(Reading time: 21 - 41 minutes)

கண ணுல் நீர் கோர்த்திருக்க சாய்ந்துட்டாளாம்’

இப்படி ஆங்காங்கே பலர் பேசிக்கொண்டிருக்க அந்த வீட்டின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது.அதிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆண்மகன் அவள் காலடியில் விழுந்தான்.

‘அம்மா அம்மா அம்மா’

வேறேதும் சொல்ல முடியாதவனாய் இதையே சொல்லிக்கொண்டிருந்தான்.பக்கத்திலிருந்த ராஜசேகரை அணைத்துக்கொண்டு அழுதான்.துக்கம் அடக்கி வைத்துக்கொண்டிருந்த அவர்

“கேசவா அம்மா போயிட்டா டா”என்று ஓவென கதறினார்.அவரை அணைத்தபடி இவன் கதற அமைதியாய் இருந்த வீடு சற்று ஆட்டம் கண்டது.அத்தனை பேரும் அடக்கி வைத்திருந்த சோகத்தை கண்ணீரில் கரைத்துக்கொண்டிருந்தனர்.நேரமும் கரைந்தது.

சற்று சுதாரித்துக்கொண்டு கேசவன் வாசலில் வந்தான்.திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர்களை பார்த்து

“இப்ப மேற்கொண்டு என்ன பண்ணணும் எனக்கு இதெல்லாம் தெரியாது நீங்க உதவ் பண்ணணும்”

“கேசவா காமாட்சி எங்க உடன்பிறந்தா மாதிரி தான்.நாங்க பார்த்துக்கறோம்.அவ பிள்ளை பொண்ணு வரட்டும்அப்புறம் தான் எதுவும்.இப்போதைக்கு அவா வர நாளை ஆகும் அதுவரைக்கும் ஜஸ்பாக்ஸ் ஏற்பாடு பண்ணணும்.அது நீ கவனி”

சரி என்று தலையாட்டிவிட்டு சென்றான்.அவனை வத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அவர்கள்

“கொடுத்துவச்சவன் கேசவன்.காமாட்சி கூட நேத்து இராத்திரி கூட பேசிட்டு தான் போயிருக்கான்.அவ பசங்களுக்கு கூட அந்த பாக்யம் இல்ல”

“இவன் யாரு அவா புள்ள இல்லையா?”அந்த கூட்டத்தில் ஒரு புதியவர்.

“இவன் இராஜசேகர் அப்பாவோட இளையதாரத்து பேரன்.இவன் அப்பா அம்மா இவன் குழந்தையிலேயே போயிட்டா.இப்படி ஒரு சித்தி ஒரு உறவு இருக்கிறதே இராஜசேகரேக்கு கூட தெரியாது.அவ்ர அப்பா காலமாகும் போது காமாட்சி கிட்ட விஷயம் சொல்லி அவனை பார்த்துக்க சொல்லியிருக்கார்.அவர் போன நேரம் இவன் பாட்டியும் போயிட்டா.காமாட்சி தான் கூட்டிண்டு வந்து வளர்த்தா.இப்போ இவனும் தனி மரம் தான் பாவம்”

இப்படிபலரும் பலவாறு பலவற்றையும் பேசிக்கொண்டிருக்க அந்த ஊர் மக்களை தங்களால் இயன்ற உதவிகளை செய்துக்கொண்டிருந்தனர்.இரவு நீண்டு காலை விடியும் வரை இராஜசேகரை தேற்றி உறுதுணையாக இருந்தனர்.இப்படி ஒரு அன்பு பார்க்கும் போதுஅந்த அம்மாளின் நல்ல குணமும் அவள் காட்டிய அன்பும் நமக்கு நன்றாய் விளங்குகிறது.காலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.