(Reading time: 22 - 43 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

மாத : நண்பா! அப்படி அல்ல! தகப்பன் இறந்த போதிலும் அவன் பிள்ளையின் ஸ்வரூபமாக உயிருடன் இருக்கிறான் என்பது சாஸ்திரம். ஆகையால், என்னிடம் இருந்த விதமே நீ என் குழந்தையிடத்திலும் இருந்து அவனை ஆதரிக்க வேண்டுகிறேன். இதுதான் என் கடைசி வேண்டுகோள். நான் இறக்குமுன் என் குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். நீ போய் அவனை அழைத்து வா. இந்த விஷயத்தை நான் இறந்த பின் என் நாயகியினிடத்தில் தெரிவிக்கலாம்.

   

நியா : அடே! சேவகா! இவரைச் சண்டாளர்களிடம் ஒப்புவித்து அரசனுடைய கட்டளையை நிறைவேற்றச் சொல்லி விடு.

   

சேவ : இப்படி வாரும் ஐயா!

   

(மாதவராயரை வெளியில் அழைத்து வருகிறான்)

   

மாத : ஜெகதீசா! இனி உன்னுடைய துணையையன்றி எனக்கு வேறொரு துணையுமில்லை.

   

(நிறுவினா கதிலேதுரா - என்ற பாட்டின் மெட்டு)

   

ப. நினையலால் கதியேதையா

   

ஈசா! ஜெகதீசா! பரமேசா! ஸர்வேசா!

   

அ. நாதனே! உன் சோதனையோ!

   

பேதையினேன் ஏது செய்வேன்?

   

நாதா! குணநீதா! பொற்பாதா! ஜகந் நாதா! (நி)

   

(தனக்குள்) ஆகா! இதுதான் பூலோகத்தின் நீதியோ இது தான் அரசாட்சியோ? இதுதான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.