(Reading time: 22 - 43 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

ஊருக்கு வெளியில் அவசரமாகப் போனதைக் கண்டேன். என்னுடன் வந்த சந்தானகன் வண்டியை நிறுத்தி அதற்குள் பார்த்தான். அதன் பிறகு, நானும் உட்புறம் யார் இருந்தார்கள் என்பதைப் பார்க்கப் போனேன். அவன் என்னைத் தடுத்துக் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி உதைத்தான். அதை இராஜனிடம் தெரிவிக்குமுன் தங்களிடம் சொல்லிக் கொள்ளலாமென்று வந்தேன்.

   

நியா : அந்த வண்டி யாருடையது?

   

வீர. : அது மாதவராயருடையதென்றும், அவருடைய உத்தியான வனத்தில் சந்திக்கும் பொருட்டு அதில் வஸந்தஸேனை போவதாயும் வண்டிக்காரன் தெரிவித்தான்.

   

வீர : பார்த்தீரா உண்மையை?

   

நியா : மாசற்ற சந்திரனைக் கிரகணம் பிடிக்கும் போல் இருக்கிறதே! நல்லது; வீரகா! உன் பிராதை விசாரிக்கிறேன். நீ குதிரையின் பேரில் ஏறிக் கொண்டு இவருடைய பூஞ்சோலைக்குப் போய், அங்கே கொலை செய்யப்பட்ட ஒரு ஸ்திரீயின் பிணம் கிடக்கிறதோ என்று பார்த்து விட்டு வா?

   

வீர : அப்படியே இதோ வந்து விட்டேன்.

   

(போய்த் திரும்பி வருகிறான்)

   

வீர: ஒரு ஸ்திரீயின்பிரேதத்தைக் காட்டு மிருகங்கள் இழுத்துக் கொண்டு போயிருக்கக் கண்டேன்.

   

நியா: ஸ்திரீ என்பது எப்படித் தெரிந்தது.

   

வீர : அங்கு கிடந்த தலை மயிரின் நீட்சி, அழகு முதலியவற்றாலும் கால் கைகளின் அடையாளங்களினாலும் கண்டு பிடித்தேன்.

   

நியா: வாரும்; மாதவராயரே உண்மையைச் சொல்லி விடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.