(Reading time: 74 - 148 minutes)

டிவி திரையில் செய்தி வாசிக்கும் பெண், மிகுந்த உற்சாகத்துடன், திருத்தமான தமிழில் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தாள் . கீழே ப்ரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது . அதில் “துடியலூர் MLA மார்த்தாண்டம் கடத்தப்பட்ட விவகாரம் – ஒற்றன் என்ற முகம் தெரியாத அமைப்பு பொறுப்பேற்பு “. என்று எழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடி மறைந்து கொண்டிருந்தது . அதற்குள் செய்தி வாசிக்கும் பெண் தொடர்ந்தாள் .

“ சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி, துடியலூர் MLA மார்த்தாண்டம் கடத்தப்பட்டிருக்கிறார் . இந்த விவகாரத்திற்கு, ‘ஒற்றன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது . இதை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக www.ஒற்றன்.com என்ற இணையதள முகவரியில், கை கால்கள் கட்டப்பட்டு , மயங்கிய நிலையில் மார்த்தாண்டம் இருப்பது போன்ற புகைப்படம் அப்லோடு செய்யபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . FACEBOOK, TWITTER, WHATSAPP போன்ற சமூக வலைதளங்களில் குடியிருக்கின்ற இணையதள வாசிகள் இதை பெரிதும் பகிர்ந்துள்ளனர் . குறிப்பாக ட்விட்டரில் “ஒற்றன்” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி முதலிடத்தில் உள்ளது என்று செய்தியை முடித்தாள் . அரை மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் ரவியின் கார் , துடியலூர் காவல் நிலையத்தை அடைந்தது .

உள்ளே நுழைந்த ரவி , சப்-இன்ஸ்பெக்டர் குமாரைப் பார்த்ததும் ,

என்ன குமார் அந்த இணையதளத்த (WEBSITE) TRACE பண்ணிடீங்களா ?

எஸ் சார் ! சைபர்கிரைம் போலீஸ், அவங்க டீமோட ட்ரை பண்ணிட்டு இருக்காங்க . வி வில் கெட் தெம் QUICKY சார் என்றார் குமார்.

எங்கே அந்த வெப்சைட்ட ஓபன் பண்ணுங்க ? என்றார் இன்ஸ்பெக்டர் ரவி.

அங்கே இருந்த ஒரு லேப்டாபில் அந்த இணையதளம் ஓபன் செய்யப்பட்டது .

அது LOAD ஆவதற்கு சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு, பின்னர் LOAD ஆனது . அந்த இணையதளத்தின் இரண்டு மூலைகளிலும் , இடது பக்கத்தில் பகத்சிங்கும் , வலது பக்கத்தில் நேதாஜியும் தங்களுடைய புகைப்படங்களுடன் முகாமிட்டு இருந்தார்கள். அதற்கும் கீழே, இந்தியாவுக்கு முன்னால் , தெருக்களை சுத்தம் செய்யும் துடைப்பத்துடன், முகமூடி அணிந்த ஒரு மனிதன், நிற்பதைப் போன்ற ஒரு நிழல் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு  “ஒற்றன் - சமுதாய சாக்கடைகளை அகற்றுகின்ற ஒரு துப்புறவுப் பணியாளன்“ என்கின்ற வாசகம் விளக்கமளித்தது . குறிப்பு : இந்த இணையதளம் முடக்கப்பட்டு விட்டால் , MLA மார்த்தாண்டம் பற்றிய தகவல்களும் இத்தோடே முடங்கிவிடும் -   எச்சரிக்கை என்று சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப் பட்டிருந்தது .

இணையதள வாசிகள் தங்கள் கேள்வி பதில்களை பதிவு செய்ய, தனி SECTION இருந்தது . கேள்விகளுக்கு 7௦ எழுத்துக்கள் (CHARACTERS)

மட்டுமே அனுமதி இருந்தது . இதுவரைக்கும் 18 பேர் தங்களுடைய கேள்விகளை பதிவு செய்திருந்தார்கள். உடனுக்குடன் ஒற்றனிடமிருந்து பதிலும் வந்திருந்தது .        

சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தார் .

இணையதள வாசி பிரியா113  : HELLO யார் நீங்க? எதுக்காக இந்த கடத்தல் சம்பவம் ? PUBLICITY தேடறீங்களா ?

ஒற்றனிடமிருந்து :  நன்றி பிரியா FOR YOUR INTREST ! . மக்களுக்கு எதிராக அநியாயங்களை அரங்கேற்றும் சில அரசியல்வாதிகளின் ஆட்டம் முடிவுக்கு வர வேண்டும் . அதற்காகத் தான் இந்த போராட்டம் . என்னைப் பற்றியும், இந்த கடத்தல் சம்பவத்தையும் பற்றியும் உங்களுக்குத் தெரியத்தான் போகின்றது. அதற்கு சற்று கால அவகாசம் ஆகும் .ஆட்சியாளர்களின் மௌனம் என்று கலைகிறதோ அன்று தான் இந்த விடுகதைக்கான விடை வெளிப்படும் . அதுவரை பொறுமையோடு காத்திருப்போம் . நன்றி .

இணையதள வாசி மனுஷ்யபுத்திரன்057  : எனக்கு என்னமோ, அமைதிப்பூங்காவான  தமிழ் நாட்டிலும், ஐ.எஸ். ஐ.எஸ். (ISIS) தீவிரவாத இயக்கத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு விட்டதாக தோன்றுகிறது .

ஒற்றனிடமிருந்து : மனுஷ்யபுத்திரன் அவர்களே !   மதத்தின் பெயரால் மனிதர்களை கொன்று கொண்டிருக்கும், காட்டு மிராண்டிகளை எங்களோடு ஒப்பிடாதீர்கள் . அவர்களுக்கும் கட்டாயம் ஒரு முடிவு உண்டு என்பதையும் மறந்து விடாதீர்கள் .  அதே போல் ஜனநாயகம் என்கின்ற போர்வையில் இந்த சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கும், சில அரசியல் முதலைகளின் முகத்திரைகள் கிழிக்கப் படவேண்டும் . தமிழ் தான் எங்களின் மதம் .  தமிழ் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் .வீழ்ந்தாலும் வீழ்வோமே தவிர தீவிரவாதத்திற்கு துணை போக மாட்டோம். அவசரப்பட்டு வார்த்தையை விடாதீர்கள் .

இணையதள வாசி சந்திரமோகன்447  : அரசுக்கு எதிரா ஒரு தமிழன் போர்க்கோடியா ? கேற்கவே மிகப்பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கே !

ஒற்றனிடமிருந்து : சந்திரமோகன் ஐயா ! இப்படியே ஆச்சர்யப் பட்டுக்கொண்டேயிருந்தால் ஆயுசுகாலம் முடியும் வரைக்கும் ஆச்சர்யப்பட வேண்டியதுதான் . இது ஒன்றும் பெருமைக்கான போராட்டம் அல்ல, எங்களது உரிமைக்கான போராட்டம் . நமது நாட்டில் ஜனநாயகம் என்றைக்கோ , கறை படர்ந்து குழி தோண்டி புதைக்கப் பட்டு விட்டது . அதைத் தோண்டியெடுத்து, கறையை அகற்றும் முயற்சியில் தான், நாங்கள் துடைப்பத்துடன் இன்று புறப்பட்டிருக்கின்றோம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.