(Reading time: 14 - 27 minutes)
Vetha Vithu - SaVi
Vetha Vithu - SaVi

« கமலா! நீ எப்படி அப்பாவோடு சேர்ந்து வந்தே ?

   

“காஞ்சீபுரத்திலேந்து நேரா அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கிருந்து எல்லாருமா வந்தோம்” என்றாள் கமலா.

   

“நல்லவேளை ! இப்பத்தான் தாழம்பூவைத் தலையிலிருந்து பிரிச்செடுத்து தோட்டத்துல் போட்டுட்டு வந்தேன். இந்த கமலா கண்ணில் படாம தப்பிச்சனே!" என்று எண்ணி மகிழ்ந்தாள் பாகீரதி.

   

ஆனாலும் கமலாவுக்கு மூக்கில் வேர்த்திருக்கவேண்டும். "என்னடி தாழம்பூ வாசனை அடிக்கிறது. வீடு முழுக்க? என்று கேட்டாள்.

   

"இந்த கமலாவுக்குத்தான் என்ன மூக்கோ ! போன ஜன்மத்துல மோப்ப நாயாப் பிறந்திருக்கணும்" என்று எண்ணிக் கொண்ட பாகீரதி, "அதுவா? கிட்டப்பா தஞ்சாவூர்லேங்து கதம்பம், தாழம்பூல்லாம் வாங்கிண்டு வந்திருக்கார்" என்று சமாளித்தாள் பாகீரதி,

   

"அந்தக் கழைக்கூத்தாடிப்பெண் மஞ்சு என்ன ஆனா மாமா?" என்று சந்தடிசாக்கில் கிட்டப்பாவின் காதைக் கடித்தான் கிட்டா.

   

"அவளை அந்த சர்க்கஸ்காரன் விடறதா இல்லே! கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்" என்றார் கிட்டப்பா,

   

"பாவம், அந்தப் பெண் மூர்த்தி பேர்ல உசிரையே வெச்சிருந்தது" என்றான் கிட்டா.

   

"நீ போய் வேலையைப் பாருடா. உனக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்" என்றார் கிட்டாவின் மாமா.

   

மறுநாள் விடியற்காலையிலேயே வைதிகச் சடங்குகளை ஆரம்பித்துவிடச் சொன்னார் கனபாடிகள். வீடு முழுதும் ஹோமப் புகை சூழ்ந்து கொள்ளவே வைதிகர்கள் ஆளுக்கொரு விசிறியைக் கையில் வைத்து வீசிக்கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து ஆரத்தி எடுக்கிறபோது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.