(Reading time: 21 - 41 minutes)

ஃபோன் பண்ணும்போதுபேசமுடியலை.அதுக்கு நீ உயிரிவிட்டதே பெரிய தண்டனை…இதுல இது வேற ஏன் மா.கேசவன் கூட உன் பிள்ளை நான் இல்லையா..அம்மா ஒரு தரம் ஒரே ஒரு தரம் வா மா..உன் சிரிச்ச முகம் உன் அன்பு ஸ்பரிசம் வேணும் மா..அம்மா ஒரு தரம் என் முன்னால வாமா…அம்மா அம்மா”மனம்விட்டு கதறியவனை ஆறுதலாய் தோள்தொட்டார் இராஜசேகர்.அடக்க முடியா காட்டாற்று வெள்ளமாய் அவன் துக்கம் ஓட

“அப்பா அம்மா வேணும் பா.எங்க பா போனா…எப்போ வருவா பா.கடைக்கு தான் போயிருக்கா சொல்லு பா.கொஞ்ச நேரத்தில் வந்திடுவா இல்லையா மஅம்மா வேணும் பா”

அவள் துக்கம் சற்று வடியும் வரை அவனை அழவிட்டார் அப்பா.ஆறுதலாய் தலை கோதிவிட்டார்.சற்று நிதானம் அடைந்தபின்

“ஏன்பா எனக்கு ஒருவரி கூட எழுதல”

“உனக்கு இல்லைன்னு யார் சொன்னா.கண்ணுக்கு இன்னம் கிடைக்கல அவ்வளவு தான்.நிதானமா இரு கண்ணா”

“இன்னைக்கு வெளியே போயிருந்தோமே…அம்மாவை இந்த ஊரே அப்படி கொண்டாடுறாங்க.நான் எதிர்பார்க்கலை பா.ஆச்சரியம்.”

“ஆமா ஶ்ரீ நீங்க வெளிநாடு போனதும் தனிமை ரொம்ப உணர்ந்தோம்.அதனால உன் அம்மா அதை மாத்திகருத்துக்கு அக்கம்ப்க்கம் மனுஷங்களோட பழக ஆரம்பிச்சா.சில சின்ன பிள்ளைஙகளுக்கு கணக்கு பாட்டு எல்லாம் இலவசமா சொல்லி தர ஆரம்பிச்சா.எப்போதும் ஏதாவது மத்தவங்களுக்கு உதவனும்னு சொல்லிட்டே இருப்பா.தனிமை உணராத படி தன்னை எப்பவும் பிஸியா வச்சிகிட்டா.தேகத்தில் தெம்பு இருக்கும் வரை மனுஷங்களை சேர்த தேகனும்னு சொல்லுவா..எத்தனையோ முறை ஒருத்தரை விட்டு ஒருத்தர் போக நேர்ந்தா வாழ்க்கையை எப்படி நகர்த்தனும்னு பேசியிருக்கோம்.என் மனசை அப்படி பக்குவபடுத்தியிருக்கா.உங்க அம்மா ஒரு தேவதை கண்ணா.அவ தான் என் வாழ்க்கையின் அர்த்தம் ஶ்ரீ”சொல்லம்போது அவர் கண்கள் பனித்தது.

“ஆமா பா ஆனா நான் தான் கொடுத்துவைக்கல பா.அன்னைக்கு இராத்திரி நீங்க அம்மா விஷயம் ஃபோன் பண்றதுக்கு முன்னாடி அம்மா பண்ணா பா”

“அப்படியா….எனக்கு தெரியாதே பா…ஏதோ எழுதிகிட்டிருந்தா….சரின்னு விட்டுட்டேன்.என்ன சொன்னா ஶ்ரீ”

அவன் தொண்டை அடைத்தது.

“எங்க பா நான் பிஸி மா அப்புறம் பண்றேன்னு சொல்லிட்டேன. அவளும் சரின்னு வச்சிட்டா.வேலை முடிஞ்சு பேச நினௌக்கும் போது நீஙக பண்ணீங்க…..அம்மா…ஒரு அஞ்சு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.