(Reading time: 21 - 41 minutes)

அணைத்தேக்கொள்ள மனம் துடித்தது. ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. அவனை பார்க்காதவன் போல் வீட்டின் முற்றத்தில் அமர்ந து கொண்டான் மாது என்கிற மாதவன்.

வெகுநேரம் மௌனம்.சமையல் அறையில் விளக்கு எரிய திடுக்கிட்டனர்.உள்ளிருந்து தண்ணீர் அருந்தியபடி வந்தாள் கோதை.அவர்களின் தஙகை.பார்ப்தற்கு காமாட்சியின் மறு உருவமாய் இருந்தாள்.குணத்திலும் அவளைப்போலத்தான்.அழுததில் முகம் வீங்கியிருக்க ஆனாலும் கண்ணில் நீர் வற்றாமல் அவள பார்க்க பாவமாய் இருந்தது. இருவரும் அவளிடம் சென்றனர்.

“ஶ்ரீ,மாது வாங்க கொஞ்சம் பேசனும்.”குரல் கூட அம்மாப்போல் இருக்க.சிறு குழந்தையாய் அவள் பின்னால் சென றனர்.மூவரும் கொள்ளை கதவு திறந்து அங்கிருந்த கல்லில் அமரந்தனர்.மீண்டும் மௌனம்.மெல்ல கலைத்தான் மாது.

“கோதை ஶ்ரீ ஞாபகம் இருக்கா இங்க உட்கார்ந்து தான் கரும்பு கடிப்போம்.மாம்பழம் திண்போம்.மாங்கொட்டை கூட அதோ அந்த அடுப்பில தான் சுட்டு தருவா அம்மா.எப்படி பார்த்துகிட்டா”சொல்லும் போதே தொண்டை அடைத்தது.

“ஆமா டா மாது நீ என்னை சீண்டினா உன்ன இங்க தான் உச்சி வெயிலில் உட்கார வைப்பா.கூடவே மிட்டாய் வேற கொடுப்பா”இது கோதை.

“எனக்கு மிட்டாய் கொடுப்பான்னு தெரியுமா டீ”

“ஆமா ஆமா கேட்டா அது பாவற்காய் மிட்டாய்ம்பா.கள்ளி!”கண்ணீரும் புன்சிரிப்புமாய் வந்தது.

“ஶ்ரீ உன் ரெக்காட் நோட்டுல இங்க் கொட்டிட்டேன்னு பயந்து இங்க தான் மண்ணுல பொதைச்சேன்.ஆனா நீ விடாம ஆர்க்கியலாகி பண்ணி கண்டுபுடிச்சிட்ட”

“ஆமா மாது ஆனா அது கண்டு பிடிக்க ஒரு வருஷம் ஆச்சு.பயங்கர வாலு டா நீ.எப்படி தான் சமாளிச்சாளோ”செல்லமாய் காது திருகினான் ஶ்ரீ.

விடியவிடிய மூவரும் கதைபேசி சிரித்து அழுது பல விஷயம் பறிமாறி பல விஷயங்களில் இருந்த கருத்து வேறுபாடுகள் கலைந்து இல்லாத ஒரு இடைவெளியை இல்லாமல் கலைத்துக்கொண்டிருந்தனர்.எங்கோ காமாட்சி சிரிப்பதாய் சிறு தூவல் தூவியது.

“விடியப்போகுது கொஞ்சநேரமாவது தூங்கலாம் வாங்க”

“என்ன தூக்கம் சூடா ஒரு காபி தா கோதை”மாது

“அதுக்கென்ன நீ போயி டம்ளர் சுத்தம் பண்ணு ரெடி பண்ணிடறேன்”

“துடுக்குதனம் பாரு போடீ “அவளை காதை திருகி அனுப்பி வைத்துவிட்டு ஶ்ரீயிடம் நெருங்கி வந்தான் மாது.

“மாது நாளைக்கு நம்ம ஊரை சுத்தலாம் வரியா”

“போலாம் டா அண்ணா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.