(Reading time: 16 - 32 minutes)

 " ஐயா! உங்க மகன் என்னென்னவோ பேசறாரு, கோபமா......"

 " அப்படித்தான் பேசுவேன், முப்பது வருஷமா ஒண்ணா, அண்ணன்-தம்பியா பழகினோம்னு சொல்றீங்களே, அப்ப எப்படி எங்ககிட்ட முன்னாடியே பேசி சம்மதம் வாங்கிக்காம, அக்ரிமெண்ட்லே கையெழுத்துப் போட்டீங்க? சிரிச்சிப் பேசி எங்களுக்கு அல்வா கொடுக்க வந்திருக்கீங்களா? இப்ப நான் சொல்றதை நல்லா கேட்டுக்குங்க, இந்த வீட்டுக்கு நாங்க பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே வாடகை கொடுத்ததுமே, வீடு எங்களுக்கு சட்டப்படி சொந்தமாயிடுத்து! இந்த வீட்டை விற்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! மரியாதையா எழுந்திரிச்சி போங்க! இல்லேன்னா, மரியாதை கெட்டுப் போயிடும், ஆமாம், சொல்லிட்டேன்" என சத்தம் போட்டுவிட்டு உள்ளே போய்விட்டான்.

 வீட்டுக்காரன் என்னைப் பார்த்தபோது, அவர் கண்களில் நீர் தளும்பியது!

 நான் எழுந்து அவரை ஆறுதலாக முதுகில் தடவிக் கொடுத்து, " பயப்படாதீங்க! என் மகனை நான் சமாதானப்படுத்திடறேன், நீங்க இப்ப போயிட்டு அப்புறமா வாங்க!"

 நான் இதை சொல்லி முடிக்குமுன்னே, என் மருமகள் அங்கே கோபமுடன் பிரசன்னமானாள்.

 " மாமா! உங்க பிள்ளை சொன்னதிலே என்ன தப்பு? சட்டப்படி இந்த வீடு நம்முடையது! அந்த ஒரு கோடி ரூபாய் நமக்கு வரவேண்டிய பணம்! இதிலே நீங்க தலையிடாதீங்க! வயசிலே பெரியவரா, ஒழுங்கு மரியாதையை காப்பாத்திகிட்டு உங்க வேலையை பாருங்க! இதப் பாருங்க, வீட்டுச் சொந்தக்காரன்னு சொல்லிக்கிட்டு இனிமே இந்தப் பக்கம் வராதீங்க, நாங்க வாடகையும் தரமாட்டோம், உங்களால் ஆனதை பார்த்துக்குங்க, போங்க!"

 வெளியேறியது, வீட்டுச் சொந்தக்காரன் மட்டுமில்லே, நானும்தான்!

 செருப்பு தைக்கிற கிழவன் எத்தனை உறுதியாக, தீர்க்கதரிசனத்துடன், சொன்னான், தலைமுறை இடைவெளி சிக்கலைப் பற்றி! படிக்காதவனாக இருந்தாலும், மக்களை புரிந்துகொண்டவன்!

 போகிற போக்கிலே என் மருமகள் அந்த வீட்டில் எனக்கென்ன இடம் என்பதை எத்தனை நறுக்கென மனதில் சுருக்கென தைக்கும்படி கூறிவிட்டாள் என்பதை நினைவு கூர்ந்தேன், உடல் தடுமாறியது!

 கீழே விழவிருந்த என்னை தாங்கிப்பிடித்த வீட்டுக்காரன் ஆறுதலாகப் பேசினான்.

 " பரவாயில்லீங்க! நீங்க எனக்காக உங்க பிள்ளையோட சண்டை போட்டு தெருவுக்கு வந்துறாதீங்க!"

 " என்னை ஏற்கெனவே தெருவில் தூக்கி எறிந்துவிட்டாளே, என் மருமகள்!......அது போகட்டும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.