடும்பத்தை ஒரு வருடமாக ஆதரித்து வந்த மட்டுடன் நிறுத்தாமல் பரிமளாவுக்கு மாதம் இத்தனை ரூபாய் என்று சம்பளம் போலவும் கொடுக்கலானார். கம்பெனியில் சேருங் காலத்தில் கட்டக் கந்தையற்றுக் கிடந்த பரிமளவல்லிக்கு மூன்று வருடங்களுக்குள்ளாகவே சொந்தமாக உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் எல்லாம் உண்டாகி விட்டன. ஆநந்தப் பெருக்கினால் பரிமளா வளர்பிறை மதியம் போலப் பிரகாசித்து எல்லோருடைய விழிகளுக்கும் பேராநந்த