(Reading time: 74 - 148 minutes)

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : டாக்டர் ! ஒரு நிமிஷம் , டிவிய ஆன் பண்ணி நியூஸ் சேனல் வைங்க ..

டாக்டர் குணசேகரன் : YES ! MR குமார் . என்று டிவியை ஆன் பண்ணி நியூஸ் சேனலை மாற்றினார் .

ஒற்றன் விவகாரம் : கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு என்று BREAKING நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது .

செய்தி வாசிக்கின்ற நபர் தொடர்ந்தார் .

சமூக ஆர்வலர் சற்குணம் மற்றும் துடியலூர் பொதுமக்கள் ஆகியோர் அளித்த சாட்சியங்களை, மையமாக வைத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ,

துடியலூர் அரசு பள்ளிக்கு அருகே இருந்த, மதுபானக் கடையை முற்றிலும் அகற்றக்கோரி அதிரடி தீர்ப்பளித்தனர் . ‘WHINESHINE’ நிறுவனத்தின் மதுபானங்களை சோதனையிட்டதில் , அதில் அக்டோசின் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து , அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது . இது தொடர்பாக MLA மார்த்தாண்டம் மற்றும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீதும் விசாரணை கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . மேலும் நாளை காலை 1௦ மணிக்குள் , MLA மார்த்தாண்டம் மற்றும் கார் டிரைவர் கதிரேசனுடன் , கோவை நீதிமன்ற வளாகத்தில் , நீதிபதிகள் முன்னிலையில் ஒற்றன் சரணடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர் .  மேலும் மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன், தனது மனுவில் கேட்டுக்கொண்டதன்படி , இது விசேஷமான வழக்கு என்பதால் , நாளை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை ,பொதுமக்களின் பார்வைக்காக பெரிய திரையில் திரையிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது .

இதனிடையே  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர் சற்குணம்,

இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் , இதற்காக தான் ஒற்றன் அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் .இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு ஒற்றன் சரணடைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் ஒற்றன் யார் ?  என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது.

முன்னதாக ஒற்றனின் செய்கை நியாயமானதா ? இல்லையா ? என்பது பற்றி பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்  , 72% பேர் ஒற்றனுக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளனர் .

 


நேரம் மாலை 6.55 மணியைத் தொட்டிருந்தது . நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது . கடைசியாக ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்த்து விட்டு , இன்ஸ்பெக்டர் ரவியும், சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் வீடு  திரும்பினார்கள் . மிகுந்த களைப்புடன் வீட்டுக்கு வந்த குமார் , அப்படியே  மெத்தையில் படுத்துவிட்டுவ டிவியை ON பண்ணினார் . மின்னல் டிவியின் , ‘நிதர்சனத்தின் மறுபக்கம்’நிகழ்ச்சி தொடங்கியிருந்தது . மிகுந்த உற்சாகத்துடன் , திரையில் தோன்றினார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளார் விஜயன் .

“ சமுதாயத்தின் உண்மை நிலவரங்களை , உள்ளதை உள்ளபடி, உலகிற்கு எடுத்துரைக்கும் ‘நிதர்சனத்தின் மறுபக்கம்’ நேரலை நிகழ்ச்சியில் உங்களை வரவேற்கிறேன் என்று பேச ஆரம்பித்தார் .

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றன் வழக்கு . நடுநிலையான தீர்ப்பை வழங்கியிருக்கின்றது நீதிமன்றம் .  நாளை நீதிமன்றத்தில் சரணடைவாரா  ஒற்றன் ? . அரசியல்வாதிகளின் முகத்திரைகளை கிழித்த , அந்த முகமூடி மனிதன் யார் ? எதற்காக இந்த போராட்டம் ? இதுபோன்ற பல கேள்விகளைத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது . இவை அனைத்திற்குமான பதில் இன்னும் 14 மணி நேரங்களில் ...

தீடீரென்று கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது . பதற்றமில்லாமல் மெதுவாக சென்று , கதவைத் திறந்த குமாருக்கு மிகுந்த ஆச்சர்யம் .அமைச்சர் புண்ணியகோடி வெளியே நின்று கொண்டிருந்தார் .

குமார் ஐயா ! வாங்க ! வாங்க ! குரலில் பதற்றம் தொற்றியிருந்தது ).

அமைச்சர் புண்ணியகோடியும் , அவரது சகாக்களும் உள்ளே நுழைந்தார்கள் .

உடனே கதவை தாளிட்டு விட்டு , அவர்களை உட்காரவைத்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார் .

அமைச்சர் புண்ணியகோடி : என்ன குமார் ! பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு ? .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு .கோர்ட் வளாகத்த சுத்தி , எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கு . ஒற்றன் வருவான்னு நீங்க உறுதியா நம்புறீங்களா ஐயா ?  .

அமைச்சர் புண்ணியகோடி : வருவான் ! கண்டிப்பா அவன் வருவான் .ஆனா திரும்பிப் போக மாட்டான் . போனா நேரா பரலோகந்தான் ! என்றார் (இறுக்கமான தொனியில் ) .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! என்ன சொல்றீங்க ? எனக்கு ஒன்னும் புரியலயே .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.