(Reading time: 74 - 148 minutes)

அமைச்சர் புண்ணியகோடி : இல்ல ! குமார் !. அடுத்த மாசம் ELECTION வேற வருது .  ஏற்கெனவே அவனுக்கு மக்கள் சப்போர்ட் கொஞ்சம் அதிகமாவே இருக்குது . அவன் நாளைக்கு கோர்ட்ல பேசுற , ஒவ்வொரு வார்த்தைக்கும் , பல லட்சம் ஓட்டுகள் கைமாறும்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க  . என்னோட 27 வருஷ அரசியல் வாழ்க்கைக்கு , வெறும் மூனே (3) நாள்ல முற்றுப்புள்ளி வச்சுட்டான் . இந்த 27 வருசத்துல , இன்னிக்குத்தான், முதல் முறையா , நான் இல்லாம, ஒரு அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்குது . கூட்டத்துல எனக்கு எதிரா பல முடிவுகளை எடுத்திருக்காங்க . இத இப்படியே விட்றக்கூடாது . என்னோட அரசியல் வாழ்க்கையை , காலி பண்ண அவன, நான் காலி பண்ணியே ஆகணும் .அரசியல்வாதின்னா அடிப்படையிலியே கிரிமினல்னு அவனுக்கு நாம காட்டனும் . அதுக்கு நீ தான் எனக்கு உதவி பண்ணனும் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : (அவருடைய பேச்சில் இருந்த வலியை குமாரால் புரிந்துகொள்ள முடிந்தது ....சொல்லுங்க ஐயா !. நான் என்ன பண்ணனும் நீங்க நெனைக்கிறீங்க ?.

அமைச்சர் புண்ணியகோடி : கோர்ட் வளாகத்திலயே அவன நாம சொர்க்கத்துக்கு அனுப்பனும் ..உன்ன மட்டும் தான் நான் நம்பி வந்துருக்கேன்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! இதுனாலே எனக்கெதாவது பிரச்சனை வந்துச்சுன்னா ? என்ன பண்றது ?

அமைச்சர் புண்ணியகோடி : உனக்கு ஒரு பிரச்னையும் வராது . வராம நான் பாத்துக்குறேன் . எனக்கு இந்த ஒரு உதவியும் மட்டும் பண்ணீட்டீனா ! வாழ்நாள்ல, நீ நெனச்சுப் பார்க்க முடியாத, ஆடம்பர வாழ்கையை நான் உனக்கு பரிசா தர்றேன் . 

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : அதெல்லாம் இருக்கட்டுங்கய்யா .  எப்படி இத பண்ண முடியும்னு நெனைக்கிறீங்க ? கோர்ட்ட சுத்தியும் போலீஸ் பாதுகாப்பு இருக்கு . இதுக்கும் மேல கண்காணிப்பு கேமெராக்கள் வேற இருக்கு . இது எல்லாத்தையும் மீறி அவன எப்படி சார் நம்ம க்ளோஸ் பண்ண முடியும் ?

அமைச்சர் புண்ணியகோடி : போலீஸ் பாதுகாப்ப மீறி , அவன ஒன்னும் பண்ண முடியாது . அதனாலதான் , இப்ப போலீஸ வெச்சே அவன் கதைய முடிக்கலான்னு முடிவு பண்ணீருக்கேன் . அது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டம் கெடையாது . காந்தியடிகளோட கத்தியின்றி இரத்தமின்றி FORMULAவத்தான் இங்க நாம USE பண்ணப் போறோம் . இது என்னென்னு தெரியுதா ? என்று கையைக் காட்டினார் . மிகவும் சிறிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஊசி (INJECTION) அவர் கையில் இருந்தது . கால் சுண்டுவிரல் அளவே இருந்த அந்த ஊசியில் மருந்தும் நிரப்பப்பட்டிருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : என்னங்கய்யா இது விஷ மருந்தா ?  

அமைச்சர் புண்ணியகோடி : நீ நெனைக்கிற மாதிரி இது சாதாரண மருந்தில்ல . நாட்டு வைத்தியத்துல கைதேர்ந்தவர்களால் தயார் பண்ண , ஒரு கொடும் விஷம் . இதுல, ஒரு இம்மி அளவு, நம்ம ரத்தத்துல கலந்தா போதும் . பத்தே நிமிஷத்துல யாராயிருந்தாலும் பரலோகந்தான் .  அவன கோர்ட்க்குள்ள PRODUCE பண்றதுக்குள்ள, இத நீ அவன் உடம்புல செலுத்தனும் . கூட்டத்துக்கு மத்தியில, அவன இழுத்துட்டு வரும்போது இந்த வேலையை சத்தமே இல்லாம நீ முடிச்சிடு . எறும்பு கடிக்கிற மாதிரி தான் இருக்கும். .அவனுக்கும் பெருசா ஒன்னும் தெரியாது . லைட்டா ஒரு உணர்வு இருக்கும் அவ்ளோதான் . இன்னொரு விஷயம் இதுக்கு மாற்று மருந்தே கிடையாது .

தப்பித்தவறி கூட உன் உடம்பில எங்கயாச்சும் பட்டுறப்போகுது .அதுக்கப்புறம் உனக்கு மலர்வளையம் வைக்கவேண்டி வந்துரும் ஜாக்கிரதை. OCTOSIN ரசாயனத்தாலதான் நெறைய பேர் செத்தாங்கன்னு கண்டுபிடிச்சான்ல, இப்ப அவன் எப்படி சாகப்போறான்னு அவனுக்கே தெரியாம அவன் சாகனும்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! உங்களுக்காக நான் இத பண்றேன் .ஆனா ! எனக்கு இன்ஸ்பெக்டர் ரவிய நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு . அந்தாளு கொஞ்சம் தொல்ல புடிச்சவரு . கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிசிடுவான் .

அமைச்சர் புண்ணியகோடி : கிழிப்பான் ! அவனால ஒன்னும் பண்ண முடியாது. அதத்தெரிஞ்சுதான இந்த வேலையை உன்கிட்ட ஒப்படைச்சேன் .

நீ கவலைப்படாம இந்த வேலையை முடி . மத்தத நான் பாத்துக்குறேன் .என்று சொல்லிவிட்டு தன் சகாக்களுடன் கெளம்பினார் .

கையில் இருந்த ஊசியை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு , நாளை நடக்கப் போகும் சம்பவங்களை நினைத்துக்கொண்டே மெத்தையில் படுத்தார் . பல விதமான சிந்தனைகள் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது . நேரம் நள்ளிரவு 1 மணியைக் கடந்ததும் ,  கடைசியாக தூக்கம் அவர் கண்களை எட்டிப் பார்த்தது .        


டுத்த நாள் காலை 6 மணி . அலாரம் அடிக்கத் தொடங்கியிருந்தது .திடீரென்று விழித்து மணியைப் பார்த்த குமார் , மட மட வென்று எழுந்து , கிளம்பும் வேளைகளில் இறங்கினார் . சரியாக 6:3௦க்கு , குமாரின் டுவீலர் , புகையை கக்கிக் கொண்டு பறந்தது . நெடுஞ்சாலைகளை பனி மூழ்கியிருந்தது . வழி நெடுகிலும் ஒரு வித பயம் அவரைத் தொற்றியிருந்தது . இந்த வேலையை நம்மால் முடிக்க முடியுமா ? ஏதேனும் பிரச்சனை வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.