(Reading time: 74 - 148 minutes)

நீதிமன்றம் எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் , அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன் . எனக்காக யாரும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்.  இணையத்தால் இணைந்தோம் , இன்று இதயத்தால் இணைகிறோம் . இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி .     என்று முடித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார் .

வழக்கை தீர விசாரித்த நீதிபதிகள் , 15 நிமிட நேரத்துக்குப் பிறகு தீர்ப்பை வழங்கினார்கள்  .

தீர்ப்பின் விவரம் பின்வருமாறு ,

 அமைச்சர் புண்ணியகோடி இருபத்தி நான்கு மணிநேரத்தில் , தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு , நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்கள் ஒற்றனின் போராட்டம் நியாயமானது என்றாலும் , சட்டம் ஒழுங்குக்கு முரணான வகையில் நடந்து கொண்டதால் , சப் –இன்ஸ்பெக்டர் குமார் , விஜயன் ,மற்றும் மலர்விழி ,இவர்கள் மூவருக்கும் 6 மாத சிறை தண்டனையை அளித்திருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் கைகளை உயரே தூக்கி, வணங்கிவிட்டு கூண்டை விட்டு வெளியேறினார் .

இன்ஸ்பெக்டர் ரவி எதிர்பட்டார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! என்ன மன்னிசிருங்க ! உங்கள நான் ஏமாத்திட்டேன் என்றார் கண்ணீருடன் .

இன்ஸ்பெக்டர் ரவி சற்றும் எதிர்பாராமல் , தன் கைகளை உயர்த்தி SALUTE அடித்தார் . அவர் கண்களில் உண்மையான ஒரு தலைவனைப் பார்த்த ஆனந்தம் தெரிந்தது . குமாரின் உள்ளம் நெகிழ்ந்திருந்தது .

சற்குணம் ஐயா  குமாரையும் , விஜயனையும் கட்டி அணைத்துக் கொண்டார்   . மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன்  இவர்கள் மூவரோடு ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களை வழியனுப்பினார் . இன்ஸ்பெக்டர் ரவி இவர்கள் மூவரையும் , வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் . வெளியே பொதுமக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்திருந்தது . அவர்கள் அனைவரையும் பார்த்து , வணங்கி விட்டு மூவரும் போலீஸ் வாகனத்தில் ஏறினார்கள் . கோவை மத்திய் சிறைச்சாலையை நோக்கி வேன் வேகமாக பறந்திருந்தது .

மூன்று நாள் சுவாரஸ்யம் முடிவுக்கு வந்தது  , காவல்துறையில் ஒற்றன் ??? என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன .

அடுத்து துடியலூர் தொகுதியில் , இடைத்தேர்தல் வந்தது .

சுயட்சையாக போட்டியிட்ட , ரத்தினம்  லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .

முற்றும் -

இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .

இப்படிக்கு

பூபதி கோவை .

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.