(Reading time: 74 - 148 minutes)

வணக்கம் ! இன்றைய முக்கியச்செய்திகள் .

பிரதமரின் கோரிக்கையை  ஏற்று எதிர்கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ஆதரித்தனர் .

உலக அளவில் facebook உபயோகபடுத்துபவர்களின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் . இந்தியா வந்துள்ள facebook நிறுவனர் மார்க் ஜூகர்பார்க் பெருமிதம்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த துடியலூர் சட்டமன்ற உறுப்பினர் மார்த்தாண்டம் மாயம் . அவர் கடத்தப்பட்டாரா ? இல்லை தலைமறைவானாரா? என்கின்ற பல கோணங்களில் நேற்று இரவுமுதல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திடுக்கிட்டு பார்த்துக்கொண்டிருந்தார் சற்குணம். உடனே அவர் வீட்டு கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது . மெல்ல எழுந்து தள்ளாடிக் கொண்டே சென்று, கதவைத் திறந்த மறு வினாடி, அவரின் நண்பர் நமச்சிவாயம் எதிர்ப்பட்டார்.

வா! நமச்சிவாயம்! என்ன இவ்ளோ சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்திருக்க ! என்ன விஷயம் ?

ஐயா ! நியூஸ்ல பாத்தீங்களா நம்ம துடியலூர் MLAவ காணமாம் . என்ன ஆனார்ன்னே யாருக்கும் தெரியலையாம்? என்றார் நமச்சிவாயம்.

ஆமாம் ! நானும் இப்பதான் பாத்தேன் !  ஒரே குழப்பமா இருக்கு .

ஐயா! இதுல என்ன குழப்பம் உங்களுக்கு! அவனுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்களை நீங்கள் அனுபவித்தீர்கள் . வயதானவர் என்று கூட பார்க்காமல் உங்களை அடித்தெல்லாம் துன்புறுத்தியிருக்கிறான்.

ஐயா பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு . உங்களோட போராட்டத்தை யாருக்கும் தெரியாத மாதிரி ஒடுக்கிட்டாங்களே ! இதுக்கும் மேலயும் நீங்க தனி ஆளா நின்னு கஷ்டப்பட்றத என்னால பார்க்க முடியல.வேண்டாம்யா விட்ரலாம் . இந்தக் காலத்து அரசியல்வாதிகள்கிட்ட எல்லாம் நாம நல்ல மனத்தை எதிர்பார்க்க முடியாது, கோடி கோடியா பணத்தை வேண்டுமானால் எதிர்பார்க்கலாம் . அவங்கல எதுத்து நம்மால ஒன்னும் பண்ண முடியாது .  அவன் செய்த வினைகளுக்காக இன்று அவன் அனுபவிக்கிறான் . இது நமக்கு சாதகம் தானே.

இல்லை நமச்சிவாயம்! . அது தவறு . நமக்கு வேண்டியது அவனுடைய வேதனை அல்ல . நமது நோக்கம் அவன் தன் தவறை உணர்ந்து , நமது அரசு பள்ளிக்கு அருகே உள்ள அவனுடைய டாஸ்மாக் கடையை மூட வேண்டும் . பள்ளிக் குழந்தைகள் படிக்கும் இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடையா ?  இன்றைய கால இளைஞர்கள் சமுதாயத்தை மறந்து, வெறும்  சாராயத்தை மட்டுமே விரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் . நான் காந்தியவாதி . இதற்காக எப்பேர்ப்பட்ட போராட்டங்களையும் நான் அறவழியில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் . என் கடைசி மூச்சு இருக்கும் வரை இதற்காக போராடுவேன் என்றார் சற்குணம்.

 


நேரம் மதியம் 1:3௦ மணி.

துடியலூர் எதிர்கட்சித் தலைவர் சிங்காரத்தின் , வீட்டை நோக்கி இன்ஸ்பெக்டர் ரவியின் கார் பயணித்துக் கொண்டிருந்தது .பொதுமக்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அவருக்கு விசித்திரமாக இருந்தது. ஒவ்வொன்றாக அசைபோட்டுக்கொண்டே வந்தார் . தேர்தல் முடிவுகளுக்கு பிறவு, அவன் மக்களை சந்தித்தே பல வருஷம் ஆச்சு. யாராச்சும் மனுவோடு வந்தாலோ இல்ல, அவனை எதிர்த்தாலோ அவுங்கள பல வழிகளில் துன்புறுத்துவது, அடியோடு ஒழிப்பது போன்ற காரியங்களை செஞ்சுருக்கான். அவனுக்கு ஆளுங்கட்சி அமைச்சர்களோட full சப்போர்ட் இருக்கு. பொதுமக்களுக்கே அவன் மேல் வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது . இத்தனை மர்ம முடிச்சுகளா ! இந்த கேஸ்ல ! என்று            மண்டையை உருட்டி கொண்டிருந்தார். அதற்குள் சிங்காரம் வீடு வந்தது. பல ஏக்கர்களை வளைத்துப்போட்டு கட்டிய பங்களா அது .கேட்டின் முன்பு போலீஸ் கார் வருவதைப் பார்த்ததும், செக்யூரிட்டி ஓடி வந்து கேட்டை திறந்து சல்யூட் அடித்தான் . கொஞ்ச தூரம் உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய போர்டிகோ தென்பட்டது. அங்கே சென்று காரை பார்க் பண்ணிவிட்டு , வரவேற்பறையை நோக்கி நடந்தார் ரவி .வரவேற்பறையில் இருந்த பெண் , வெற்றுப் புன்னகையுடன் அவரைப் பார்த்து வெல்கம் சார் என்றாள் . நான் சிங்காரம் சார பாக்கனும் .இன்ஸ்பெக்டர் ரவி வந்துருக்காருனு இன்பார்ம் பண்ணுங்க என்றார்.ஜஸ்ட் அ மினிட் சார் என்றவள் , பக்கத்தில் இருந்த டெலிபோனில்

எண்களைத் தட்டினாள். உடனே மறுமுனையில் இருந்த குரல் ‘எஸ்’ என்றது..

சார் ! உங்கள பார்க்கிறதுக்கு இன்ஸ்பெக்டர் ரவி வந்துருக்கார்.

ஓ ! அவர உள்ள அனுப்பு !  என்றது அந்த குரல் .

மிஸ்டர் ரவி ! ப்ளீஸ் கெட் – இன் என்று சொல்லி லிப்டை ஓபன் செய்தாள் .

இருவரும் ஏறியவுடன் ,2 ஆம் தளத்திற்கு லிப்ட் சென்று கொண்டிருந்தது.

டின் ! டின் ! டின் !  லிப்ட் திறந்தவுடன் , சிங்காரம் எதிரில் தென்பட்டார் .

வாங்க மிஸ்டர் ரவி . இட்ஸ் நைஸ் டு மீட் யூ என்று கை குலுக்கியாவாறே எதிரே இருந்த சோபாவை காட்டினார் .  

இருவரும் அமர்ந்தவுடன் , பணிப்பெண் காபி கோப்பையுடன் , வந்து பக்கத்தில் இருந்த டேபிள் மேல் வைத்து விட்டு சென்றாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.