(Reading time: 74 - 148 minutes)

என்ற பாரதியாரின் வைர வரிகளை , இன்று நான் அவர் வடிவில் நேரில் காண்பதைப் போல உணர்கின்றேன் . . அவர் வேறு யாரும் அல்ல .துடியலூர் அரசுப் பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சற்குணம் . ஒரு சமானியனின் கோபம் சாதாரணமானது அல்ல என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காகவே எங்களின் இந்த முயற்சி . ஆளுங்கட்சியின் இப்படிப்பட்ட அராஜகங்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கவே இந்த ஒற்றன் என்கிற இயக்கம் தமிழகத்தில் கால் ஊன்றியுள்ளது .ஆளுங்கட்சியின் பல முகத்திரைகள் கிழிக்கப் பட விருக்கின்றன .ஆனால் எங்களுக்கும் அந்த பெரியவர் சற்குணத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை . தயவுசெய்து விசாரணை என்கின்ற பெயரில் , அந்த பெரியவரைத் துன்புறுத்தாதீர்கள் . இத்தோடு முடிந்து விடவில்லை எங்கள் போராட்டம் . ஒரு மிகப்பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய சமயம் வந்துவிட்டது . கடந்த சில மாதங்களாக துடியலூரை உலுக்கிய சில தீடீர் மர்ம மரணங்கள் ! . காரணம் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தோமே ! . அதை ஆராய்ந்து பார்த்த போது தான்,  அதில் இருந்த மிகப்பெரிய உண்மை புலப்பட்டது .இறந்தவர்கள் அனைவரும் மது அருந்துபவர்கள் . அளவுக்கு மீறி குடித்ததால், போதை தலைக்கேறி அவர்கள் உயிரிழந்தனர் என்று அரசு விளக்கம் அளித்திருந்தது . ஆனால் அதுவல்ல உண்மை . இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது , அவர்கள் மூளையின் நரம்புகள் செதில் செதிலாக துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கின்றது . அதற்கான காரணம் ஆக்டோசின் (OCTOSIN) என்ற ஒரு ரசயானப் பொருள் அவர்கள் உடலில் கலக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது . இந்த ஆக்டோசின் வெளி நாடுகளால் முழுவதுமாக தடை செய்யப்பட்ட ஒரு வேதிப் பொருள். இந்த ரசாயனம் உடலில் அதீத போதையை ஏற்படுத்தும் , நாளடைவில்  மூளையின் நரம்புகளை வெகுவாக பாதித்து நரம்புகளை அறுக்க தொடங்கி விடும் .இந்த மாறுபட்ட ரசாயணம் கலந்த மதுபானங்களை தயார் செய்து வினியோகம் செய்யும் நிறுவனம் MLA மார்த்தாண்டத்தின் “WINESHINE”நிறுவனம் . அதற்கான ஆதாரங்கள் , இதோ துடியலூர் சஞ்சீவி ஹாஸ்பிடலில் இருந்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டின்(POST MORTEM REPORT) நகல்கள் உங்கள் பார்வைக்கு . முடிந்தால் அந்த நிறுவனத்தின் மதுபானங்களை சோதனை செய்து பாருங்கள். இதில் ஆளுங்கட்சியின் ஆறு அமைச்சர்கள் இந்த நிறுவனத்தின் நேரடி பங்குதாரர்கள் . இதை விட முக்கியம் என்னவெனில், எங்களை தேச துரோகிகள் என்று விமர்சித்த அமைச்சர் புண்ணியகோடிதான் இந்த நிறுவன தொடக்க விழாவுக்கு அடிக்கல் நாட்டிய சிறப்பு விருந்தினர். .வெட்கமாக இல்லை .உங்கள் பார்வைக்கு அந்த புகைப்படத்தையும் இத்தோடு இணைத்துள்ளேன் . ஒற்றனின் பின்னால் இவ்வளவு மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன . இதை நேர்மையான வழியில் நமது நாட்டில் வெளியே கொண்டு வர முடியாது. வெளிபடுத்தவும் விட மாட்டார்கள் இந்த அரசியல் வியாதிகள் .

இதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . அதற்காகத் தான் இவ்வளவு போராட்டம் . பொதுமக்களாகிய நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் . இப்பிரச்சனையை , முடிந்தால் ஒற்றனின் சார்பில் பொது நல வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்து பாருங்கள் . இந்த நாட்டில் இன்னமும் நீதிமன்றத்தில் மேல் எனக்கு நம்பிக்கை  இருக்கின்றது . நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் நிபந்தனையின்றி தலை வணங்குகிறேன் . ஜெய்ஹிந்த் .

                                                           இப்படிக்கு

                                                           - ஒற்றன் –

என்று படித்து முடித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார் .

இன்ஸ்பெக்டர் ரவி : என்ன குமார் ! .  நான் கூட என்னமோ நெனெச்சேன் .BUT ஹி இஸ் GREAT !  அவன் ஒரு வித்தியாசமான ஆளு தான்யா !.

சப்–இன்ஸ்பெக்டர் குமார் : என்ன சார் ! நீங்க திடீர்னு ஒற்றன் பக்கம் சாஞ்சுட்டீங்க ! HE IS AN ACCUST . ஒரு MLAவ கடத்திருக்கான் ! அவன போய் பாராட்றீங்களே சார்? .

இன்ஸ்பெக்டர் ரவி : இல்ல குமார் ! அவன் வெறும் சுய நலத்துக்காக எதையும் பண்ணலன்னு நமக்கே CLEARரா தெரியுதுல்ல . நியாயமா நாம பண்ண வேண்டியத அவன் பண்ணிருக்கான்  . MLA மார்த்தாண்டத்தப் பத்தி நமக்கே நல்லா தெரியும். அவன் மேல எத்தனை கேஸ் இருக்கு ? .ஒன்னுலயாவது அவன ARREST பண்ண முடியுதா ? முடியாது . ஏன்னா ! அவங்க ஆளுங்கட்சி. இந்த காக்கிச் சட்டையப் போட்றதுக்கு முன்னாடி நமக்கிருந்த கம்பீரம் , போட்டதுக்கு அப்புறம், துளி கூட இல்ல .நாமெல்லாம் JUST , GOOD FOR NOTHING . அவ்ளோதான் . அதாவது வாய்ச்சொல் வீரர்கள் . ஆனால் வாள் வீசமாட்டோம் ! . இப்படிப் பட்ட ஒரு விஷயத்தை , ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட கவனத்துக்கே கொண்டு வந்துருக்கான்னா அவன் சாதாரணமான ஆள் இல்ல . HE IS VERY CLEVER ! .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! நாம அடுத்து INVESTIGATE பண்ணப் போற ஏரியா எது சார் ?

இன்ஸ்பெக்டர் ரவி : சஞ்ஜீவி PRIVATE HOSPITAL . என்றார் சிரித்துக்கொண்டே!!!.

 


காலை 10 மணி செய்திகளுக்காக டிவி திரையையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார் துடியலூர் எதிர்கட்சி தலைவர் சிங்காரம் .

என்னங்கய்யா ! ஒரே பதற்றமா உக்கார்ந்திருக்கீங்க ? என்றான் தோட்டக்காரன் கண்ணையா !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.