(Reading time: 17 - 34 minutes)

அவ ஐ லவ் யூ சொல்லிருந்தா கூட இவ்ளோ எக்ஸைடெடா பீல் பண்ணிருக்க மாட்டான்.அவ்ளோ நெகிழ்ந்து போய்ட்டான் .பட் எதையும் காட்டிக்காம,ஆழமா ஒரு பார்வை பார்த்துட்டு எதுவும் சொல்லாமயே போய்ட்டான் .

அப்பறம் நோ கால் .கோவமா போய்ட்டான்னு நெனச்சு பொண்ணும் சோக மோட்லேயே இருந்தா.

மேரேஜ் டேவும் வந்துச்சு .

போடோ கூட கல்யாணத்துக்கு முதல் நாள் சேர்ந்து எடுக்கல .

பட் மணவறைல புன்னகையோட அவனை பார்க்கவும் பொண்ணுக்கு அவ்ளோ ஹாப்பி .

பொண்ணு கிட்ட உட்கார்ந்ததும் ,அழுமூஞ்சி பாப்பா ஐ லவ் யூனு சொல்லி இன்ப அதிர்ச்சி குடுத்தான் .தாலி கட்டும் முன் ,நீ எனக்கு உயிருக்கும் மேல, இதை இப்போ,இந்த மொமெண்ட்ல சொல்லத்தான் அப்போ சொல்லலனு சொல்லிட்டான்.

பொண்ணு மருதாணிக்கு போட்டியா சிவந்துச்சு !

"ஓய்! ஓவரா சிவக்காதடி ! மஞ்சள் கயிறும் சேர்ந்து சிவந்திடப் போகுது" னு சொல்லி இன்னும் சிவக்க வச்சான் .

" ஹேய் போதும்டி இதுக்கு மேல சிவந்த , ஆங்கிரி பேர்ட் போல தெரிவ "

பொண்னு களுக்குனு சிரிச்சுட்டா.

எல்லாரும் திரும்பி பார்த்து சிரிக்கவே அசடு வழிஞ்சா.

"இப்போவே நல்லா சிரிச்சிக்கோடி.என் கனவுல ஒரு மண்ணு லாரியவே கொட்டி 3 மாசம் என்னை லோ லோனு அலைய விட்டல .உனக்கு ஹெவி பனிஸ்மென்ட் ஆன் தி வே ."

"அதெல்லாம் அத்தை காப்பாத்துவாங்க.உங்களைப் பத்தி மொத்தமும் அத்தை எனக்கு சொல்லிட்டாங்க .நீங்க எப்போ என்ன செய்வீங்கனு எல்லாம் தெரியும் .அத்தை என் கட்சி .இந்த மிரட்டல் கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்."

"இது எப்போடி நடந்துச்சு"

"அத்தை கூட டெய்லி பேசுவேன் "

" உன் லாஜிக்ல தீய வைக்க,அத்தை கூட பேசினா மட்டும் ப்ரேக் அப் ஆகாதா ? சதிகாரி .இருக்குடி உனக்கு.உன் அத்தை உன்னை எப்போவும் காப்பாத்த முடியாது. வெயிட் & வாட்ச் "

" கூல் ட்யூட் .இனி கனா காலம் , காதல் காலம் இப்டி எல்லா படமும் ஓட்டலாம் ."

" என்னது ட்யூடா, ஆண்டவா !அமைதியான பொண்ணுன்னு நெனச்சு ஏகமா ஏமாந்துட்டேன் போலயே! சரியான வாயாடிகிட்ட மாட்டி விட்ருக்கியே ! இது அடுக்குமா ?"

"அங்க மட்டும் என்ன வாழுதாம் ,டி போட்டு கூப்படறீங்க .மேல் சாவனிஸ்ட் "

"அடிப்பாவி!இது செல்லம் கொஞ்சல்ஸ்டி."

" இதுவும் செல்லமோ செல்லம் கொஞ்சல்ஸ் ட்யூட் "

" நடத்துடி நடத்து.வட்டியும் முதலுமா இருக்கு உனக்கு "

" ஐம் வெயிட்டிங் "

இதெல்லாம் இவங்க மேரேஜ் ஈவென்ட்ஸ்க்கு இடையில கேப்ல கெடா வெட்டினது.

ரிங் எடுக்கற ஈவென்ட்ல பொண்ணு ரிங் எடுக்க ட்ரை பண்ணவே இல்ல ,பையன் ரிங் எடுத்து பொண்ணு கைல குடுத்தான்.ரெண்டு பெரும் லுக் விட்டு ஒரு ஏக் துஜே கேலியே படமே ஓட்டிட்டாங்க.ஒவ்வொரு ஈவென்ட்க்கும் ஒரு படம் ஓட்டி, அவங்களை ஓட்ட வசதி செஞ்சு குடுத்தாங்க.இப்டியே பேசி கவுண்டர் குடுத்துனு கலகலனு பொழுது ஈஸியா ஓடிருச்சு .

அழுது பிரியும் வைபவத்துல பையன் வந்து ,பயப்படாதீங்க அத்தை,நான் அடி வாங்காம பத்திரமா இருந்துப்பேன்.அப்பப்போ நிலவரத்தை உங்களுக்கு அப்டேட் செய்றேன்,நீங்க கலவரம் ஆகாதீங்கனு சொல்லி நிலைமையை சுமுகமாக்கினான் .

இதெல்லாம் பார்த்திருந்த பொண்ணை, அவனோட தனிமைல விடவும்தான் தடுமாறினா.அவன்மேல் அளவில்லாக் காதலும்,பெண்மையும், மென்மையும்,நாணமும் , நாலாபுறமும் மென்னு தின்னு , தாறு மாறா தடுமாற வச்சுது.

பொண்ணு நிலையையும் முழியையும் பார்த்துட்டு ,அவன் தான் உதவிக்கு வந்தான்.என்னடி பாலைப் பார்த்து பயந்துட்டியா ? இப்படி முழிக்குற.காலைல இருந்து எத்தனை பாலு எத்தனை பழம்.இப்போ சொம்புல பால்.நாம என்ன ராஜ்கிரணா,சொம்புல பால் குடிக்க .அதை விட்டு தள்ளு "

இதைக் கேட்டதும் பொண்ணு சிரிச்சு கொஞ்சம் நார்மல் ஆயிட்டா .

" கொஞ்சம் எழுந்து வாங்க "

" எதுக்குடா "

" ப்ளீஸ் buddy"

எழுந்து நின்னஉடனே பொசுக்குன்னு கால்ல விழுந்து என்னை ப்லெஸ் பண்ணுங்கனு சொன்னா .

ஹேய் என்ன இது ,ரொம்ப சினிமா பார்ப்பியா, எழு மேல ,ஐ் ஹேட் திஸ்.கதை கவிதைலாம் பெமினிஸ்ட் ரேஞ்க்கு இருக்கு .இது என்ன முட்டாள் தனம்"

" நீங்க எனக்கு அம்மாவா இருக்க மாட்டிங்களா ?"

எதிர்பார்க்காத கேள்வில கொஞ்சம் ஷாக் ஆயிட்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.