(Reading time: 16 - 32 minutes)

கேட்காத காதுகள், பார்வையற்ற கண்கள், மூச்சுவிட முடியாத தவிப்பு, நடக்கமுடியாத கால்கள், பசியில்லாத வயிறு, ஒருநாளைக்கு ஒரு டஜன் மாத்திரை, .......எப்படி சார்? இது அதிசயம் இல்லேன்னா, வேறெது சார்?"

 இப்படியெல்லாம் பொதுவாகச் சொன்னால், உங்களுக்கு புரியாது, ஒருநாள், ஒரே ஒருநாள் என்னுடன் இருந்து பாருங்கள்! என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

 இப்போது காலை ஏழு மணி! பால்கனியில் நாற்காலியில் அமர்ந்து, காலை வெயிலில் குளிர்காய்கிறேன்.

 அன்றாட வானவீதி உலா புறப்பட்ட ஆதவனை, அண்ணாந்து பார்த்தேன். அதற்குள்ளாகவே, ஆதவனின் முழு ஒளியும் தகத்தகாயமும் உடலுக்கு இதமாய் இருந்ததோடு, மனதுக்கும் இதமாய் இருந்தது!

 பாரதி இப்படி ஒரு காலையில் பாடியது தானோ, 'தகத்தகாயம் பார்!'?

 அடுப்பிலே கொதிக்கும் பாலை உன்னிப்பாக பார்த்திருக்கிறீர்களோ? ஆதவனின் தகத்தகாயம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது!

 ஏன் தெரியுமா? என்வீட்டில், படுக்கையிலிருந்து முதலில் கண் விழிப்பவன் நான்தான்! முதியவர்களுக்கு உறக்கம் குறைவுதானே!

 எழுந்ததும், பல் துலக்கி, சூடாக காபி குடிப்பதிலே உள்ள ஒரு சுகம் அலாதியானது!

 மற்றவர்களை எதிர்பார்க்காமல், நானே கேஸ் அடுப்பை பற்ற வைத்து, எனக்கு மட்டும் தேவையான பாலை ஒரு சிறிய பாத்திரத்தில் நிரப்பி, அடுப்பின்மீது வைத்துவிட்டு, அது பொங்கி விடாமலிருக்க, அதையே பார்த்துக் கொண்டிருப்பேன்!

 என் ஒருவனுக்காக, பால் குக்கரை உபயோகிப்பதிலே எனக்கு இஷ்டமில்லை!

 அடுப்பில் காயும் பால் சூடு ஏற ஏற, அதன் மேற்பரப்பில் ஏற்படும் ரசாயன மாறுதலை பார்த்து ரசிப்பேன். அந்த அழகை கண்டு களிப்பதற்காகவே விடியற்காலையில் எழுந்துவிடுவேன்.

 இத்தனை ஆண்டுகள், இந்த காட்சியை காண தவறிவிட்டோமே என வருந்துவேன்!

 உடனே, சத்ய சாயி பாபாவின் அறிவுரை ஞாபகத்துக்கு வரும்.

 'நேற்று இதை அனுபவிக்கவில்லையே என இன்று அனுபவிப்பதையும் இழந்துவிடாதே! அந்தந்த நொடியில் வாழ்!'

 உடனே என் மனம் இப்படி நிறைய அறிவுரைகள் சத்ய சாயி பாபா தந்துள்ளதை நினைவு கூறும்!

 'அளவோடு சாப்பிடவேண்டும்! எது அளவு என்றால், இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.