(Reading time: 74 - 148 minutes)

துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் . ஒரே பரபரப்பாக காணப்பட்டது .சிரியாவில் இருக்கின்ற இந்தியர்கள் மற்றும் சிரியாவுக்குச் சென்று வந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களை மும்முரமாக சேகரித்துக் கொண்டிருந்தார்கள்  இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் .

சப்-இன்ஸ்பெக்டர் - குமார் : சார் ! கிட்டத்தட்ட சிரியாவோடு தொடர்புடைய இந்தியர்களோட லிஸ்ட்ட ரெடி பண்ணியாச்சு . இதுல நமக்கு ஒரு சின்ன தடயம் கெடைச்சிருக்கு . குறிப்பா தமிழ் நாட்டில இருந்து சிரியாவுக்கு போன நபர்களோட எண்ணிக்கை 1 8 . அதுல 16 பேர விசாரிச்சாச்சு ! .  2 பேர் மட்டும் மிஸ் ஆகுறாங்க .அவங்கள தொடர்பு கொள்ள முடியல . எனக்கு அவுங்க மேல கொஞ்சம் டவுட் இருக்கு சார் !

இன்ஸ்பெக்டர் – ரவி : இல்ல குமார் ! தொடர்புகொள்ள முடியலங்க்றதுக்காக அவங்கள நாம குற்றவாளின்னு சந்தேகப் பட்றது தப்பு .  

சப்-இன்ஸ்பெக்டர் - குமார் : இல்ல சார் ! நான் அதுக்காக மட்டும் அவங்கள சந்தேகப் படல . அவங்களோட பயோடேட்டாவ எடுத்துப் பார்த்தோம் , அவங்க ரெண்டு பெரும் கோயம்பத்தூர் பாரதியார் யூனிவர்சிட்டில முதுகலைப் பட்டம் பெற்றிருக்காங்க . போன வருஷந்தான் சிரியாவுக்கு போயிருக்காங்க . அவுங்க வீட்லயே அவங்க எங்க போயிருக்காங்கன்னு யாருக்கும் தெரியல . அவங்களோட FRIENDS CIRCLEளையும் விசாரிச்சு பாத்தாச்சு . யார் கூடவும் அவங்க காண்டக்ட்ல இல்ல . SO , I THINK WE ARE IN RIGHT MOVE ONLY.

இன்ஸ்பெக்டர் –ரவி : இஸ் இட் ! . ஓகே ! இது விசியமா , மொதல்ல நாம உளவுத்துறை கிட்ட தகவல் கொடுப்போம் . THEN WILL START OUR FURTHER ACTIONS.

இருவரும் பேசிக் கொண்டிருந்த அடுத்த வினாடி , சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் செல்போனில் இருந்து சத்தம் வந்தது . எடுத்துப் பார்த்த அவர் உடனே , இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்து ஆச்சர்யமான குரலில் ,

சார் ! WHATSAPPல இருந்து , எனக்கு MSG வந்துருக்கு . ஒற்றன் வெப்சைட் UPDATE ஆயிருக்காம் .

இன்ஸ்பெக்டர் ரவி : வாங்க குமார் ! என்னன்னு உடனே செக் பண்ணலாம்.

ரவியும் , குமாரும் , ஒற்றன் இணையதளத்துக்கான முகவரியை கம்ப்யூட்டரில் தட்டினார்கள் .

ஒற்றன் இணையதளம் வெகு விரைவாக LOAD ஆனது .

அதில் ஒற்றனின் குறியீடான , இந்தியாவுக்கு முன்னால் , துடைப்பத்துடன் , முகமூடி அணிந்த மனிதன் நிற்பதை போன்ற நிழலுருவம், ஒற்றன் என்ற வாசகத்தை கம்பீரமாக தாங்கி நின்று கொண்டிருந்தது . அதன் கீழே இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த எழுத்துக்கள் ஒற்றனின் கோபத்தை பிரதிபலித்திருந்தது .

“ தேசத்துக்கான எங்களின் இந்த போராட்டம், இன்று அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றது என்பதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. எங்களை தேச துரோகிகள் என்று விமர்சித்த அமைச்சர் புண்ணியகோடிக்கு மனமார்ந்த நன்றி . தேசத்தின் மீது அதீத பற்று கொண்டவர்கள் , தேச துரோகிகளாக்கப்படுவது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல . மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை மலரச் செய்தீர்கள் .இன்னமும் அதிகார வர்க்கங்கள் தான் இந்தியாவில்  வாழ்க்கையை நடத்திக் கொண்டிருகின்றார்கள் . அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் இருந்துகொண்டிருக்கின்றது. அவர்களின் கூக்குரல்கள் அரசியல் அமைப்புகளின் காதுகளுக்கு எட்டுவதேயில்லை .ஏதேனும் ஒரு அரசியல் மாற்றம் வந்துவிடாதா?  ஒரு நல்ல தலைவன் வந்துவிட மாட்டானா ? என்று மக்கள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் . இன்றைய நிலையில் அரசியல்வாதிகள் ஆண்டவனாக்கப் படுகிறார்கள் .  மக்களுக்காக குரல் கொடுத்து , சமூகத்துக்காக போராடுபவர்கள் , ஒடுக்கப் படுகிறார்கள் .துன்புறுத்தப்படுகிறார்கள் . சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் . இங்கு நடக்கும் அராஜகங்கள் ,ஆட்சியில் மேலே இருப்பவர்களுக்கு தெரிவதில்லை . அவர்கள் தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை . அதற்கான நேரம் வந்துவிட்டது . MLA மார்த்தாண்டம் போன்ற அரசியல்வாதிகள் மண்ணில் இருப்பதை விட இறப்பதே மேல்.குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை வேண்டாம் .அதை அகற்றுங்கள் , அல்லது வேறொரு இடத்துக்காவது மாற்றுங்கள் என்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் பல காலமாக குரல் கொடுத்து வருகிறார் . பல அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிட்டிருக்கின்றார் . பல விதமான அறப் போராட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார் . ஆனால் அவரை , வயது முதிர்ந்தவர் என்று கூடப் பார்க்காமல் , அவரின் மீது ஏகப்பட்ட அடக்கு முறைகளை MLA மார்த்தாண்டம் கையாண்டிருக்கிறார் .  அவற்றையெல்லாம் இன்முகத்தோடே சமாளித்து கொண்டு இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார் ஒரு போராளி .

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.