(Reading time: 74 - 148 minutes)

எல்லாரும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்த நேரம் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் , மெல்ல இன்ஸ்பெக்டர் ரவியின் தோளைத் தொட்டார் . என்னவென்று திரும்பிப் பார்த்தார் ரவி . திடீரென்று , குமார் தன் தலையில் மாட்டியிருந்த தொப்பியை  கழற்றினார் . முன்பிருந்த பதற்றம் துளிகூட இல்லை . தன் காக்கிச் சட்டையில் இருந்த முதல் ரெண்டு பட்டன்களை கழற்ற ஆரம்பித்தார் . ஒரு அசாதாரணமான தைரியம் அவரைத் தொற்றியிருந்தது . தன் போலீஸ் துப்பாக்கியை கையில் எடுத்து இன்ஸ்பெக்டர் ரவியின் முன் நீட்டினார் .

இன்ஸ்பெக்டர் ரவி : (பதற்றமான குரலில் ) என்ன பண்றீங்க குமார் ?

WHAT ARE U DOING ?

(மெல்ல சிரித்தபடி) SORRY சார் ! என்று சொல்லிவிட்டு , தன்னிடமிருந்த தொப்பியையும் , துப்பாக்கியையும் இன்ஸ்பெக்டர் ரவியிடம் கொடுத்துவிட்டு,

JUDGEMENT ஏரியாவை நோக்கி கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார் குமார் .

குமார் ! குமார் ! நில்லுங்க ! என்றே அவரைப்,  பின் தொடர்ந்தார் ரவி .

கேமாராக்காரர்கள் , இந்த காட்சியை நேரலையில்  ஒளிபரப்பினார்கள் .

இப்போது எல்லாருடைய கண்களும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரையே உற்று நோக்கியிருந்தது .

இன்ஸ்பெக்டர் ரவியின் குரலுக்கு , செவி கொடுக்காமல் , வேகமாக உள்ளே சென்றார் குமார் . குமாரின் இந்த விசித்திரமான செயலைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி ,  அவரை தடுக்குமாறு நீதிமன்ற மெய்காப்பாளர்களுக்கு செய்கையால் உத்தரவிட்டார். நீதிமன்ற காவலர்கள் அவரை தடுக்க முற்பட்டனர் . அவர்களை மீறி அவர் உள்ளே நுழைய முயன்றார் . இந்த போராட்டத்தைக் கண்ட நீதிபதிகள் , குமாரை  உள்ளே வர அனுமதித்தனர் .  எந்த வித சலனமும் இல்லாமல் , திடீரென்று குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் சப்-இன்ஸ்பெக்டர் குமார். அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் தொற்றியிருந்தது.

அங்கிருந்த நீதிபதிகளுள் ஒருவர் , ஹ்ம்ம் ! சொல்லுங்க ! எதையோ சொல்ல வந்தீங்க ! தைரியமா சொல்லுங்க !

ஒரு நிமிடம் அமைதியாக கடந்திருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் பேச ஆரம்பித்திருந்தார் .

 MLA மார்த்தாண்டம் போன்ற , அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து ,விடியலுக்காக காத்திருந்த , துடியலூர் மக்களில் நானும் ஒருவன் .   இன்று ஒற்றன் ” என்ற பெயரில் , வேறு வடிவில் வந்திருக்கின்றேன் என்றார் பெருமிதத்தோடு .

நீதிபதிகள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது . உள்ளே அமர்ந்திருந்த சற்குணம் ஐயா , இந்த பதிலைக் கேட்டதும் , மகிழ்ச்சி வெள்ளத்தால் நமச்சிவாயத்தின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் .நம்முடைய குமாரா இதயெல்லாம் செய்தது ? என்று பூரித்துப் போனார்கள் இருவரும். .. இருவருடைய  கண்களிலும் கண்ணீர் தேங்கியிருந்தது . ......

இருண்டு போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .  குமார் ஒற்றனா ?????????? புரியாத புதிராய் இருந்தது அவருக்கு சட்டென்று , அங்கிருந்த நாற்காலியில் பிரம்மை பிடித்தவர் போன்று அமர்ந்திருந்தார் .

இதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த புண்ணியகோடியின்இதயத்துடிப்பு , ஒரு நிமிடம் நின்று , மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியிருந்தது தன் 27 வருட அரசியல் வாழக்கையில் அவர் கண்டிராத ஒரு அதிர்ச்சி . தன்னை சுயநினைவுக்கு கொண்டு வரவே சில நிமிடங்கள் ஆயிருந்தன .

வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த , கோர்ட் வளாகமே ஒரே இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது . ஒற்றன் ! ஒற்றன் ! என்ற குரல்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருந்தது . இரண்டு நிமிடங்களாகியும் ஆரவாரம் அடங்கியபாடில்லை . காவலர்கள் கூச்சலைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தார்கள் .நிலைமையை உணர்ந்த குமார் , கேமராவைப் பார்த்து தன் கையை கீழ்நோக்கி அசைத்தார். அடைமழை பேய்ந்து ஓய்ந்ததைப் போல ஆரவாரம் தணிந்திருந்தது .

அங்கிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர் , தன் விசாரணையை தொடங்கியிருந்தார் .

வழக்கறிஞர் : என்னதான் ! உங்க போராட்டத்தோட நோக்கம் , நியாயமானதாக இருந்தாலும் ,........ அது சட்ட விரோதமானதுன்னு உங்களுக்கு தெரியாதா ?

ஒற்றன் : ஏன் ? குருசேத்திர யுத்தத்தில கூட தான் , தர்மத்த காப்பாத்தறதுக்காகசில முரணான வழிகள் தேவைப்பட்டுச்சு .....  ஐயா...... !   சட்டத்துக்கு புறம்பா நடக்குற சில விசயங்களுக்கு  ,அதோட வழியில தான் நாம முற்றுப்புள்ளி வச்சாகணும் .

வழக்கறிஞர் : அதுக்காக நீங்க என்ன செஞ்சாலும் அது நியாயமாகிடுமா ? ஒரு பொறுப்பான போலீஸ் ஆபீசர் நீங்க .. நீங்களே இப்படி பண்ணீங்கன்னா ? பொதுமக்களுக்கு எப்படி காவல்துறை மேல நம்பிக்கை வரும் ?   

ஒற்றன் : போலீஸ்காரன்னு வேணும்னா சொல்லுங்க ! . ஆனால் பொறுப்பான  போலீஸ்காரன்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க . எங்கய்யா ! எங்களோட பொறுப்புகள பார்க்க விட்டாங்க ?     என்னைக்கு இந்த காக்கிச் சட்டையப் போட ஆரம்பிச்சோமோ ! அன்னிக்கே இந்த பொறுப்பு , பருப்பு எல்லாத்தையும் குழி தோண்டி , பொதச்சுட்டுத் தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் .  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.