(Reading time: 21 - 41 minutes)

என்னை வளர்தது விட்டாங்க.மனுஷங்களுக்குள்ள வேத்துமையே பார்க்க மாட்டாங்க.ஞாயித்துகிழமை ஆனா என் வீடு வந்துபேசிட்டுபோவாங்க.என்பொண்ண அவங்கதான் வளர்த்தாங்ஙன்னு சொல்லனும்.அவ சீமந்தம் காப்பு எல்லாம் அவங்க தான்நட்த்தி கொடுத்தாங்க.என் பொண்ணு கூட அம்மான்னு தான்சொல்லும்”

இப்படி அண்ணாச்சியும்பொன்னம்மாளும் கதைகள் பல சொல்ல ஶ்ரீயும் மாதுவும் அவர்கள் அம்மா அவர்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் புரிந்தது.ஏனோ தன் சொந்த ஊரில் இருக்கிறாள் என்று தான்நினைத்திருந்தார்கள்.கடை தாண்டி செல்ல எதிர்பட்டாரபோஸ்ட்மேன்

“தம்பீங்களா…இப்படி ஆகிடுச்சே.முன்னடி நாள் கூட பார்த்தேன்.அவங்க கையால மோர் கூடவாங்கிகுடிச்சேன்.மனசு தாங்கலை பா”அவர்பங்கிற்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.பள்ளி முதல் தங்கள் வீடு அடைவதற்குள் கிட்டதட்ட பத்து பதினைந்து பேர் பார்த்து அம்மாகதௌகள் கேட்டுவிட்டனர்.அதில் நெகிழ்ந்தும்போயிருந்தார்கள்.அதில் ஒருமூதாட்டியின் பேச்சு மட்டும் ஶ்ரீதரின் நெஞ்சைநெருடியது.

“காமாச்சி புள்ளைங்க தானே.எங்கடாபோனீங்க அவ உயிர் போகும் போது கூட இருந்திருக்க வேண்டாமா…காலேஜீ போது அடிக்கடி வந்தீங்க.வேலை ஆனதும் குறௌஞ்சது.அயல் நாடு போனதும் அவ்வளவு தான்.ஆனா அவ குறை சொன்னதே இல்ல.ஏன்டீநீயாவது போகக்கூடாதான்னா அவங்க பிழைப்பு அங்க என் பிழைப்பு இங்கன்னு சிரிச்சிப்பா.உங்க அப்பன அப்படிதாங்குவா.ஊருக்கு ஒண்ணுஅனா முதல்ல நிற்பா.ஏதோ கேசவன் கொடுத்து வச்சிருக்கான்.அவ வயத்துல் பிறக்காட்டியும் அம்மா அம்மான்னு சுத்திடிருப்பான்.அவ தும்பினா ஓடி வருவான்.அவ்வளவு ஆசை அவ மேல.அவளுக்கும்தான்.ஏதோ வேலை மாத்தல் நான் போகமாட்டேன்னான்.இவ தான்அனுப்பி வச்ச.அவனை அனுப்பிட்டு அவ போயிட்டா.விதி.புள்ளைக்கு புள்ளையா கேசவன் கூட பக்கத்தில் இல்ல”

அந்த கிழவியின் புலம்பல் ஓய்வதாயில்லை.தன் அம்மா கேசவன் மீது பாசமும் அன்பும் நெருக்கமும் ஶ்ரீதருக்கு சற்று எரிச்சலும் பொறாமையும் தந்தது.வீடு நோக்கி விரைந்தார்கள்.அம்மாவின் நாற்காலியில் அப்பா உட்கார்ந்திருக்க கேசவன் அவர் காலில் களிம்பு தடவிக்கொணண்டிருந்தான்.இந்த காட்சி ஶ்ரீதருக்கு மேலும் எரிச்சல் தந்தது.

“எங்கப்பா இவ்வளவு நேரம்.போய் சாப்பிடுங்க”

அவருக்கு முகம் கூட காட்டாமல் முகம் சுளித்துக்கொண்டு உள்ளே சென்றான் ஶ்ரீ.கேசவனுக்கு ஏதோ புரிந்தது.

சூரியன் உறஙகப போகும் நேரம் திண்ணையில் அமர்ந்திருந்தான் கேசவன்.வாசல் பக்கம் வந்த ஶ்ரீ மாது இருவரையும் நிறுத்தி

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.