அப்படி ஆகும் காலத்தில் உன்னழகும் சங்கீதமும் எத்தனை உயர்வாக இருந்தாலும் நீயொரு நாடகக்காரி என்பதை உன்னால் மறைக்க முடியாது. உன்னைக் கண்டு காமுறும் ஜனங்கள் கோடிக் கணக்கிலிருக்கி றார்கள். அவர்களால் உனக்கு எத்தனையோ துன்பங்கள் நேரிடலாம். அவைகளுக்கு இலக்காகாமல் என்னுடன் வந்து விடு. ரங்கோன் முதலிய இடத்திற்குப் போய் நாம் சுகமே வாழலாம். இதற்குப் பதிலை நான் உன் வீட்டிலேயே எதிர் பார்க்கிறேன்; இன்று மாலை வருகிறேன்.
இங்ஙனம்
……………….
அன்பன்."
------
அக் கடிதத்தைப் படித்த பரிமளாவின் மனத் துயரம் அவள் என்றும் கண்டிராத வகையில் பொங்கி விட்டது. "ஹா! நான் ஓர் கூத்தாடியா! நாடகக்காரியா! அவ்விதமா நம்மை ஏளனம் செய்வார்கள். என்ன அனியாயம்! சீச்சீ! என்ன வாழ்க்கை நாம் வாழுகின்றோம். நாம் நமது வறுமையினாலும் சிறிய குழந்தைப் பருவத்தின் விளையாட்டினாலும் இது பரியந்தம் இவ்விதம் கவுரவ மாக நடித்ததெல்லாம் இப்படி பல ஜனங்களின் மனத்திற்கு விரோதமாகவா ஆய் விட்டது?
------
ஹா! கடவுளே! என் மதியை எனக்கு அறிவிக்க நீ ஏன் இதுகாறும் தாமதம் செய்தாய்!.. நான் இன்னும் என்னுடைய நிலையை அறியாமலிருப்பதைக் கண்டு தான் பல ஜனங்களின் மூலம் எனக்குப் புத்தி பிறக்கச் செய்தாயோ!.... ஐயோ! இப்பாழும் பெண் ஜென்மம் எடுத்ததனாலன்றோ, என் கதி இவ்விதமாகி விட்டது! உத்தமர்களின் சகவாசத்துடன் சிறுமியாக நடிப்பதுவும் என்னைத் தாக்கி விட்டதே. சீச்சீ! நாடகத்திற்கு வரும் மக்களின் மனத்திற்கு இத்தகைய ஆபாச எண்ணத்தை ஏன் அளிக்கின்றாய் என்னப்பனே! எனக்கு இன்னும் 14 வயது நிரம்பப் பெறாதிருப்பினும் என்னுடைய துயரம் என்னை வாட்டி வருத்துகின்றதே! சர்வேசா! என் மனம்