(Reading time: 74 - 148 minutes)

ஒற்றன் வெளியிட்ட தகவல்களில் , உங்க ஹாஸ்பிடலோட பிரேத பரிசோதனை REPORTடும் இடம்பெற்றிருக்கு . உங்களோட அனுமதி இல்லாம அந்த ரிப்போர்ட் வெளியுலகதுக்கு போயிருக்கவே முடியாது .

நீங்க சொல்லப் போற பதில வெச்சுத்தான் , விசாரணையை இங்க வெச்சுக்கலாமா ? இல்ல ஸ்டேஷன்ல வெச்சுக்கலாமான்னு  முடிவு பண்ணனும் .

டாக்டர் குணசேகரன் : சற்று வியர்வை வழிந்த முகத்துடன் ,

சார் ! நானே இந்த உண்மையை உங்ககிட்ட முன்னாடியே சொல்லலாம்னு தான் இருந்தேன் என்று ஆரம்பித்தார் .................... . சரியா !  ஒரு மாசத்துக்கு முன்னாடி , ஒரு பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ட நான் செக் பண்ணும்போது, அந்த DEAD BODYயோட உடம்புல  ஆக்டோசின்ங்கற நச்சுப்பொருள் அதிகமாக கலந்து இருக்கிறது  எனக்கு தெரிய வந்துச்சு .அது மனிதனுக்கு அதீத போதை ஏத்துற ரசாயனம் .   வெளி நாட்ல உபயோகிக்க தடை செய்யப்பட்டது . அப்ப இந்த மேட்டர நான் பெருசா எடுத்துக்கல .BUT அடுத்தடுத்து இதே மாதிரி ரெண்டு மூணு ரிப்போர்ட் எனக்கு வந்துச்சு . அப்பத்தான் நான் இதோட ROOT CAUSE FIND பண்ண ஆரம்பிச்சேன் . அதுக்கு காரணம் மார்த்தாண்டத்துக்குச் சொந்தமான, ‘ WHINESHINE ‘ நிறுவனத்தோட மதுபானம் தான்னு, நான் கடைசியா கண்டுபுடிச்சேன் . அதுல தான் இந்த கெமிக்கல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கு . இது வெளி உலகத்துக்கு தெரியறதுக்கு முன்னாடி , இது விஷயமா நான் மார்த்தாண்டத்துக்கிட்ட உண்மைய சொல்லலாம்னு நினைக்கும்போதுதான் , அவர் கடத்தப்பட்ட விசயமே எனக்கு தெரிய வந்தது . ஆனா நேத்து எப்படி அந்த POST MORTEM ரிப்போர்ட் , ஒற்றன் கிட்ட போச்சுன்னு எனக்கு தெரியாது . INFACT , அந்த மேட்டர் எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு . நானும் ஹோஸ்பிடல்ல நெறையா பேர் கிட்ட விசாரிச்சுப் பார்த்துட்டேன் . ஒரே மர்மமா இருக்கு.  சத்தியமா ! எனக்கும் அந்த ஒற்றன் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ..

இன்ஸ்பெக்டர் ரவி : ஓகே ! POST MORTEM ரிப்போர்ட்ட HANDLE பண்ற உங்க டீம நாங்க விசாரிக்கலாமா ?

டாக்டர் குணசேகரன் :  SURE சார் ! என்று சொல்லி பக்கத்தில் இருந்த டெலிபோனில் நம்பரைத் தட்ட மறுமுனையில் கால் போனது .

HEAD NURSE சகுந்தலா எடுத்து பேசினாள் .

எஸ் ! டாக்டர் .

டாக்டர் : NURSE சகுந்தலா ! உங்க TEAMAH கூட்டிட்டு உடனே வாங்க என்றார்.

பத்து நிமிடத்திற்குள் , HEAD NURSE சகுந்தலாவுடன் , JUNIOR நர்சுகள் பிரியா , ஸ்ரீநிதி, மலர்விழியும் ஆஜரானார்கள் . காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயந்திருந்தாள் பிரியா . இன்ஸ்பெக்டர் ரவியும் ,டாக்டர் குணசேகரனும் நர்சுகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தனர் .

மலர்விழியும் , ஸ்ரீநிதியும் பரபரப்பில்லாமல் , கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர் . பிரியாவிடம் இது பற்றி விசாரிக்கும்போது , அவளுடைய பதில்களில் இருந்த பதற்றம் , அவர்களுக்கு சந்தேகத்தை அதிகரித்தது .

அந்த நேரம் பார்த்து இன்ஸ்பெக்டர் – ரவியின் செல்போன் கதறியது .

எடுத்துப் பார்த்த அவர் முகம் சுளித்தார்  .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : யார் சார் ? போன்ல ?

இன்ஸ்பெக்டர் ரவி : MINISTER புண்ணியகோடி ......................எப்படியும் இப்ப நாம திட்டு  வாங்க தான் போறோம் ..

கடைசியில் PHONE-ஐ அட்டென்ட் பண்ணினார் .

அமைச்சர் புண்ணியகோடி : ஹலோ ! MR ரவி அவர்களே ! என்ன பண்ணீட்டு இருக்கீங்க ? என்றார் நக்கலாக .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! நாங்க சஞ்சீவி ஹோஸ்பிடல்ல , ஒற்றன் கேஸ் சம்பந்தமா விசாரிச்சுட்டு இருக்கோம் .. கிட்ட நெருங்கிட்டோம் சார் .எப்படியும் ஒற்றன் யாருங்கறத இன்னிக்குள்ள கண்டுபிடிசிடுவோம் சார்.

அமைச்சர் புண்ணியகோடி : கிழிச்ச ! இதுவரைக்கும் ஏதாவது ஒரு தடயமாவது கண்டு புடிச்சியாயா ? நீயெல்லாம் எதுக்குயா போலீஸ் வேலைக்கு வந்த ? வெக்கமா இல்ல. மாசமாசம் சம்பளம் வாங்குறியே , அதுக்கான வேலைய ஒரு நாலாவது பாத்துருக்கியா இந்த கேஸ்ல .இதுக்கப்புறம் நீ அங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம் .

மொதல்ல நியூஸ பாரு . ஒற்றனுக்கு சாதகமா கோர்ட்டே தீர்ப்பு சொல்லிருச்சு . நாளைக்கு காலைல 10 மணிக்கு , மார்த்தாண்டத்த கூட்டிட்டு ஒற்றன், கோர்ட்ல சரணடையனும்னு COURT ORDER போட்ருக்கு .SO, நீ எண்ண பண்றனா ,  COURT க்கு வெளில பாதுகாப்பு ஏற்பாடுகள மட்டும் நீ கவனிச்சா போதும் .  இன்னும் அங்கிருந்து கண்டுபுடிக்கிறேன் , கிழிக்கிறேன்னு டைம் வேஸ்ட் பண்ணாத . உன்னமாதிரி ஒரு வெத்துவேட்டு கிட்ட போய் கேஸ ஒப்படைச்சேன் பாரு , என்ன சொல்லணும் . போன கட் பண்னுயா ! என்று இணைப்பைத் துண்டித்தார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : என்ன சார் ஆச்சு ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஒற்றனுக்கு சாதகமா தீர்ப்பு வந்துருக்காம் .நாளைக்கு காலைல 10 மணிக்கு ஒற்றன் கோர்ட்ல SURRENDER ஆகணுமாம் . அதுக்கு நாம பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கனும்னு அமைச்சர் புண்ணியகோடி சொல்றாரு .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.