(Reading time: 21 - 41 minutes)

நிமிஷம் அஞ்சே நிமிஷம் என்ன சொல்ல வரான்னு கேட்டிருக்லாம் பா..எனக்கு புத்தி இல்லாம போச்சு.இந்த விஞ்ஞான யுகத்தில் யாரையும் எப்பவேணா தொடர்ப்பு கொள்ளலாம்ன்னு நினைச்சேன்.இப்போ போச சே பா…திரும்ப கிடைக்காத நிமிஷம்.என்ன செய்வேன் பா.என்ன சொல்ல வந்தாளோ..தாங்க முடியலை பா”விம்மி விம்மி அழுதான்.இப்போது அவன் அப்பாவால் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை. அவனின் வலி அவரையும் இரணப்படுத்தியது.

அவசரமாக மாடியேறி வந்தாள் ஶ்ரீயின் மனைவி

“ஶ்ரீஶ்ரீ”

அவள் வரும் சத்தம் கேட்டு கண்களை துடைத்து கொண்டான் ஶ்ரீ.

“என்ன அவசரம் இப்போ…பார்த்து வா”

“ஶ்ரீ மாது கடிதத்துல இந்த சாவி இருந்ததாம்.விலைமதிப்பில்லாத என் சொத்து ன்னு எழுதியிருந்ததாம்.உங்களுக்கு கொடுக்க சொல்லி.கூடவே எனக்கும் அவளுக்கும் கூடகடிதம் இருந்தது.நிச்சயமா உங்களுக்கும் இருக்கும் பா”

சாவியை வாங்கியவன் அவள் சொல்வதை கேட்டதும் சற்று எரிச்சல் தான் அடௌந்தான்.அந்த சாவி ஏதோ சொத்தின் சாவி என்றெண்ணியவன்”.சொத்துக்கு தான் நானா..எதுவும் தேவையில்லை” என்று அதை தரையில் எரிந்தான்.

குனிந்து எடுத்தார் அப்பா.மெல்ல சிரித்து கொண்டார்.”ஶ்ரீ நிதானம்.இது சொத்து சாவி எல்லாம் இல்ல.அம்மாவோட மரப்பெட்டி சாவி.எங்க கல்யாணத்தின் போது அவங்க அப்பா கொடுத்தது.நீ போயி பாரு..உண்மை விளங்கும்”

சாவியை எடுத்துக்கொண்டு பூஜையறை நோக்கி ஓடினான்.ஓரத்தில் “காமாட்சி இராஜசேகர்”என்று பொறிக்கப்பட்ட மரப்பெட்டி இருந்தது.இதயம் படபடக்க சாவியை நுழைத்தான்.மெல்ல திறந்தான்.அங்கு காந்திருப்பது அவளின் இதயம் அல்லவா.

திறந்த பெட்டியில் அவன் கண்டது அவன் சிறுவயதில் உபயோகப்படுத்திய பொம்மைக்கள்..கிலுகிலுப்பை குட்டி சட்டை பாலாடை தூலிகட்டை எழுத்துபலகை பென்சில் கால் தண்டை..கூடவே அவன் என்றோ அனுப்பிய ஒரு ஃபோட்டோ.உணர்ச்சிகளின் மோதலில் அழ முடியாமல் சிரிக்க முடியாமல் தவித்தான் ஶ்ரீ.அவன் கண்கள் கடிதம் தேடியது.அவனுக்கு கிடைத்து ஒரு டைரி.அதன் மேல் அப்பாவுக்கு என்றிருந்தது. அதை பிரிப்பதா படிப்பதா என்று சற று தயங்கினான்.ஆனாலும் தனக்கானது என்று படிக்கத் தொடங்கினான்.

“இன்று என் ஶ்ரீதருக்கு இரணடாவது பிறந்த நாள்.என் வாழ்வு நிறைக்க வந்தவன் ஶ்ரீ”

மேலும் புரட்டினான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.