செங்கோலோ? ஒரு மயிரிழையும் தவறாத சர்வ வல்லமையுடைய ஈசுவரனால் படைக்கப் பட்ட இந்த உலகில் இப்படி நடப்பது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது! இவ்விதம் நடப்பதற்கு விதி என்னும் ஒரு மூல காரணம் இருந்த போதிலும் இப்பொழுது நேரில் பார்ப்பவர்களுக்குக் கடவுளிடத்து ஒருவித அவநம்பிக்கையும், தூஷணையும், ஒரு விதக் களங்கமும், ஏற்படுகின்றன அல்லவா? எவ்வளவு பெருத்த குற்றம் எவ்வளவு சுருக்கமான விசாரணை எவ்வளவு துரிதமான தீர்மானம்! நல்ல நியாய ஸ்தலம் தீர்மானம் செய்த அரசனும் நல்லவனே ஒரு விரோதியின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு இப்படிச் செய்தால் உலகத்தில் மனிதருக்குப் பாதுகாப்பேது? அரசனே! இப்படிக் குற்றமற்றவர்களை வருத்தி நீ எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளை ஒக்கும் அல்லவோ! அரசனே, உனக்கு நரகம் ஆயத்தமாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது; கவலைப்படாதே!
சேவகர், வா போகலாம். (போகிறார்கள்)
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...