(Reading time: 74 - 148 minutes)

இதே மாறி , இதுக்கப்புறம் எந்த குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது .அதனால தான் நாங்க இப்படி பேசுறோம் . உங்களோட அறப் போராட்டத்தில் எங்களோட பங்கும் இருக்கணும்னு நாங்களும் ஆசைப் படறோம் . தயவு செஞ்சு எங்கள வேண்டாம்னு ஒதுக்கிறாதிங்க ஐயா என்றான் .   

இதுவரை அமைதி காத்த சற்குணம் , சற்றே அவர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார் .

சற்குணம் : நீங்கள் எனக்காக எதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டால் , இந்த குடிப்பழக்கத்தின் தீமைகளைப் பற்றி சமூக வலை தளங்களில் அதிகம் பகிருங்கள் . அது தான் சிறந்தது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினர் இணையத்தில் ஐக்கியமாகி விட்டனர்.  இது இணைய தலைமுறை . இணையத்தின் மூலம் உங்கள் போராட்டங்களை தொடருங்கள் . உங்கள் நண்பர்களையும் இதை பகிர சொல்லுங்கள்  .  என்று சொல்லிவிட்டு நமச்சிவாயத்துடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார் .                     

 


சாயுங்கால நேரம். அமைச்சர் புண்ணியகோடி அவர் வீட்டு வராந்தாவில் இருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார். உடன் அவரது P.A வும் , அரசியல் ஆலோசகர்களும் இருந்தனர். அந்த கும்பலில் இருந்த வயதான கிழம் ஒன்று அங்கு நிலவியிருந்த நிசப்தத்தை கலைத்தது . இங்க பாரு புண்ணியகோடி ! இந்த விஷத்தை நாம லேசா விட்றக் கூடாது . ஏன்னா ! மார்த்தாண்டம் என்ன ஆனார்ங்கறத பத்தி நமக்கு இன்னும் நம்புறமாதிரி ஒரு தகவலும் இல்ல . இதில இருந்து எனக்கு என்ன தோணுதுன்னா ? நம்மளோட அடுத்த மூவ் என்னான்னு யாரோ நம்மள வாட்ச் பண்றாங்கன்னு தெளிவா தெரியுது . பெரியவரின் பேச்சை அலட்டிக் கொள்ளாமல் கேட்ட புண்ணியகோடி, அவரின் இந்த எச்சரிக்கையைப் பற்றி யோசிக்கலானார். அவர் பதில் பேச தொடங்கிய அடுத்த வினாடி, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் அலறியது .எடுத்து பார்த்த அவர் அதை உடனே அட்டென்ட் செய்தார் .சொல்லுங்க ரவி என்னாச்சு ? எனி குட் நியூஸ்? .

இல்ல சார் ! நான் இப்பதான் எதிர்கட்சி தலைவர் சிங்காரம் வீட்ல இருந்து வர்றேன் . அவரிடம் என்கொய்ரிக்கு ஒத்துழைப்பு கேட்க போனேன் .

அவரே இத பத்தி எங்கிட்ட விசாரிச்சார். அவரும் மார்த்தாண்டமும் சும்மா வெளி தோற்றத்துக்கு தான் எதிரி மாதிரி பாவ்லா காட்றாங்க .ஆனா உண்மையில அப்படியில்ல . சோ ! எனக்கு அவர்மேல தப்பு இருக்கற மாதிரி தெரியல என்றார்.

லேசாக முகம் சிவந்தவராய் புண்ணியகோடி , போனில் பேச தொடங்கினார் .காலையில இருந்து தேடியும் இன்னும் உங்களால ஒரு உருப்படியான தகவல் கொடுக்க முடியல இல்ல .  பொலிடிகல் ப்ரெஸ்சர்னா என்னனு தெரியுமா உங்களுக்கு ! காலையில இருந்து இருபது முப்பது call அட்டென்ட் பண்ணிட்டேன் . ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்றதுக்குள்ள தலையே வெடிச்சிரும் போல . ஆனா நீங்க கூலா ஒரு பதில சொல்லிட்டீங்க.

இல்ல சார் நாங்களும் எங்க டிபார்ட்மெண்டும் இன்னும் தேடிகிட்டு தான் இருக்கிறோம். பட் சீக்கிரம் கண்டுபுடிச்சுருவோம் . டோன்ட் வொர்ரி சார் ! என்றார் இன்ஸ்பெக்டர் ரவி . அலட்சியமான குரலில் சீக்கிரம் பண்ணுங்க என்று கூறி இணைப்பை துண்டித்தார்  புண்ணிய கோடி .

கையில் சிகரெட்டுடனும் மனதில் பலவிதமான சிந்தனைகளுடனும் ரவி தன்னுடைய வீட்டையே சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். பதினைந்து, பதினாறு சிகரெட் துண்டுகள் தன்னுள் இருந்த புகையை கக்கி, எரிந்து சாம்பலாயிருந்தன .. நேரம் இரவு 11ஐ கடந்திருந்தது . ACயை ஆன் செய்து விட்டு படுத்தார் . இரவு முழுவதும் இந்த கேஸ் பற்றிய சிந்தனைகள் அவரை வாட்டி வதைத்தன . ஒரு வழியாக உறக்கம் அவர் கண்ணை எட்டியது .     

 


மே 2 , 2015

விடியற்காலை எட்டு மணி . முழு தூக்கத்தில் இருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி.

அவர் போனில் இருந்து இரண்டு மூன்று அலாரங்கள் ஒலித்தது .சோர்வுடன் எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு மீண்டும் படுக்கத் தொடங்கினார் .

மீண்டும் செல்போனில் இருந்து சத்தம் வந்தது. இந்த முறை வந்தது அலாரம் அல்ல . அழைப்பு மணி . எடுத்து யார் என்று பார்த்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் லைனில் இருந்தார் .

ஹலோ குமார் என்ன எவ்ளோ சீக்கிரமா கூப்ட்றீங்க ? எனி திங் சீரியஸ் என்றார் ரவி ?

எஸ் சார் ! நீங்க மொதல்ல நியூஸ பாருங்க . மார்த்தாண்டம் கேஸ்ல ஒரு துப்பு கெடைச்சிருக்கு . எதோ ஒரு இயக்கம் அவரை கடத்திருக்கு.இன்னிக்கு எல்லா சோசியல் மீடியாவிலும் அதப் பத்தித்தான் நியூஸ், வைரலா பரவிக்கிட்டு இருக்கு .

ஓஹ் ! இசிட் .அந்த இயக்கத்தோட பேர் என்ன குமார் ?

‘‘ ஒற்றன் ‘’ சார் .

 என்னது ஒற்றனா ? ஓகே  நான் பாத்துட்டு உங்களுக்கு கூப்டறேன் .

 ஓகே சார் ! என்று மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப் பட்டது .

சட்டென்று டிவியை ஆன் செய்து நியூஸ் சேனலை வைத்தார் ரவி .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.