(Reading time: 16 - 32 minutes)

சென்னையில் முதலாளி ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தங்கி நாள் முழுவதும் கடைகளில் பணியாற்றும் கொடுமையை அரசாங்க அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு கடை முதலாளிகளை குழந்தை வேலை தடுப்பு சட்டத்திலிருந்து காப்பாற்றும் கேவலமான நிலை), என எல்லாவற்றையும் பார்த்தவாறே செல்கிறேன்.

 தற்செயலாக பாதையோரமாக ஒரு செருப்பு தைக்கும் கிழவரை பார்த்தேன். எனக்கென்னவோ, அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரிடம் நானாக வலியச் சென்று பேச்சுக் கொடுத்தேன்.

 " பெரியவரே! என் செருப்பு ரெண்டும் இன்னும் எத்தனை நாள் பிய்ந்துபோகாமல் உருப்படியா இருக்கும்னு பார்த்துச் சொல்லு!"

 அவனிடம் என் செருப்புகளை கழற்றிக் கொடுத்தேன்.

 அவன் அதை திருப்பி திருப்பி பார்த்தான்.

 " எதற்கும் இருக்கட்டும், இன்னொரு முறை தையல் போடு! அது சரி, இவ்வளவு காலையிலே, தொழிலுக்கு வந்துட்டியே, இதுவரை யாராவது வந்துபோனாங்களா? ஏதாவது துட்டு கிடைச்சுதா?"

 " ஐயா! நான் தொழில் செய்வது, சாப்பிடுவது, தூங்குவது, எல்லாமே இந்த இடத்திலேதாங்க! காலையிலே யாராவது வந்து வேலை வாங்கிகிட்டு கொடுக்கிற காசிலேதான் அதோ இருக்கிற டீக்கடையிலே டீ குடிப்பேன்......"

 " உன் குடும்பம் உன்னோட இல்லியா?"

 " நான்தாங்க என் குடும்பத்தோட இல்லாம, வெளியே தனியா வந்துட்டேன்........"

 " அடப்பாவி! இந்த தள்ளாத வயசிலே, ஏன்யா அப்படி செஞ்சே? குடும்பத்தோட இருந்தால், உனக்கு வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்குமில்லே?"

 " அந்த எச்சிசோறு வேண்டான்னுதாங்க, தனியா வந்துட்டேன்........."

 " எச்சிசோறா? அப்படின்னா?"

 " ஐயா! நான் கிராமத்திலே நிலத்திலே பாடுபடற கூலித் தொழிலாளியா இருந்தேன். மழை பெய்யாம, தரிசு நிலமானதும், எனக்கு வேலை போயிடுத்து, கிராமத்திலிருந்து குடும்பத்தோட பட்டினத்துக்கு வந்தேன், எதுவும் வேலை கிடைக்காம, ஒவ்வொருத்தரா அவங்க அவங்க வழியா பார்த்துகிட்டு, பிரிஞ்சிட்டோம். நான் இந்த செருப்பு தைக்கும் வேலையை கத்துக்கிட்டு இங்க தங்கிட்டேன், என் பெண்சாதி கோவில்லே சுத்தம் செய்யற வேலை செஞ்சிகிட்டு, கிடச்சதை சாப்பிட்டு காலம் தள்றா....புள்ளைங்க, கெட்ட சகவாசத்திலே அங்கங்கே திருட்டு, பித்தலாட்டம் செய்துகிட்டு, போலீஸ்காரங்கிட்ட அடி வாங்கிகிட்டு திரியறானுவ..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.