(Reading time: 74 - 148 minutes)

அவர்களின் நிபந்தனைகள் என்ன ?  என்பது பற்றி நம்பகமான தகவல்கள் இதுவரை ஒற்றனிடமிருந்து இல்லை . அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமை காப்போம் . இவ்வளவு தான் இப்போதைக்கு எங்களிடம் உள்ள பதில் . SO PLEASE CO-ORDINATE WITH US என்று சொல்லிக்கொண்டு இடத்தைக் காலி செய்தார் புண்ணியகோடி.

ஒற்றன் விவகாரம் – அமைச்சரின் பரபரப்புப் பேட்டி என்று இந்தியாவின் அனைத்து தொலைக்காட்சி தலைப்புச்செய்திகளிலும் புண்ணியகோடியின்  ஆவேசப் பேட்டி இடம்பெற்றிருந்தது .

சார் ! CM ஆபீஸில் இருந்து போன் பண்ணீர்ந்தங்கா ! இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு ஒரு அவசர மீட்டிங் SCHEDULE பண்ணீருக்காங்க .என்றார்

புண்ணியகோடியின் P.A .

ஹ்ம்ம் . ஓகே !  பாத்துக்கலாம் என்றார் புண்ணியகோடி .                           


மின்னல் டிவி நிறுவனம்” வடக்கு கோயம்பத்தூரின் (வடகோவை) மையத்தில் அமைந்துள்ளது . எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் , உள்ளதை உள்ளபடி , உண்மை நிலவரங்களை உடனுக்குடன், பொது மக்களுக்கு வெளிபடுத்தக் கூடிய ஒரு பொழுதுபோக்கு நிறுவனம் “மின்னல் டிவி” என்று அதன் PROMO SONG அந்த நிறுவனத்தை வெளிப்படுத்தியது .

பல பிரச்சனைகள் , மிரட்டல்கள் , வழக்குகள் என அனைத்தையும் தாண்டி , பொது மக்களுக்கு உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்பதையே குறிக்கோளாய் கொண்டிருந்தார் அதன் நிறுவனர் நாராயணன் . அதன் காரணமாகவே அந்த சேனலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது . குறிப்பாக இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் “ நிதர்சனத்தின் மறுபக்கம் “ என்கிற நேரலை நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே கிளம்பியிருந்தது . காரணம் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜயன் . அந்த நிகழ்ச்சியில் , ஒவ்வொரு நாளும் ஒரு பொதுப் பிரச்சனையை மையமாக வைத்து கருத்தரங்கம் நடைபெறும் .

பிரச்சனைக்கு சம்பந்தப் பட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அவர்கள் ஒரு அரசியல் தலைவர் , அல்லது நடிகர் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களின் மீது, பிரச்சனைகளை மையமாக வைத்து, விஜயன் சரமாரியாக கேள்விகளை வீசுவார் .அவரின் ஒவ்வொரு கேள்வியும் மக்களின் மன பிம்பத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கும் . பல பிரபலங்கள் , இந்த நிகழ்ச்சியின் மீதுள்ள பயத்தால் , நிகழ்ச்சியைத் தவிர்த்திருக்கிறார்கள் .

காலை 11 மணி . மின்னல் டிவி நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது . “ நிதர்சனத்தின் மறுபக்கம் “ என்று பெயர் பொறிக்கப்பட்ட அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் விஜயன் . உள்ளே பல பணியாளர்கள் மழைக்கால எறும்புகள் போல் வேகமாக செயல்பட்டு கொண்டிருந்தார்கள் . விஜயன் சென்று CHAIR-இல் உக்கார்ந்த அடுத்த வினாடி,

எடிட்டிங் டீமில் இருந்து ஒருவன் வந்து ,

சார் ! உங்கள M.D உடனே மீட் பண்ணனும்னு சொன்னார் .

விஜயன் : ஓகே . I’LL MEET HIM . தேங்க்ஸ் .

சற்று நேரம் , யோசித்து விட்டு MD நாராயணன் ரூமை நோக்கி நடந்தான் விஜயன் .

நாராயணன் . MANAGING DIRETOR . மின்னல் டிவி. என்ற பெயர் பலகை தொங்கிக் கொண்டிருந்தது . அந்த ரூமின் கதவை திறந்து , சார் ! MAY I GET IN ? என்றான் .

உள்ளே இருந்த நாராயணன் , எஸ் ! PLEASE என்றார் .

நாராயணன் :  விஜயன் , நம்ம நிதர்சனத்தின் மறுபக்கம் நிகழ்ச்சிக்கு , ஒரு அருமையான SCRIPT வந்திருக்கு . CAN U GUESS IT ?

விஜயன் : சார் ! அது விசயமாத்தான் நான் உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சேன் . BUT  நீங்களே கேட்டுடீங்க . அந்த ஒற்றன் விவகாரம் பத்தி தான சொல்றீங்க .

நாராயணன் : YES . அதே மேட்டர்தான் . ஒற்றனோட அடுத்த MOVE என்னனு தெரிஞ்சுக்க  நாடே மிகப் பெரிய எதிர்பார்ப்போடு காத்துகிட்டு இருக்கு .

விஜயன் : சார் ! ஒற்றன் சம்பந்தப்பட்ட எல்லா DETAILS’ம் நான் ALREADY COLLECT பண்ணிட்டு தான் இருக்கேன் . தமிழ் நாட்ல இப்ப நடக்குற ஆட்சியில , பண்ணாத அட்டூளியங்களே கிடையாது . அரசாங்கத்த எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாலும் , அவங்க மேல தேச துரோக வழக்கு பதிவு பண்ணி , ஜெயில்ல போட்ற அளவுக்கு வந்துட்டாங்க சார் ! . கருத்து சுதந்திரமே இல்ல . பொது மக்களுக்கே , இந்த ஆட்சி மேல வெறுப்பு அலை உருவாயிருக்கு . சரியான நேரத்துல தான்  சார் ! ஒற்றன் , தடம் பதிச்சிருக்கான் . இனி ஒற்றனோட ஒவ்வொரு நடவடிக்கையையும் CAPTURE பண்ணி, ஜனங்களுக்கு ஒற்றன் மேல ஒரு  நம்பிக்கை, வர்ற மாறி பண்ணப் போறேன் .  இனி நம்ம அடுத்த TARGET – ஒற்றன் தான் .

நாராயணன் : ஓகே . U TAKE CARE . ஜனங்களுக்கு உண்மைய எடுத்து சொல்லு . என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்கிறேன் .

விஜயன் : எஸ் ! சார் ! WE WILL DO IT ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.