(Reading time: 74 - 148 minutes)

என பல கேள்விகள் அவரின் சிந்தனைகளை சிதைத்துக் கொண்டிருந்தது . அந்த நேரம் பார்த்து செல்போனில் இருந்து அழைப்பு வந்தது . BLUETOOTH HEADSETல் , CALLஐ அட்டென்ட் பண்ணினார் . மறுமுனையில் இன்ஸ்பெக்டர் ரவி இருந்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹலோ !  குமார் ! எங்க இருக்கீங்க ?

சப் –இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! நான் பைக்ல வந்துட்டு இருக்கேன் . 15 MINUTESல அங்க இருப்பேன் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஓகே ! DONE என்று இணைப்பைத் துண்டித்தார் .

போனை கட் பண்ணிவிட்டு , வண்டியின் வேகத்தைக் கூட்டினார் .

15 நிமிடப் பயணம் கோவை நீதிமன்ற வளாகத்தை அடைந்தார் குமார் .

மணி 7-ஐ தாண்டியிருந்தது . நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் , துப்பாக்கியேந்திய போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர் . அங்கே நின்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஓடி வந்து GOOD MORNING சார் என்று SALUTE அடித்தார் .

சப் –இன்ஸ்பெக்டர் குமார் : GOOD MORNING இன்ஸ்பெக்டர் எங்க இருக்கார்?

போலீஸ் கான்ஸ்டபிள் : சார் ! அங்க INSTRUCTIONS குடுத்துட்டு இருக்கார் சார் என்று கையைக் காட்டினார் .

ஓகே ! நான் பாத்துக்குறேன் என்று சொல்லி இன்ஸ்பெக்டர் ரவியை நோக்கி நடந்தார் குமார் .

கும்பலாக நின்றுகொண்டிருந்த போலீசாருக்கு நடுவே , கம்பீரமாக பேசிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

“ கோர்ட் வளாகத்த சுத்தி ,  ரெண்டு கிலோமீட்டருக்கு முன்னாடியிருந்தே , அங்க போற வர்ற , எல்லாம்  வண்டி NUMBERSயும் NOTE பண்ணிட்டு, தரவா செக் பண்ணுங்க  . MEANWHILE WIRE–LESS DEVICEல எதாருந்தாலும் அப்டேட் பண்ணீட்டே இருங்க . சந்தேகப்படற மாதிரி யாராக இருந்தாலும் ARREST பண்ணுங்க . பத்திரிகைக்காரங்களையும் , இந்த கேஸ்க்கு சம்பந்தப் பட்டவங்கல மட்டும் உள்ள அனுப்புங்க .எக்காரணத்தக்கொண்டும் பொதுமக்கள JUDGEMENT ஏரியாக்குள்ள  அனுப்பாதீங்க . BE ALERT . DISPERSE என்று முடித்தார் .

அந்த நேரம் பார்த்து , சப்-இன்ஸ்பெக்டர் குமார் , GOOD MORNING சார் ! என்று SALUTE அடித்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : GOOD MORNING ! ஏன் குமார் இவ்ளோ LATE பண்ணீட்டீங்க ?

சப்–இன்ஸ்பெக்டர் குமார் : I’M SORRY சார் ! இன்னிக்கு கொஞ்சம் LATE ஆயிடுச்சு

இன்ஸ்பெக்டர் ரவி : இட்ஸ் ஓகே ! COME ON ! நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு என்று இருவரும் CCTV MONITORING  ஏரியாவை நோக்கி நடந்தார்கள்.

நேரம் மணி 7.3௦ ஆயிருந்தது . நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே , சைக்கிள்களில் டீ வியாபாரம் பிரமாதமாக போய்க்கொண்டிருந்தது .  ஆங்காங்கே வக்கீல்கள் கூட்டம் போட்டு , இந்த வழக்கைப் பற்றி காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள் . மீடியாக்காரர்கள் தனித் தனி குழுக்களாக அங்கே முகாமிட்டு இருந்தனர்  . நீதிமன்ற நடவடிக்கைகளை, நேரலையாக (LIVE TELECAST)  பொது மக்களுக்கு தொகுத்து வழங்குவதற்கான , ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் . இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்களும், பொதுமக்களும் நேரம் ஆக ஆக , ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள் . மீடியாக்கள் அவர்களை விடாப்பிடியாக பேட்டியெடுத்துக் கொண்டிருந்தனர் . கோர்ட் வளாகத்தில் மிகப்பெரிய திரை (SCREEN) ஒன்று வைக்கப்பட்டிருந்தது . இதுவரை அந்த திரையில் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை . கொஞ்ச நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் கடலாக திரண்டிருந்தது . பாதுகாப்பு கவசங்களுடன் கூடிய போலீஸ்காரர்கள் , பொதுமக்களை கட்டுப்படுத்த தொடங்கினர் .   இப்படி கோர்ட் வளாகமே ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது .

மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணனும் , ‘ நிதர்சனத்தின் மறுபக்கம் ’ விஜயனும் , கோர்ட் வளாகத்திலேயே , தங்களுடைய நேரலை நிகழ்ச்சியை தொடங்கியிருந்தனர் .

காதில் சொருகியிருந்த WIRE-LESS மைக்கை சரிபார்த்து விட்டு , கேமராமேனுக்கு முன்னால் , பேச ஆரம்பித்தார் விஜயன் .

அனைவருக்கும் வணக்கம் ! நேரம் காலை 8 மணி ஆகின்றது .  மின்னல் டிவி நிகழ்ச்சிக்காக , கோவை நீதிமன்ற வளாகத்தில் இருந்து , உங்களின்    ‘ ‘  நிதர்சனத்தின் மறுபக்கம் ‘  விஜயன் பேசுகிறேன் .

‘ எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகலாம் . சில சமயங்களில், ஏமாற்றமே எதிர்பார்ப்பாக இருக்கலாம் . ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமே , ஒற்றன் என்ற தனிமனிதனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது .

இன்று காலை GOOGLE-ல் , தமிழகத்தால் , அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் , ஒற்றன் என்கிற வார்த்தை (WORD) முதல் இடம்பெற்றுள்ளது . இன்று காலை 1௦ மணிக்குள் ஒற்றன் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்துள்ளது . வருகின்ற சட்டமன்ற தேர்தலில் , ஒற்றனின் தாக்கம் , ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்தும் என்று , அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் , தங்களுக்கான ஒரு தலைவனை கண்டுவிட்டதாகவே , இளைஞர் பட்டாளம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றது  . இப்படி கோவை நீதிமன்ற வளாகமே , மக்கள் வெள்ளத்தில் , மிதப்பது போல் இருக்கின்றது  இப்போது நீங்கள் பார்க்கும் காட்சி . நிச்சயம் ஒற்றன் வருவான் என்கின்ற நம்பிக்கை அலை மட்டும் இங்கு பரவலாக வீசிக்கொண்டிருக்கின்றது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.