பிடிக்கலை..இந்தகலர் வேண்டாம் வேறபுடவை பாரு.புது செருப்பு தான் வாங்கிக்கோயேன்…இந்தா ஸ்கூல் ல ஒரு பையனுக்கு பிறந்தநாள் சாக்லேட் கொடுத்தான் உனக்கும் ஒன்னு…அபப்பா….ஶ்ரீ நீ என் அப்பா தான்.சில சமயம் நீ என் மகனா நான் உன் மகளா மறந்திடுவேன்.இராத்திரி கதை கேட்டு என்னை அனௌச்சு படுக்கும் போது தான் நீ என் மகனா தெரியுவா.
நீ என் கிட்ட பேச விரும்பாத ஒரு விஷயம் கேசவன் தான்.நீ எட்டாவது படிக்கும் போது அவன் வந்தான்
மாதுவும் கோதையும் அம்மா ன்னு கூப்பிட்டா வராத கோபம் கேசவன் கிட்ட ஏன் பா வந்ததது.நாளாக சரியாயிடும்னு இருந்தேன்.இன்று வரைமாறலையே கண்ணா.அவன் கிட்ட பழக கூட மறுக்கற.பழகு கண்ணா .குணம் புரியும்.ஒன்னு புரிஞ்சிக்கோ ஶ்ரீ பாசம் அன்பு எல்லாம் பங்குபோட வளரும்.அவன் கிட்ட பாசமிருந்தா உன் மீது இல்லன்னு இல்ல பா.
ஶ்ரீ நீ உன் வாழ்க்கையில் எவ்வளவு பொறுப்புகள் சுமக்கற தெரியும் பா.அதனால உனக்கு வர அழுத்தங்கள் புரியும்பா.ஆனால் மற்றவர்களுக்காக வாழறதுல உன் சுயம் இழக்கக்கூடாது.வாழ்க்கை ஒரு முறைதான்.நாளை விடியல நமக்கு சொந்தமில்லைஅந்த ஒரு சிந்தனை யோடபயணப்படனும் ஶ்ரீ.கோபமோ பாசமோ அன்போ எதுவாயிருந்தாலும் நம்ம உற்றவங்ககிட்டயாவது உடனுக்குடன கொட்டனும்.அதை சுமந்து பயணப்படக்கூடாது.
உன் பாதை உன் பயணம் மேல சந்தேகம் வரக்கூடாது.ஆறு போல ஓடிகிட்டே இருக்கனும்.பொதுவா ப்ரசவ வைராக்கியம் மரண வைராக்கியம் சொல்லுவாங்க.ஒரு வேளை நாளை நான் இல்லைனா இந்த வைராக்கியம் உனக்கு நிரந்தமா இருக்கனும்.நிலையில்லா வாழ்க்கை ஶ்ரீ.நிலையானதை தேடாதே அதுக்காக தேங்காத.மாற்றம் ஏற்றுகிட்டு ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து பயணப்பட்டுகிட்டே இரு.இது போல பல நாம பேசியிருக்கோம் .இப்போ சொல்லனும்னு தணிச்சு.
ஶ்ரீ கண்ணா கால ஓட்த்தில சில உறவுகள் இடையில் பிரிவு வரலாம் ஆனால் அது பிளவு ஆகாம பார்த்துக்கனும்.இனி மாது கோதை கேசவன் அப்பா உன் பொறுப்பு ஶ்ரீ.எனக்உ நீ அப்பாவா இருந்த அது போல இவஙக்களும் உன் பொறுப்பு.மிகப்பெரிய சுமை தான்.ஆனால் என் ஶ்ரீ சுமக்க வல்லவன் தான்.ஆயிரமாயிரம் முத்தங்களுடன்.
உன் அன்ப மகள்-அம்மா
வெகுநேரம் அம்மாவின் கடிதத்தை படித்துக்கொண்டிருந்தவன்….அதை அணைத்துக்கொண்டு அறௌவிட்டு வெளியே வந்தான். அவனிடத்தில் ஏதோ ஒரு தெளிவும் கம்பீரமும் கண்டனர் அனைவரும்.விடிவெள்ளி முளைத்து சூரியன் மெல்ல தன் கிரணக்கைகளை விரித்தது.சில உறவுகளின் இழப்பில் தான் பல ஞானம் பிறக்கிறது. இது தான் அவன் தீர்பபு போலும்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.