(Reading time: 74 - 148 minutes)

இணையதள வாசி சுப்ரமணியம்543  : நேதாஜி, பகத்சிங் போன்ற தேசியத் தலைவர்களின் படங்களை, உன் இணையத்தளத்தில் போட்டு விட்டால் நீ செய்ததெல்லாம் சரி ஆகிவிடுமா ?. நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல .

ஒற்றனிடமிருந்து : சுப்ரமண்யம் ஐயா ! மன்னிக்கவும். உங்களுடைய கோபம் நியாயமானது. அதை விட இந்த போராட்டத்தின் நோக்கம் மிக முக்கியமானது . இதை நான் மற்றுமொரு சுதந்திரப் போராட்டமாகத்தான் கருதுகிறேன் . ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்த தேசத்தை காப்பாற்றுவதற்காக அவர்கள் போராடினார்கள் . ஆனால் அரசியல்வாதிகளிடம் இருந்து இந்த சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக நான் போராடுகிறேன் . நல்லதே நடக்கும் .  காலம் கைகூடட்டும் .பொறுத்திருங்கள் . நன்றி .

படித்துக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் புண்ணியகோடியின் கார் துடியலூர் காவல் நிலையத்தை நோக்கி ஜெட் வேகத்தில் வந்து கொண்டிருந்தது . காரில் இருந்து புண்ணியகோடி வேக வேகமாக வந்திறங்கினார் . அவரைச் சுற்றி மீடியாக் கூட்டம் மொய்க்கத் தொடங்கியது. NO COMMENTS என்று சொல்லிக்கொண்டு அவரது உதவியாளர்கள் கூட்டத்தை கலைத்துக்கொண்டு முன்சென்றனர் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் அவர் முன்பு சல்யூட்டுடன் எதிர்பட்டார்கள் .

இன்ஸ்பெக்டர்-ரவி : ஹலோ சார் ! குட் மார்னிங் ! 

புண்ணியகோடி : என்ன ரவி ? அந்த ஒற்றன் யாருனு trace பண்ணிடீங்களா ?

இன்ஸ்பெக்டர்-ரவி : எஸ் ! சார் ! சைபர்கிரைம் டீம் TRACE பண்ணிட்ருக்காங்க ! இன்னம் கொஞ்ச நேரத்துல அவன் ஏரியாவ கண்டுபுடிச்சிரலாம் .

புண்ணியகோடி : சொல்லாதீங்க ! மொதல்ல செஞ்சு முடிங்க ! .

இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் யாரு?  எந்த ஏரியாங்கற DETAILS எனக்கு வந்தாகணும் .

அடுத்த சில நிமிடங்களில் , சைபர்கிரைம் டீம்ல இருந்து ஒருவன் திடீரென்று தன் கையை உயர்த்தினான் .

சார் ! ஐ காட் ஹிஸ் LOCATION .

தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்த அமைச்சர் புண்ணியகோடி சற்றே தன் புருவத்தை உயர்த்தினார் . இன்ஸ்பெக்டர் ரவியும், குமாரும் ஆச்சர்யத்துடன் , அவன் முன் சென்றார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார்  :  TRACE பண்ணிடீங்களா ? WHAT இஸ் ஹிஸ் LOCATION ?

சைபர்கிரைம் ஆபீசர் :  சார் ! அவனோட LOCATION  - சிரியா .

WHAT ? சிரியாவா ? என்று  அதிர்ச்சியானார் ரவி .

அமைச்சர் புண்ணியகோடி : துடியலூருக்கும் , சிரியாவுக்கும் என்னையா சம்பந்தம் ? ஒண்ணுமே புரியலையே என்றார் .

ஏற்கனவே சிரியாவில் உள்நாட்டு போர் வேற போய்ட்டு இருக்கு . உலக நாடுகளை அச்சுறுத்துகின்ற ஐ.எஸ். ஐ.எஸ். (ISIS) தீவிரவாத இயக்கம் சிரியாவின் பல பகுதிகளை தங்கள் கைவசம் ஆக்ரமிச்சிருக்காங்க.

உலக நாடுகளுக்கும், சிரியாவுக்கும் எந்த விதமான போக்குவரத்து சேவையும் இப்போது இல்லை . சிரியாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் . இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், ஒருத்தன் அங்கிருந்து நம்மகிட்ட கண்ணாமூச்சி விளையாட்றான்ணா அவன் சாதாரணமான ஆள் கெடையாது  என்றார் அமைச்சர் புண்ணியகோடி .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் உடனே, சார் ! ப்ரெஸ் ரிபோர்ட்டர்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க .

ஓகே ! நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வெளியே வந்தார் புண்ணியகோடி .

 


மைச்சர் புண்ணியகோடி ப்ரெஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார் .

வரலாறு காணாத அளவுக்கு, பல மீடியாக்கள் புண்ணியகோடியின் பேட்டிக்காக காத்திருந்தார்கள் . புண்ணியகோடி மெல்ல பேச்சைத் துவங்கினார் .

“ அனைவருக்கும் வணக்கம் . MLA மார்த்தாண்டம் கடத்தப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது .ஒற்றன் என்கின்ற முகம் தெரியாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த ஒற்றன் யார் ? அவன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பதைப் பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது . எனவே மீடியாக்கள் கொஞ்சம் பொறுமை காக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் .

மீடியா 1 : சார் ! இந்த ஒற்றனப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ? மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு வரவேற்பு இருப்பதாக தெரிகிறதே ?

புண்ணியகோடி : ஒற்றன் ஒன்றும் காந்தி இல்லை . இந்த அரசாங்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் யாரோதான் இப்படி ஒரு இழிவான செயலை செய்திருக்கின்றார்கள் என்று நான் கருதுகிறேன் . ஒரு MLAவை கடத்தியிருக்கிறார்கள் . அரசாங்கத்திற்கு எதிராக கிளம்பும் ஒவ்வொருவரும் தேசத் துரோகிகள் தான் . வினையை விதைத்திருக்கிறார்கள், அதற்கான விபரீதங்களை அவர்கள் சந்தித்தே ஆவார்கள் . மார்த்தாண்டம் எதற்காக கடத்தப்பட்டார் ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.