(Reading time: 21 - 41 minutes)

சூரியன் கூட இன்று மந்தமாய்ததான் உதித்தான்.வானம் கூட தன்பங்கிற்கே ஒண்டிரண்டு தூரல் போட்டு தன் சோகம் காண்பித்தது.அடுத்தடுத்த மணித்துளிகளில் அந்த வீட்டில் கார்கள் வந்து நிற்க வீடே சொந தமும் பந்தமுபம் கண்ணீருமாய் நிறைந்தது. வெகுநாட்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாததாலும் இப்போது சந்திக்கும் தருணம் இப்படி அமைந்ததாலும் மேலும் துக்கம் அடைத்தது.

நேற்று என்பது நீண்டுக்கொண்டிருந்தது.இன்றைய தினம் உறவுகள் வருகை தொடங்கி இறுதி யாத்திரை இறுதி சடங்கு வீடு சுத்தம் வாழௌயிலை சாப்பாடு என வெகு விரைவாக ஓடியது.எங்கு இருக்கிறோம் என்று அறியாமல் திருவிழாவில் தொலைந்த சிறுவனாய் விழித்துக்கொண்டிருக்கும் இராஜசேகரை சற்று தேற்றியும் சற்று தனிமை தந்தும் உறௌயாடி அழவைத்து ஆறுதல் கூறியது உறவுகள்.இரண்டு நாட்கள் தந்த கலைப்பில் ஊரே உறங்கிக்கொண்டிருக்க உறங்க மறுத்த சில கண்களீ மட்டும் ஆங்காங்கே கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.

உட்புழுக்கம் தாங்காமல் வெளியே வந்த மூத்த மகன் ஶ்ரீதர் அப்பா திண்ணையில் அமர்ந்து கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார்.பக்கத்தில் துண்டு விரித்து படுத்துக்கொண்டு விம்மிக்கொண்டிருந்த கேசவனை முதுகில் தட்டிக்கொண்டிருந்தார்.இதை பார்த்தும் ஏனோ ஶ்ரீதருக்கு தொண்டை அடைத்தது.ஏதும் பேசாமல் உள்ளே சென்று அம்மாவின் நாற்காலியில் தலைசாய்த்து கொண்டான்.அவள் கை வருடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தான்.அருகில் இருந்த அறையில் தன் தம்பியும் அவன் மனைவியும் பேசுவது நன்றாய் கேட்டது.

“இங்க பாருங்க மாது அப்பா கிட்ட பேசுங்க.அவரை இப்படியே விட்டுட்டு போக முடியாது. நம்ம கூட இல்லைனா அண்ணண் கூடத்தான் அவர் இருக்கனும்”

“இப்ப எப்படிபேச முடியும்.ஶ்ரீதர் கலந்நுக்காம எதுவும் முடிவு பண்ண முடியாது.கேசவன் என்ன பண்ணுவான்”

“அதுக்கில்ல மாது அப்பா லேசுல சம்மதிக்க மாட்டார்.அம்மா புழங்கின வீடு வாசல் நினைவுகள்னு சொல்லுவார்.கொஞ்ச நாளாவது வேறு இடம் மாறினாத்தான் சரியா இருக்கும்.கேசவன் நம்பி அப்பாவ எப்படி விடுறது.”

“நம்ம ஊருக்கு போக நாள் இருக்கு முடிவு பண்ணலாம்.பேசலாம்”

“என்ன பேசப்போறீங்க.சொந்த அண்ணன் சண்டை இல்லை பூசல் இல்லைஏதோ தூரத து சொந்தம் மாதிர் பேசறீங்க பழகறீங்க என்னவோ”

அவள் சொன்ன வார்த்தௌகளின் உண்மை அவனை சுட்டது.அதன் சூடு தாங்காமல் வெளியே வந்தவன் ஶ்ரீதர் அம்மா நாற்காலியில் தலை சாய்ந்திருப்பதை பார்த்தான்.ஃடிச்சென்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.