(Reading time: 25 - 50 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

சங்கீதமும் ஒன்று கூடி என்னை உன் வயப படுத்தி விட்டதால் நான் உனக்குப் பல பதக்கங்களும், தோடாவும் பரிசு கொடுத்திருக்கிறேன். நான் ஓர் ரத்தின் வியாபாரி. என்னுடைய ஆசை நாயகியாக உன்னை அடைய மனம் தாவுகின்றது. நான் என்னுடைய அவாவைக் கடிதத்தில் தெரிவிக்க எடு இடம் தராது. நீ ஓர் உயர்தரக் கம்பெனியில் நடித்தாலும் நாடகக்.காரி என்கிற ஓர் பெயர் வந்து தாக்காது நிற்காது. எது எவ் விதமிருப்பினும் என்னுடைய மனோ வேட்கையினால் நான் உன்னை என் மனத்திற்கிசைந்த மனைவியாகச் செய்து கொள்ளத் தீர்மானித்தேன். நான் உன்னை நேரில் வந்து காண ஆசைப் படுகிறேன். என்று வரலாம், எப்போது வரலாம். என்ற விஷயத்தை அடுத்த தபாலில் கீழ்க் காணும் விலாசத் திற்குத் தெரியப் படுத்தவும்.

   

இங்ஙனம்

   

……………………….

   

ரத்ன வியாபாரி.

   

அந்தக் கடிதங்களைப் போலவே இன்னும் அனேகக் கடிதங்களிருந்தன. அவற்றுள் அந்த நாடகத்திலேயே நடிக்கின்றவன் ஒருவன் எழுதியதின் சாரம் பின் வருமாறு:-

   

"பரிமளா ! உன் பெயருக் கேற்ற இன்பப் பரிமளம் உன்னிடத்தில்தான் ததும்புகின்றது. உன்னைப் போன்று எழிலும் சகல அம்சங்களும் பொருந்திய புவனசுந்தரி நீதான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நீ உன்னழகையும் ஆநந்த சுகத்தையும் எந்த வகையில் தக்க யோக்யதா பக்ஷமானவர்களிடம் அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற பகுத்தறிவு தெரியாது,

   

நீ சிறு பிராயத்தின் அறியாமையினால், கேவலம் பிச்சைக்காரப் பயலாயும்-வேலைக்காரப் பயலாயும்— சமையல்காரனாயும் இருந்த கேசவனிடத்தில் உனது மேலான அன்பை வைத்திருப்பதானது மிகவும் விசனிக்கவும் பரிகஸிக்கவும் இடமுண்டாகின்றது. நான் உன்னுடன் பலமுறை நடித்திருப்பதை இங்கு குறிப்பிட வேண்டாம். உனக்குப் பல விதத்திலும் தக்க யோக்கியதை யுடைய என்னை நீ விரும்பாதவளாக இருப்பது உன் துர்ப்பாக்கியமே யாகும். அதை நான் குற்றமாக மதிக்கவில்லை. நீ இப்போது இன்னம் புத்தி யறியாத சிறுமியாக இருந்தாலும் இன்னும் சில வருடத்திற்குள்ளாக நீ பெரிய மங்கையாய் விடுவாய்! 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.