(Reading time: 16 - 32 minutes)

போலிருக்கிறதே என தோன்றும்போது, நிறுத்திவிடவேண்டும்!'

 'சுமைகளை குறைத்து சுகமாக வாழ்வோம்!'

 இப்படி எத்தனையோ!

நாம்தான் நம்முடைய அன்றாட அலுவல்களில் மூழ்கி, நல்ல அறிவுரைகளை கேட்டு மதித்து நடக்க தவறி, துன்பங்களில் உழல்கிறோம்!

 இத்தனை ஆண்டுகள் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதுமையிலேதான் தெளிவாகப் புரிகிறது, எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது என்பதை!

 உலகப்புகழ் விஞானி ஐன்ஸ்டீனை ஒருமுறை ஜே.கிருஷ்ணமூர்த்தி சந்தித்தபோது அவரை கேட்டாராம்:

 'நிறைய ஆராய்ச்சி செய்ததிலிருந்து, நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?'

 ' எனக்குத் தெரியாதவை எவை என்பதுகூட எனக்குத் தெரியாது என்பதை தெரிந்துகொண்டேன்'

 உண்மைதானே! நான் நினைத்துப் பார்க்கிறேன்....

 வெளியுலகை விடுங்கள்! நம் உடலுக்குள்ளேயே என்ன நடக்கிறது, சாப்பிடும் உணவு எப்படி ஜீரணமாகிறது, எத்தனை உறுப்புகள் உள்ளன, அவை என்ன பணிகள் செய்கின்றன? என்று நமக்குத் தெரியுமா?

 அதையும் விடுங்கள்! நம் உடலுக்கு, அதிலுள்ள உறுப்புகளுக்கு தாங்களாகவே செயல்படும் அறிவு உள்ளது என்பதாவது தெரியுமோ? நம் அறிவை சார்ந்து, அவை செயற்படுவதில்லை!

 உதாரணமாக, நம் உடலுக்குள் செயற்படுகிற லட்சக்கணக்கான செல்கள் தங்கள் ஆயுளை தாங்களாகவே முடித்துக் கொள்கின்றனவாம்! குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அவை இறந்துவிடுமாம், அப்படி இறக்காதவைகளினால்தான் நம் உடலில் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தபோது, என் பேரன் நினைவுபடுத்தினான்,

'தாத்தா! வெயில் ஏறுகிறதே, வாக்கிங் போகலையா?' என்று!

 தினமும் காலைவேளையில் வெட்டவெளியில் காற்று உடலை வருட, இரண்டு கிலோமீட்டர் நடப்பது என் வழக்கம்.

 அந்த நேரங்களில் நண்பர்களை சந்தித்து பொது விஷயங்களைப் பற்றி பேசுவோம்.

 'வர வர, அரசியலும் பொதுவாழ்வும் சாக்கடையாகிவிட்டன!.....'

 இந்த டயலாக் இன்று நேற்றல்ல, இருபது ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு வருகிறேன்.

 இப்படி பிறரை விமரிசனம் செய்பவர்களிடம் நியாயமான ஒரு கேள்வியை கேட்டுப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.