(Reading time: 74 - 148 minutes)

 நல்லதே நடக்கும் . காத்திருங்கள் !  நீதிமன்ற நிகழ்வுகளை , உள்ளதை உள்ளபடி , உடனுக்குடன் , நேரலையாக , உங்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் ,

மின்னல் டிவி நாராயணன்   .......... மற்றும் கேமராமேனுடன் உங்கள் விஜயன் . என்று முடித்தார் .

 அந்த நேரம் பார்த்து ,  கடத்தப்பட்ட MLA மார்த்தாண்டத்தின் மனைவி நிர்மலா , மிகுந்த நம்பிக்கையுடன் காரில் வந்து இறங்கினார் . உடனே மீடியாக் கூட்டம் அவரை சுற்றிக்கொண்டது .  

PLEASE ! NO COMMENTS ! NO COMMENTS !  என்று சொல்லி பதிலளிக்கமால் , நீதிமன்றத்தின் ENTRANCEஐ நோக்கி முன்னேறினார் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் , CCTV MONITORING ரூமுக்குள் நுழைந்தார்கள் .

உள்ளே , கிட்டத்தட்ட 15 பேர் , தலையில் HEADSET-ஐ மாட்டிக் கொண்டு , ஆளுக்கொரு கம்ப்யூட்டர்-ஐ முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் .

கம்ப்யூட்டர் திரையில் , CCTV கேமராவால் பதிவுசெய்யப்பட்ட நேரலைக் காட்சிகள் , ஓடிக்கொண்டிருந்தது .

போலீஸ்காரர்களைப் பார்த்ததும் , அனைவரும் எழுந்து நின்றிருந்தனர் .

இன்ஸ்பெக்டர்  ரவி , பேச ஆரம்பித்தார் .

‘HI GUYS , PLEASE SIT DOWN ! . TIME கிட்டத்தட்ட 8.30 ஆயிடுச்சு .  கோர்ட்ட சுத்தி நடக்கிற ஒவ்வொரு MOMENT-யும் , CLEARரா WATCH பண்ணுங்க .ஏதாவது சந்தேகப்படும்படியா இருந்துச்சுன்னா , PLEASE INFORM OVER WIRELESS DEVICE . WE ARE IN NEED OF YOUR SUPPORT NOW . SO PLEASE BE CAREFUL. THANK YOU என்று முடித்தார் .

இதுவரை தைரியாமாக இருந்த சப் – இன்ஸ்பெக்டர் குமாருக்கு , முதன் முதலாக பதற்றம் தொற்றியிருந்தது  . அவர் செல்போனில் இருந்து சப்தம் வந்தது .எடுத்துப் பார்த்த அவருக்கு , WHATSAPP-இல் இருந்து NOTIFICATION வந்திருந்தது .

வேலையை சிறப்பாக முடிக்க வாழ்த்துக்கள் .............................

BY புண்ணியகோடி என்றிருந்தது . சற்றே நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டருடன் வெளியே வந்தார் குமார் .

வெளியே சற்குணம் ஐயா  , மின்னல் டிவிக்காக பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் . நமச்சிவாயமும் , முத்துச்சாமியின் மகன் ரத்தினமும் உடன் இருந்தனர் .

விஜயன் : ஐயா ! ஒற்றன் யாருனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமாக இருக்கீங்களா ?

சற்குணம் ஐயா : ஆமாம் . உண்மையிலே , ஆனா நான் மட்டும் இல்ல .இங்கு இருக்கிற அத்தனை பேரோட எதிர்பார்ப்பும் அதுதான்  .பொறுத்திருந்துதான் பாக்கணும் . என்று சொல்லிக்கொண்டு JUDGEMENT ஏரியாவை நோக்கி நடந்தார் . .

நேரம் 8.55-ஐக் கடந்திருந்தது . சஞ்சீவி HOSPITAL டாக்டர் குணசேகரனும் , நர்சுகளும் , உள்ளே வந்திருந்தார்கள் . கேஸ் சம்பந்தப்பட்டவர்கள் வரிசையில் தங்கள் பெயர்களை REGISTER செய்து கொண்டு JUDGEMENT ஏரியாவுக்குள் நுழைந்தார்கள் .

பத்து மணி  , சரியாக ஒரு மணி நேரமே இருந்தது .

நீதிமன்றத்திற்குள் ஒற்றன் நுழைவதற்காக தனி பாதை அமைக்கப் பட்டிருந்தது . 9.00 மணியில் இருந்து நீதிமன்றத்தில் ,நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக , டிவி சேனல்களில் ஒளிபரப்பாகியது .

நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் , JUDGEMENT ஏரியா நேரலையாக தெரிந்தது .  மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் , அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் . அவர்களுக்கு பின்னால் இருந்த சுவரில் , புகைப்படத்துடன் காந்தி சிரித்துக்கொண்டிருந்தார்.          கண்கள் கட்டப்பட்ட நிலையில் , கையில் தராசைப் பிடித்தவாறு நீதிதேவதை நின்று கொண்டிருந்தாள் . குற்றவாளிக் கூண்டு காலியாக இருந்தது . வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்கள் அமரும் இருக்கையில் , மின்னல்டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன் மற்றும் சற்குணம் ஐயாவும் , நமச்சிவாயமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர் .               டாக்டர் குணசேகரனும், நர்சுகளும் , இரண்டாவது வரிசையில் இருந்தார்கள் . இளம் நர்சுகள் ப்ரியாவும் , ஸ்ரீநிதியும் எந்தவிதமான சலனமும் இல்லாமல்  இருக்க , மலர்விழியின் முகத்தில் ஒரு இனம்புரியாத நடுக்கம் இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அதை உன்னிப்பாக கவனித்திருந்தார் டாக்டர் குணசேகரன் .

நேரம் 9.2௦ :  இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் , காதில் மாட்டியிருந்த WIRE – LESS கருவியுடன் , ஓட்டமும் நடையுமாக நாலாப்புறமும் திரிந்து கொண்டிருந்தனர் . ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்தது . எந்த நேரமும் ஒற்றன் வரலாம் என்கின்ற நிலையில் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் இதயத்துடிப்பு  அதிகரித்திருந்தது .

தன் பாக்கெட்டில் இருந்த ஊசியை எடுத்துப் பார்த்துவிட்டு , தயாரான நிலையில் வைத்திருந்தார் .நேரம் ஆக ஆக , பொதுமக்களிடம் இருந்து ஆரவாரம் அதிகரித்திருந்தது . ஒரு கட்டத்தில் எல்லை மீறிய பொதுமக்கள் கத்தத் தொடங்கியிருந்தனர் . நிலைமையை சமாளிக்க முடியாமல் , பாதுகாப்பு போலீசார் திணறிக் கொண்டிருந்தனர் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.