(Reading time: 74 - 148 minutes)

இன்னிக்கு வரைக்கும் ,அரசியல்வாதிகளோட அடிமாடாத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .கிரிமினல்-குற்றம் பண்ணவனெல்லாம் , இன்னிக்கு அரசியல்வாதிகளோட சிபாரிசுல , வெளியில சுதந்திரமா நடமாடிக்கிட்டு இருக்காங்க . எங்கள நேருக்கு நேர் பார்த்து சவால் விட்றானுங்க .எதிர்த்து கேட்டா , தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு பயமுறுத்தறாங்க .

வழக்கறிஞர் : அதெல்லாம் இருக்கட்டும் .  ஏன் ? நீங்க நேர்மையான வழியில இந்த  போராட்டத்த தொடங்கியிருக்கலாமே ?

ஒற்றன் : நேர்மையான வழி .... (உரக்க சிரித்தார் குமார் ...)

அங்க பாருங்க !  என்று சற்குணம் ஐயாவை நோக்கி , கையைக் காட்டினார் .

அதோ , நேர்மையான வழியில போராடின , என்னோட தமிழ் வாத்தியார பாருங்க .......

இச்சகத்துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் ,             துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் ,                     உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் ,                    அச்சமில்லை  !  அச்சமில்லை  ! அச்சமென்பதில்லையே !  என்று எங்களுக்கு சொல்லிக்குடுத்த அந்த மனுசனப் பாருங்க .            கிட்டத்தட்ட அவர நடக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டானுங்க . அறவழியில போராடி இதுவரைக்கும் நாம என்ன சாதிச்சோம்  நீங்களே சொல்லுங்க ?

வழக்கறிஞர் : (யோசித்துவிட்டு .... ) அறவழியில போராடித்தான் , நாம சுதந்திரமே வாங்கணும் .

ஒற்றன் : சட்டம் படிச்ச நீங்களே ....  இப்படி பதில் சொல்றது ஆச்சர்யமா இருக்குது . அறவழியிலயா நாம சுதந்திரம் வாங்கினோம் ?  நல்லா யோசிச்சு பாருங்க .   வீரபாண்டிய கட்டபொம்மன் .... நேதாஜி .... பகத்சிங் .... போன்றவர்கள் எல்லாம் , இன்றைக்கு மறைக்கப்பட்ட வரலாறுகள் .  நாட்டோட விடுதலைக்காக இன்னும் எத்தனயோ பேர் தன்னோட உயிரைக்கூட பொருட்படுத்தாம போராடியிருக்கிறார்கள்  .  அவங்களோட தன்னலமற்ற உயிர் தியாகத்தாலதான், இன்னிக்கு நாம சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் அத விட்டுட்டு,  இன்னும் அறப்போராட்டம் , அகிம்சைனு நாம பேசிட்டு இருக்கோம் .காரணம் அரசியல் தான் . ஒற்றனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் வெளியே கைதட்டல்கள் அதிகரித்திருந்தது . தமிழ் ஆசிரியர்களால் தான்இன்றைக்கும் நமது நாட்டில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றது .

அவர்களுடைய கோபம் சாதாரணமானது அல்ல , என்பதற்காகத் தான் இந்த போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்தோம் .

கடந்த ஜனவரி 26 , நான் படித்த துடியலூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் ,  குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தது . அதில் நானும் எனது பள்ளித் தோழர்களான விஜயனும் , மலர்விழியும் கலந்து கொண்டோம் .அப்பொழுது தான் MLA மார்த்தாண்டம் அங்கு நடத்துகின்ற அட்டூழியங்கள் அனைத்தையும் நாங்கள் தெரிந்து கொண்டோம் MLA மார்த்தாண்டத்துக்கு , தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று நானும் ,விஜயனும் முடிவு செய்தோம் . அதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தோம் திடீரென்று ஒரு நாள் மலர்விழி எங்களுக்கு போன் பண்ணியிருந்தாள் . அறிவியலில் அதீத ஆர்வம் கொண்ட அவள் , பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் இருந்த அக்டோசின் ரசாயனத்தின் உண்மையைக் கண்டுபிடித்திருந்தாள் இது எங்களின் போராட்டத்துக்கு அதிகம் வழு சேர்த்திருந்தது .

சில வருடங்களுக்கு முன் ,  அமெரிக்காவில் நடந்த சர்வதேச பாதுகாப்பு தின விழாவில் , கலந்துகொள்ள எனக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது .       அதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் .  அதில் சிரியாவைச் சேர்ந்த ஒருவரின் ,அறிமுகம் எனக்கு கிடைத்தது . நாளடைவில் அது நட்பாக மாறியது .

ஒற்றன் இணையத்தளம் உருவாவதற்கு , எனக்கு அவன் தான் உதவி புரிந்தான் ISIS இயக்கத்தின் பிடியில் சிரியா இருந்த போதும் கூட எனக்காக அவன் இந்த உதவியை செய்தான் . இணையதளத்துக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நான் அவனுக்கு , E-MAIL மூலமாக அவனுக்கு UPDATE பண்ணிருவேன் . அவன் அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவான் . இப்படித்தான் WWW.ஒற்றன்.COM உருவானது .

ஏப்ரல் 3௦ சனிக்கிழமை இரவுMLA மார்த்தாண்டத்தை நாங்கள் கடத்தினோம் .

இன்று மார்த்தாண்டமும் டிரைவர் கதிரேசனும் என்னுடைய வீட்டில்தான் நலமாக இருக்கிறார்கள் .

இன்னும் பல முகத்திரைகள் கிழிக்கப்படவிருக்கின்றன . இதோ இந்த ஆடியோவ கேளுங்க .  கோர்ட் வளாகத்திலேயே என்னை கொலை செய்ய,  என்னிடமே ஆயுதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஒரு அமைச்சர் .     இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படி இருக்கின்றது என்பதற்கு இந்த ஆடியோ ஆதாரமே ஒரு சாட்சி என்று பாக்கெட்டில் இருந்து ஒரு PENDDRIVE-ஐ குடுத்தார் .

மறுமுனையில் ஆடியோ ஆதாரம் PLAY ஆனது .

புண்ணியகோடியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் பேசிய பேச்சுக்கள் அதில் பதிவாயிருந்தன . நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது .

நான் செய்தது சட்டம் ஒழுங்குக்கு முரணானது தான் என்கிறீர்கள் .இப்பொழுது சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் புண்ணியகோடி , பேசியபேச்சுக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகுறீர்கள் ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.