(Reading time: 74 - 148 minutes)

என்ன ரவி! இந்த பக்கம் ? MLA மார்த்தாண்டம் மேட்டரா? என்றார் சூசகமாக . ஆமா சார்! ஒரே குழப்பமா இருக்கு! நீங்களும் மார்தாண்டமும் எதிர் எதிர் துருவமா இருக்கறீங்க ! எப்பவுமே மார்த்தாண்டத்துக்கு எதிரான கருத்துக்களையே பேசிட்டு இருக்கீங்க.பொதுக்கூட்டத்துல பேசும்போது , MLAவ வெட்டுவேன் குத்துவேன்ல்லாம் பேசிருக்கீங்க ! இந்த கேஸ்ல உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்ற சந்தேகம் ...........    போலீஸ் டிபார்ட்மென்ட்கு இருக்கு , SO ! அது விசயமா ஒரு சின்ன பார்மல் என்கொய்ரிக்கு கூப்டுவாங்க . அதுக்கு நீங்க கொஞ்சம் ஒத்துழைக்கணும் அவ்வளவுதான் சார்.

அட அந்த மேட்டர் எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு . நானும் டிவி நியூஸ் எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் . உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. நானும் மார்த்தாண்டமும் , மேடைகள்ல வேணாம் ஒருத்தருக்கொருத்தர் தப்பு தப்பா தரக்குறைவா பேசி கிழி கிழினு கிழிச்சுக்குவோமே தவிர உண்மையில நாங்க ரெண்டு பேரும் அப்படியில்ல . எங்க ரெண்டு பேர்க்கும் சொந்தமான பல நிறுவனங்கள் இப்ப கோயம்புத்தூர்ல இருக்கு. இத்தனைக்கும் மேல, நாங்க ரெண்டு பேரும் ஒரே கட்சியில தான் எங்களோட அரசியல் வாழ்க்கைய ஆரம்பிச்சோம் ! காலம் எங்கள இப்படி எதிர் எதிர் கட்சிகளா மாத்திருக்கு ! ஆனா நாங்க மாறுல . அந்த கடந்த கால நட்பு இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு. நானும் என்னோட அடியாளுங்கள வெச்சி விசாரிச்சுட்டு தான் இருக்கிறேன் . எனக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா இன்பார்ம் பண்றேன் . நான் இத செஞ்சிருப்பேங்கற கோணத்த மாத்தி வேற மாதிரி யோசிங்க . நீங்க எப்ப, எங்க என்கொய்ரிக்கு கூப்ட்டாலும் நான் வரேன் !

ஓகே ! தேங்க்யு சார் ! நான் வர்றேன் என்று சொல்லி விட்டு இடத்தை காலி செய்தார் . போர்டிகோவில் இருந்து காரை எடுத்த வேகத்தில் கார் பறந்தது.

கேட்டை விட்டு வெளியே வந்தவுடன் , சிங்காரத்தின் கட்சிக்காரர்கள் அவரைப் புகழ்ந்து பேனர் வைத்திருந்தார்கள் . அதன் வைர வரிகள் பின்வருமாறு ,

ஏளனம் செய்கின்ற எதிர் கட்சிக்காரர்களுக்கு எமன் நீ !

எங்களை படைத்த கடவுளுக்கே சமன் நீ ! என்று எழுதியிருந்தார்கள் .

அதைப் படித்தவுடன் காரி உமிழ்ந்து விட்டு காரின் வேகத்தை கூட்டினார் இன்ஸ்பெக்டர் ரவி.


குடிபோதையில் இறந்த, முத்துச்சாமியின் வீட்டருகே மிகப் பெரிய கூட்டம் . வீடே ஒரு சோக மயானமாக காட்சியளித்தது . உற்றார் உறவினர்கள் ஒரு பக்கம் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.  தரையின் விரிப்பில், தன் உடல் மீது பூ மாலைகளை போர்வையாக போர்த்தியபடி , அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்தபடியே, ஆழ்ந்த அமைதியில் படுத்திருந்தார் முத்துச்சாமி.  உறவினர்கள் ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருந்தனர் . பல பந்திகள் பரிமாறப்பட்டிருந்தன . சமூக ஆர்வலர் சற்குணம் ஐயாவும் , அவரது நண்பர் நமச்சிவாயமும் பொடி நடையாக முத்துச்சாமியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர் .அவரைப் பார்த்ததும் , துக்கம் தாளாமல், வாயில் துண்டை வைத்துக் கொண்டே, அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் முத்துச்சாமியின் மகன் ரத்தினம் .

ரத்தினம் : ஐயா ! எங்க அப்பா எங்கள விட்டுட்டு போய்ட்டார்யா ! என்று கதறியவன் அவரைக் கட்டியணைத்துக் கொண்டே அழ ஆரம்பித்தான் .

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் சிலையாக நின்றார் சற்குணம் .

ரத்தினம் : குடிப் பழக்கத்தை நிறுத்து ! நிறுத்துன்னு நீங்க எவ்வளவோ சொன்னீங்க ! ஆனா எங்க அப்பா கேக்கல . இப்ப கடைசியில எங்கள அனாதையா விட்டுட்டு போய்டார்யா என்று கதறினான் . அவனை கையில் தாங்கி பிடித்தவாறே வீட்டை நோக்கி முன்னேறினார் .முத்துச்சாமியின் சடலத்தை பார்த்தவுடன் , கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்து விட்டு , அவரை வணங்கி விட்டு சற்குணமும் , நமச்சிவாயமும் வெளியே வந்தனர் .

அங்கே கூடியிருந்த , ரத்தினத்தின் நண்பர்கள் சற்குணம் அய்யாவை சூழ்ந்து கொண்டு அவரை நலம் விசாரித்தனர் .

கூட்டத்தில் இருந்த ஒருவன் ,ஐயா ! நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்கய்யா !

நம்ம ஊர்ல இருக்கிற எல்லா டாஸ்மாக் கடையையும் அடிச்சு இழுத்து மூடிடுவோம் என்றான் கோபமாக .

அவனைப் பார்த்து , மெல்ல சிரித்தார் சற்குணம் ஐயா .

உடன் இருந்த சற்குணத்தின் நண்பர் நமச்சிவாயம் அவனைப் பார்த்து ,

டேய் ! வேண்டாம்டா ! மொதல்ல நீங்க பொழைக்கிற வழியப் பாருங்க .

என்னைக்குமே ஆத்திரமும் , வன்முறையும் எதுக்குமே ஒரு தீர்வாகாது .

எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் அதை அமைதியாவும் , அகிம்சையோடும் எதிர்கொள்றது தான் நம்ம ஐயாவுக்கு புடிக்கும்.மகாத்மா காந்தியின் கொள்கைகளை முழு மூச்சாகக் கொண்டவர் நம்ம ஐயா .

டாஸ்மாக் பிரச்சனைய நாங்க பார்த்துக்கறோம் . நீங்க உங்க வேலைய பாருங்க என்றார் நமச்சிவாயம் .

இல்லீங்க ஐயா ! எங்களால இத ஏத்துக்க முடியல . எங்க நண்பன் ரத்தினத்தோட வேதனையை எங்களால பாத்துகிட்டு இருக்க முடியல .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.