செலுத்தி அனேக உயர்ந்த க்ரந்தங்களையும் மேலான நாவல்களையும் படித்துக் கற்பரசிகளின் திண்ணிய திடத்தைத் தன் மனத்தில் உறுதி கொண்டாள்.
பரிமளா ஒரு தினம் தன் வீட்டில் இருக்கையில் சில கடிதங்கள் வந்தன. அவைகளைப் பிரித்துப் படிக்கலானாள். அவற்றில் ஒன்றில்,
"என்னுயிரைக் கொள்ளை கொண்ட பரிமள சுந்தரியே!
உனக்கு இக் கடிதத்திற்கு முன்பு பல கடிதங்கள் எழுதியும் நீ பதில் விடுக்கா திருத்தலின் காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் சாமானிய மனிதனென்று நினைக்காதே! நான் ஓர் ஜமீந்தாரரின் புதல்வன்; மைனர் ஜமீந்தார் என்பதை நினைத்துப் பார். நான் உன்னைப் பார்த்த நாள் முதல் உன்னையே மணக்க ஆசிக்கின்றேன். நீ பெரிய ஜமீந்தாரிணி யாவதைக் கவனித்து எனக்கு உடனே பதில் போடு. கேவலம் நாடகக்காரப் பெண்ணாகிய உன்னை ஓர் ஜமீன்தார் தேடிவருவதானது உனது பூர்வ ஜன்மப் பயன் என்று நினைத்துக் கொண்டு, மறுக்காது பதில் தெரிவிக்கவும்.
இங்ஙனம்
……………………
மைனர் ஜமீந்தார்.
என்று வரைந்திருந்தது. அதைப் படித்துக் கண்ணீர் உதிர்த்தாள். பிறகு மற்றொன்றைப் படிக்கலானாள். அது பின் வருமாறு:-
-----
"நாடகக்காரியாகிய நாரீயே!
உனது தொழில் நாடகம் நடிக்கும் இழிவாகவிருந்த போதிலும் உன்னுடைய பேராநந்த எழிலும்